செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVoice of MARO (Kayalpatnam)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11020
YUF செயலாளர் S.A.K. முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்களின் கவிதை முகம் சுளிக்க வைத்தது என்று கூறுவோருக்கு :
எமது Voice of MARO சார்பாக வெளியிடப்பட்ட ஒலிநாடாக்களில் ஒன்றான "We Love Ya Rasoolallah" என்ற ஒலிநாடாவில் இடம் பெற்ற "அனைத்தும் படைத்து காத்து ஆளும்" என்ற பாடலுக்கு கவிதை வரிகளை புனைந்தவர் இந்தக் கவிஞர்.
அதில் இடம் பெற்ற கவிதையின் இரண்டு வரிகளை இந்த நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'ஏழை எமது மனதில் படியும் பாவக் கறைகள் நீங்கவே
சீலம் பொதிந்த உனது மறையின் சிறந்த ஞானம் புகட்டுவாய்'
'மருண்டு விழிக்கும் மரணப் பொழுதில் மணக்கும் கலிமா நாவிலே
உருண்டு முழங்க நினைவில் துலங்க உனது உதவி நல்குவாய்'
இத்தகைய சிறப்பிற்குரிய கவிஞரை நாம் இனம் காணத் தெரியாமல் இருப்பது தான் நம்மிடையே உள்ள குறைபாடு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross