Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர... posted byCNash (Makkah )[16 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11049
இது ஒரு வழிப்பாதை!! இங்கே கேள்விகள் மட்டும் பெற்றுக்கொள்ளப்படும், பதில்களும் விளக்கங்களுக்கும் ஒரு வார்த்தையில் அடங்கிவிடும்.. அந்த தாரக மந்திரம்தான் ஒற்றுமை...அனைவரில் வாயையும் ஒருங்கே அடைக்கும் ஒரே ஆயுதம் ஒற்றுமை..........இங்கே கேள்வி கேட்பவர்கள் குழப்பவாதிகள் பிரிவினைவாதிகள்...இன்னும் சிலரது அழகிய மொழிகளில் சொன்னால் நவீன ஷைத்தான்கள்!!
ஒற்றுமையை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து பக்கம்பக்கமா ஊர் ஒற்றுமையை பற்றி எங்களுக்கெல்லாம் பாடம் நடத்துபவர்களே!!! உங்களிடம் நாங்கள் எதிர்பார்பது வாயளவில் உள்ள ஒற்றுமையை அல்ல!! வாழ்க்கை ஒற்றுமையை!!
இந்த தேர்தல் ஒற்றுமைக்கு ஐக்கியமாகி இருக்கும் அரசியல்வாதிகள் முதல் ஆன்மீகவாதிகள் வரை தங்கள் மனசாட்சியை தட்டி சொல்லட்டும் இந்த ஊரின் ஐக்கியம்
ஏற்பட தங்கள் சார்திருக்கும் கட்சியின் கொள்கைகளில் வளைந்து கொடுப்பார்களா? அப்படி என்றால் சென்ற தேர்தலில் பேரவையின் திமுக நிலைப்பாட்டுக்கு மதித்து ஊர் நன்மைகாக(?) இன்றைக்கு மேடையில் முழங்கிய மற்ற கட்சியினர் தாரளமாக விட்டு கொடுத்தார்களா?
சுனாமி வீட்டு ஒதுக்கீடு பிரச்சனையில் ஊரே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது அன்று ஆண்ட திமுக கட்சியின் ஒரு நிர்வாகியையும் காணோமே!! (ஏதோ காயல் மௌலான தென்பட்டார் !!!திமுக பிரமுகர் என்று சொல்லபட்டார்..அவர் திமுக என்று அப்போது தான் தெரிந்தது) ஏன் ஆளும் உங்கள் கட்சிக்கு எதிரா ஆர்பாட்டம் பண்ணினால் உங்கள் தலைமை உங்களை ஏற்காது!! ஆனால் அம்னேசிய நோய் உள்ள நாங்கள் அதை மறந்து நீங்கள் மேடையில் பேசுவதற்கு நாரே தக்பீர் போடணும்!!!
ஒற்றுமை பேசும் ஆன்மீகவாதிகளே நீங்கள் சொல்லும் ஒற்றுமையை அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து ஆரம்பிப்போமா? புதிதாக ஆரம்பிக்க பட்ட காயிதே மில்லத் தெரு பள்ளி இல் இருந்து, மொஹ்தூம் பள்ளி கோமான் தெரு பள்ளி ..KMT பள்ளி , மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி தாயும் பள்ளி, இப்படி பல பள்ளிகளின் எல்ல கொள்கை காரர்களும் அழகிய முறையில் தொழுது எந்த ஒரு பங்கமும் இல்லாமல் நீங்கள் வெறும் வாயால் பேசும் ஒற்றுமையை நாங்கள் நடைமுறையில் கண்டு வருகிறோமே!! ஓட்டுக்கு மட்டும் தான் ஒற்றுமையா?
அன்று உங்களுக்காக ஒற்றுமை பற்றி பேசி ICU இல் இருக்கும் உங்கள் அணியை காப்பாற்ற அவசரமாக ஒரு டாக்டர் வரவழைக்கபட்டாரே... அவர் நடத்தும் மானுட வசந்தம் நிகழ்ச்சி நடத்தவாவது உங்கள் மஜ்லிஸ்களில் இடம் கிடைக்குமா!! அவராவது தொழ முடியுமா உங்கள் பகுதிகளில்!!! என்ன ஒரு ஒற்றுமை பற்றி பாடம்.
ஒற்றுமை என்ற பெட்ரோலை உங்கள் பஸ்க்கு முன்னாள் சும்மா எழுதி வைத்துவிட்டால் மட்டும் உங்கள் வண்டி ஒடபோவதில்லை ....நீங்கள் சவாரி செய்யும் பேரவை என்ற பஸ்க்கு வாங்கி ஊற்றுங்கள்..அப்போது தான் காயல்பட்டினம் வீதிகளில் அது ஓடத்துவங்கும்!!! இல்லை எத்தனை பேரு தள்ளினாலும் ஒடபோவதில்லை ...உருளத்தான் செய்யும்...!
வார்தைக்கு வார்த்தை ஐக்கியம் யோக்கியம் என்றல்லாம் பேசும் சகோதரர்களே வார்த்தையில் மட்டும் ஐக்கியம் வேண்டாம் வாழ்கையில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்!! அன்று உங்கள் மேடையில் முழங்கிய திருவாளர் காயல் மௌலானா அவர்கள் சொன்னது போல ஐக்கியம் ஒற்றுமை என்று பேப்பரில் எழுதி வைத்து நாக்கினால் சுவைக்காது!! நடை முறைக்கு கொண்டு வாருங்கள்!!
ஒவ்வாரு கருத்திலும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் என்று வார்த்தையால் சொன்னீர்களே!! நீங்க சொல்லும் கயிறு ஒன்றும் பேரவையில் மட்டும் விற்கும் கயிறு அல்ல விலை கொடுத்து வாங்க, நீங்கள் கை காட்டும் நபர்கள் மட்டும் அதற்க்கு SOLE PROPRIETOR ஒன்றும் இல்லை!! மாறாக அது அல்லாஹ்வின் கயிறு (ஹப்ளில்லாஹ்) ...அது தான் அவன் தந்த சத்திய வேதம் அதை பற்றி படித்து கொள்ளுகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross