விளக்கம் - நேரடி விளக்கம் posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[17 October 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11126
Comment Ref.: 10882
"""கோவத்தின் வெளிப்பாடாக நான் பிறயோகித்த வார்த்தைகளை எண்ணி வருந்துகிறேன்.. """
------ (இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134).
உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்னவென்று நாம் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவேதான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப்புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.
"""எனினும், இது உண்மையில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.."""
------- கொடுத்தவர் உறுதியாக கொடுத்தேன் என்கிறார். வாங்கியவர்களும் உறுதியாக வாங்கினோம் என்கிறார்கள். ஆனால் சம்பந்தப்படாத நாமோ இது உறுதியாக உண்மையில்லை என்கிறோம். ஒரு உண்மையான முஅமினுக்கு அடையாளம் மற்ற முஅமீன்கள் மீது நல்லெண்ணம் வைப்பதுதான். சகோதரி மிஸ்ரியா உடைய கணவர் அஹமது சலாஹுத்தீன் (Mobile No. +91-9443002259)அவர்களை நான் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டதில் அவர் பத்து வருடங்களுக்கு முன்பு தானே நேரில் சென்று மனு கொடுத்ததாக சொல்கிறார். இதற்கு பின்பும் யாரை நம்புவது என்று நடுநிலையாளர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
"""பேரவையின் அறிக்கையிலோ, இன்னபிற வெளியீடுகளிலோ இது சொல்லப்படவில்லை. எனக்கு தெரிந்தவரையில் அன்று யாரும் சகோதரி வஹிதா லாத்தா உட்பட யாரும் விருப்பமனு தரவில்லை - மனுவும் இல்லை முச்சரிக்கையுமில்லை (நாளை இதை உறுதி செய்து இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்)"""
------ ஒரு விஷயம் சொல்லப்படவில்லை என்பதற்காக அந்த விஷயமே நடைபெறவில்லை என்று எந்த ஒரு சராசரி அறிவுள்ள மனிதனும் விளங்க மாட்டான்.
மேலே ""உறுதியாக நம்புகிறேன்"" - ஆனால் இங்கே ""எனக்கு தெரிந்தவரையில் - நாளை இதை உறுதி செய்து"". இதற்கு பெயர்தான் முரண்பாடு.
"""ஆபிதாவை கட்டுப்படாதவள் என சித்தரிக்கும் முயற்சியில் ஒரு பொய்யை, அநியாயமாக சகோதரியின் பெயரில் மீண்டும் மீண்டும் வெளியிட்டு தங்கள் முகங்களை காக்கத்துக்கொள்வதற்காக நரகிலும் தள்ள துணிந்தவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன் என்பது மீண்டும் அதை படித்தால் புரியும். """
-------- ஒரு வேளை அவர்கள் உண்மையாளர்களாக இருந்து நாம் அவர்களை பொய்யாக்கி இருந்தால் - நம்முடைய நிலை என்ன? நாமும் அதே நரகிற்கு சொந்தக்காரர்கள்தானே.
எனவே எழுதும் முன்பு எதிலும் ஒரு நிதானம், நடு நிலைமை, நேர்மை இருக்க வேண்டும்.
"""நான் நம்புவது தவறாக இருந்தால், அதற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுகவும் தயங்க மாட்டேன்."""
------- நீங்கள் உங்கள் கூற்றுப்படி இந்நேரம் உறுதி செய்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மனு கொடுத்தவரின் மொபைல் நம்பரையும் தெரிவித்துள்ளேன். நீங்கள் மூன்றாவது நபரிடம் விசாரிப்பதைக் காட்டிலும் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக கேளுங்கள். அவரது வாக்கில் நம்பிக்கை இருந்தால் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் வருத்தத்தையாவது தெரிவியுங்கள். அவரை நம்பவில்லை என்றால் மீண்டும் உங்கள் கருத்துக்களை வழமை போல் தெரிவியுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross