Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர... posted byCNash (Makkah )[17 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11164
மிக தெளிவானா விளக்கம்..அதான் நல்ல புரிந்துவிட்டு தெளிவா இருக்கோமே எதற்கு மேலும் மேலும் விளக்கம் எல்லாம் கொடுத்து களைத்து போகணும்.. அதன் ஏற்கனவே வீடியோ இருக்கு போட்டு பார்த்து தெரிஞ்சிக்கோ என்று சொல்லிட்டீங்களே அப்புறம் எதுக்கு இதெல்லாம்? சீக்கிரம் அதையாவது வெளியிடுங்க அப்புறம் திருட்டு VCD வந்து விட போது!!!
அவர்கள்தான் இளைஞர்கள் குறுகிய நோக்கில் சிந்திப்பவர்கள், விவேகம் இல்லாதவர்கள் இப்படி ஒரு நோட்டீஸ் அடிச்சி புறநகர் பகுதி எல்லாம் யோசனை இல்லாமல் ஓட்டுக்காக விநியோகித்து விட்டார்கள்!! நம் பேரவையில் இருப்பவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் வயதில் மற்றும் அல்ல ஆற்றலும் மூத்தவர்கள் தானே!! தொலை நோக்கும் பார்வையில் சிந்திக்கும் நீங்கள்
1 . அன்றைக்கு ஓட்டுக்காக உங்கள் மேடையில் நமக்கு எந்த வேட்டு வைக்க காத்து கொண்டிற்க்கும் ...அந்த சாச்சாக்களை எல்லாம் மேடை ஏற்றி....ஒருவர் நான் கொம்பு துறை என்ற ஊரில் (???) இருந்து வந்திருக்கிறேன்..எங்கள் ஊரு வோட்டு உங்களுக்கு தான் என்றும், மற்றொருவர் சிங்கிதுரை என்ற ஊரில் (!!!) இருந்து வந்திர்க்கிறோம் என்றும், நீங்கள் எங்கள் ஊர் பங்குத்தந்தையை சந்தித்து ஆதரவு கேட்டீர்கள் ஆகையால் ஊர் மக்கள் அனைவரின் ஓட்டும் எங்கள் ஓட்டும் உங்களுக்கு தான் என்று திருவாய் மலர்தர்களே!! அப்போது பெரியோர்கள் நீங்கள் காட்டிய மூலம் மௌனம் சிங்கிதுரைக்கும் கொம்புதுரைக்கும் ஒரு தனி ஓர் அந்தஸ்து கொடுத்தது போல் ஆகி விட்டதே!! அது தூரநோக்கா இல்லை வெறும் 1000 ஓட்டை மட்டும் கவரும் நோக்கா!!
2 அதே மேடையில் நமதூர் அரிசியல்வாதிகளை கொண்டு போட்டி வேட்பாளரை யாரையும் மதிக்காதவர், அம்மா கழுத்தை பிடித்து தள்ளுவார் என்றும், உங்களுக்கு எதிரான கவுன்சிலர் வேட்பாளர் சிலரை மனதில் வைத்து படிக்காதவர் நிக்குறான் என்றெல்லாம் இரு சாச்சாக்கள் முன்னிலையில் பேசியதெல்லாம் வரவேற்கதக்கதா!! மேலும் பேசிய சிலர் இந்த இணையதளத்தை பற்றியும் , அதில் வரும் செய்தி கருத்துக்களை எல்லாம் பற்றி எதோ மொட்டைகடிதம் போல விமர்சனம் செய்தது சரியா?
3 . வேட்பாளர் தேர்வு பற்றி விளக்கம் கொடுக்கிறேன் என்ற பேரில்.... உம்மா - மகள் தேர்வு ராஜதந்திரம், ராணி தந்திரம் என்பதையெல்லாம் பேசி, நமக்குள் இருக்கும் பிரச்சனையை பங்குதந்தை முன்பு பங்கு போட்டது தான் தூர நோக்கமா? இன்னும் ஒரு படி மேலே பொய் வஹீதா அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து போட்டியிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கேட்டது!! விவேகமான செயலா!! தேர்தல் இன்று வரும் நாளை போகும் !!! உங்கள் கருத்துகளே நாளை உங்களுக்கு எதிராய் வாராதா??
4 . எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் ஒருவர் மத்திய காயல் மக்கள் 10 நிமிடத்தில் ஒட்டு போட்டு பெட்டியை நிறைத்து ஜனநாயக கடமை ஆற்றுவார்கள் என்றல்லாம் ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்தது அறிவார்த்த செயலா, விவேகமான செயலா!! இந்த சாச்சாமார்கள் முதல் உளவுத்துறை சாச்சாமார்கள் வரை இதை குறிபெடுத்து தக்க சமயத்தில் நமக்கு எதிராய் ஏவ மாட்டார்களா !! இதை கூட பெரியோர்கள் ஏன் கண்டிக்க வில்லை!! இதை எல்லாம் உன் அரசியல் மேடையில் வைத்து கொள் என்று ஏன் அறிவுறுத்த வில்லை!!
5 . அன்று------ பேரவை அரசியலிலும், ஆன்மீகத்திலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. என்று தீர்மானம் போட்டீர்கள்!!
இன்று ஒருவர் அதே மேடையில் பேசுகிறார் ஐக்கியப் பேரவையின் அரசியல் தந்திரம் தனித்துவம் வாய்ந்தது என்று என்ன இது தான் முரண்பாட்டின் மொத்த உருவமா?
5 . உங்கள் அரசியலை பார்த்து உண்மையான அரசியல் வாதிகள் எல்லாம் நடுங்கி போய் உள்ளார்கள் !!
ஆகவே அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும் எங்கள் கோட்பாடுகளில் பேரவை தலையிட வேண்டாம் என்று தீர்மானம் போடும் நிலையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கின்றதை நடுநிலையில் உள்ள அனைவரும் கண்டுகொண்டே இருக்கிறார்கள்!!
வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross