Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ... posted byISMAIL(KTM) (Hong Kong)[18 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 11244
அனைவருமே பெரியவர்களை மதிக்க வேண்டும் பெரியவர்களை மதிக்க வேண்டும் என அரட்டிக் கொள்கிறார்கள்.
அப்பெரியவர்கள் சிறியவர்களை அவமானப்படுத்துவது மட்டும் தப்பில்லையாம். தப்புதான் என்று சொல்பவர்களுக்கு மட்டும் ஒரு வேண்டுகோள்.
சகோதரி ஆபிதா அவர்கள் வாக்கு சேகரிக்க தெருத் தெருவாய் வீடு வீடாய் அழைந்த போது ஒரு பணக்கார பெரியவர் ஆபிதா அவர்களை மிகவும் அவமானப் படுத்தி இழிவாகப் பேசியிருக்கிறார்.
அப்பெரியவர் மிகவும் சிறுமையாக நடந்து கொண்டார். 15 வயது பாலகன் போல சிறுபிள்ளைத்தனமாக நடப்பது தான் இவர் போன்ற பெரிவர்களின் நற்குணமாம்.
ஆனால் சகோதரி ஆபிதாவோ அதை ஒரு பெரிய விஷயாமாக பொருட்படுத்தாமல் ஒரு அனுபவமிக்க முதியவர் போல நடந்து கொண்டார்.
அன்பான காயல் வாசிகளே, இது போன்ற நிலையில் பெரியவர்கள் நடக்காமல் இருக்க தயவு செய்து பெரியவர்களை அறிவுறுத்துங்கள்.
பெரியவர்களை மதிக்க வேண்டும் என ஐ.பே. ஆதரவாளர்கள் வெற்று வேதாந்தம் பேசிக்கொண்டு திரியாமல் நடக்க வேண்டிய நல்லவற்றைப் பற்றிப் பேசுங்கள்.
அல்லாஹ்வின் நாட்டத்தால், மக்கள் யாரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து மக்களின் தீர்ப்பை மனதார மதித்து ஏற்றுக்கொள்வோம்.
இப்படி சொல்வதால் தோல்வி பயம் என எண்ணிக் கொள்பவர்களுக்கு சொல்லிக்கொள்வது யாதெனில்,
எங்கள் உயிர் உள்ளவரை ஊர் நலனைக் கேள்விக்குறி யாக்குபவர்களுக்கு தொடர்ந்து தலைவலியைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
இத்தேர்தல் முடிந்த பிறகாவது ஐக்கியப் பேரவையின் ஆதரவாளர்கள் தற்போதுள்ள பேரவையைக் கலைத்து விட்டு,
வெளிப்படையான தேர்தலை நடத்தி, ஊர் ஜமாஅத்துகளின் முழுமையான பிரதிநிதித் துவத்துடனும், பிரதிநிதிகளின் முழுமையான ஈடுபாட்டுடனும்,
சுயநலனையோ, ஈகோவையோ எதிர்பார்க்காமல்
ஊர் நலனையும் சிறப்பான காயல்பட்டணம் நகராட்சியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஓர் ஐக்கியப்பேரவை தான் ஊரின் பெருவாரியான மக்களின் எதிர்ப் பார்ப்பாய் இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross