Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byD.SEYED ISMAIL (HONGKONG)[18 October 2011] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 11286
அஸ்ஸலாமு அலைக்கும்
மக்கி நூஹுதம்பி காக்காவின் கருத்து அனைவரும் சிந்திக்க வேண்டியது (comment no. 11225)
தேர்தல் முடிந்துவிட்டது. யார் வென்றாலும் நமது சகோதரிதான்.
ஆனால் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நிரந்தரமாக இல்லாமல் இவற்றை மறந்து ஊரின் நன்மைக்காக பாடுபட வேண்டும். வெற்றி பெறுகிறவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து, ஊழல் இல்லாத மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும்.
ஒபாமாவும், ஹில்லரி கிளிண்டனும் தேர்தலுக்கு முன் எந்த அளவு முரன்பட்டார்கள், ஒருவொருக்கொருவர் சேற்றை அள்ளி வீசிக்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். இவ்விருவரின் ஆதரவாளர்களும் எதிரியாகவே செயல்பட்டார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அவர்களனைவரும் சேர்ந்து பணியாற்றும நல்ல முன்மாதியை நாம் பின்பற்றினால் ஊருக்கு நம்மை.
ஆனால் அவர்களின் சர்வாதிகாரப்போக்கை யார் பின்பற்றினாலும் அது நிச்சயம் பெரும் அழிவே.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் யார் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்ச்சிக்களை மறந்து அல்லாஹுக்கு பயந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை அமானத்தாக நினைத்து செயல்பட வேண்டும். முறைகேடாக நடந்தால் இந்த இணையதளத்தில் அவர்களின் ஊழல் வெளிச்சமாக்கப்படும்.
நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் மனதில் வேண்டும்.
அற்பமான இந்த பதவிக்காக நிரந்தரமான மறுமையை மறந்தால் நிரந்தர தங்குமிடம் நரகம்தான்.
அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் வலுவான, உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும் பேரவை மிக அவசியம்.
இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இன்ஷா அல்லாஹ் நம் பெரியவர்கள் இளவல்களையும் அரவணைத்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரியவர்கள்.
இதை செய்யத்தவறினால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டும்.
அல்லாஹ்வை மறந்து மக்கள் கருத்தை நசுக்கி அட்டூழியம் புரிந்த பெரும் ஆட்சியாளர்கள் மண்ணை கவ்வியதையும், குற்றவாளிகூண்டில் படுத்த நிலையில் கேவலப்படுவதையும் நாம் LIVE ஆக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவெல்லாம் வெறும் காட்சிகளல்ல, படிப்பினை பெறவேண்டிய உண்மைகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross