இதை ஏன் கவனிக்கவில்லை யாரும்? posted bySeyed Ibrahim (Kayalpatnam)[19 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11312
சகோதரர்களே, கக்கும் கரங்கள் அழைப்பின் பேரில்தான் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் உரையாற்ற சென்றிருக்கிறார். ஒருவேளை அவர் அழைக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக வந்திருந்தாலும், கூட்டமும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் துவங்கவில்லைதானே?
சரி போகட்டும்! வந்தவரை பேச வைக்க வாய்ப்பே இல்லையென்றால் கூட அதை நளினமாகச் சொல்லியிருக்கலாமே?
ஐக்கியப் பேரவையின் வேட்பாளரை ஆதரித்து பேசச் சென்ற என்னை மரியாதைக்குரிய சகோதரர் அப்துர்ரஷீது (அவ்லியா) அவர்களும், ஜனாப் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்களும், “உன்னை யார் பேச அழைத்தது? முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேசிய பின்பு நீ பேசுவது முறையா?? என்று கேட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இதுதான் அழைக்கப்பட்ட ஒருவரை கண்ணியப்படுத்தும் முறையா? அத்துடன், செய்தியில் இவ்வளவுதான் உள்ளது. அதற்குப் பிறகு நடந்தவற்றை நான் தெரிவிக்கிறேன். உண்மைதானா என்று கக்கும் கரங்கள் தலைவர் விளக்கம் தரட்டும்!
“நான் கக்கும் கரங்கள் தலைவர் தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அழைத்ததால்தான் வந்துள்ளேன். அழைக்காத இடத்திற்கு ஒருபோதும் நான் வந்ததில்லை” என்று அவர் தெரிவித்தவுடன், “யார்ட கேட்டுட்டு நீ இவனை அழைத்தாய்?” என்று மரியாதைக்குரிய அவ்விருவரும் கக்கும் கரங்கள் தலைவர் ஜெய்னுல் ஆப்தீனிடம் கேட்டிருக்கிறார்கள்.
ஆகா, சூப்பர்! ஒரு பொதுக்கூட்டத்தை இப்படியல்லவா நடத்த வேண்டும்?
நான் தெரியாமல்தான் கேட்கிறேன். “கக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் பேரவைக்கு என்னப்பா சம்பந்தம்? ஏன் அதையே இழுக்கிறீங்க? என்று சொல்பவர்களே! மேலே உள்ள பத்தியைப் படித்துவிட்டு சொல்லுங்கள் உண்மையிலேயே இது கக்கும் கரங்கள் நடத்திய கூட்டம்தானா அல்லது அந்தப் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று! கக்கும் கரங்கள் நடத்திய கூட்டம்தான் அது என்றால், “யார்ட கேட்டுட்டு நீ இவனை அழைத்தாய்?” என்று எப்படி கேட்கலாம்? அதைக் கேட்ட பின்னாடியும் அவங்க எழுதித் தர்றதையெல்லாம் அறிக்கையாக விடுகிறாரே கக்கும் கரங்கள் தலைவர்? இதுவல்லவா அமைப்பு? இவங்களைப் பார்த்து அல்லவா பாடம் படிக்கனும் ஒரு அமைப்பை எப்படி நடத்துறது என்று?
அது போகட்டும்! கக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் இந்த வெப்சைட்டில் எந்தக் கருத்து தெரிவித்தாலும், அவருடைய பெயரைப் போட்டு அமைப்பின் பெயரையும் போட்டு, அதன் தலைவர் என்று போட்டுதான் இதுவரை கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
தனது தனிப்பட்ட கருத்தைக் கூட அமைப்பின் பெயரில், அதிலும் குறிப்பாக ஆத்திரத்தில் சில வார்த்தைகளைக் கக்கி, அவ்வளவு “பக்குவமாக” செயல்படுபவர்தான் கக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர். அவ்வளவு பக்குவமான அமைப்புதான் கக்கும் கரங்கள் அமைப்பு.
அது சரி... இந்தக் கூட்டத்திற்கு மேடை அமைப்பு, டெகரேஷன், சவுண்ட் சர்வீஸ், நோட்டிஸ், சேர் வாடகை, சுத்தப்படுத்துவது, ஆட்டோ பிரச்சாரம் என பல வேலைகளுக்கும் சேர்த்து ஒரு முப்பதாயிரமாவது செலவாகியிருக்குமே? ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு உண்மையிலேயே செலவு செய்தது கக்கும் கரங்கள்தானா? அதற்கு அவர்களிடம் என்ன வரவு உள்ளது? என்ன செலவு உள்ளது? தெரிவிப்பாங்களா?
கேக்குறவன் கேணையனா இருக்கும் வரை கேப்பையில் தேன் வடியுதுன்னு சொன்னாலும் கூட சிலர் நம்புவர்கள். அதை விமர்சனம் செய்பவர்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று சொல்லுவார்கள்.
ஒருபக்கம் தவறான நடவடிக்கைகள் கணக்கின்றி நடந்துகொண்டிருக்கும். அதைக் கண்டிக்க அந்த கமிட்டியில்தான் நாதியில்லை. குறைஞ்சபட்சம் ஒரு காயலனாக அதை வெளிப்படுத்துவது கூட குற்றம் என்றால், அந்தக் குற்றத்தை ஒவ்வொரு காயலனும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross