"""காக்கும் கரங்களின் குறிக்கோள் தான் என்ன????? பேரவை ஏற்கனவே மக்களின் செல்வாக்கை இழந்து... கேவலம் ஒரு தேர்தலில் தான் நினைத்ததை சாதிக்க வேண்டி.... பொது வேட்பாளர் வெற்றி பெற வைப்பதற்க்கு... எவ்வளவோ கேடு/தரம் கேட்ட செயல்களில் (பணம், கள்ள வோட்டு, கள்ள சாராயம், சென்னை டு காயல் ப்ரீ பஸ், போட்டி வேட்பாளரை முடிந்த வரை எல்லா இடத்திலும் கேவலபடுதியது) ஈடுபட்டு ஊரை அசிங்க படுத்தி அரசியல் மற்றும் பண பலம் கொண்டு ஜனநாயகத்தை சாகடித்த ஜாம்பவான்களிடம் இந்த கரங்களும் கரை பட்டு விட்டதோ என்று நினைக்க தோனுகிறது. """"
"""யாருக்கு தெரியும்... பணம் பாதாளம் வரை பாயும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்!! அவனே எல்லாவற்றிக்கும் சாட்சியாளன். """" - posted by Salai.Mohamed Mohideen (USA) [Wednesday, October 19, 2011]
ஒரு வழியாக தேர்தல் முடிந்தது, இப்போதே சில நல்லவர்கள் இருவகையான கருத்துக்களை தயார்செய்து வைத்திருப்பார்கள், சார்ந்தவர் வெற்றியை இழந்திருந்தால் அதற்க்கு எதிரணியின் கள்ள ஓட்டும், பண நாயகமும்தன் என்றும், வெற்றிபெற்றுவிட்டால் அதற்கும் எதிரணியின் சர்வாதிகாரத்தின், ஒற்றுமையின் தோல்வி என்றும் இது வழமையில் உள்ளதுதான்.
ஆனால் மது விளம்பப்பட்டது ஐக்கிய பேரவை என்பதாக எழுதி இருக்கிறார், இப்போது ஊரில் எது நடந்தாலும் அதற்க்கு காரணம் ஐக்கிய பேரவைதானா?, அன்று மழை தூரியதும் அவர்களால்தானோ?. மது விநியோகம் நடைபெற்றிருந்தாலும் அதற்கும் ஐக்கிய பேரவைக்கும் என்ன சம்பந்தம்?.
மாற்று மத சகோதரர்களும் போட்டியில் இருக்கின்றார்கள் அவர்கள் தங்களுடைய வெற்றிக்காக விநியோகம் செய்திருந்தால் அதற்கும் ஐக்கிய பேரவைதான் காரணமா?. அல்லது ஐக்கிய பேரவையின் நிர்வாகம்தான் தூண்டியது என்று தகுந்த ஆதாரத்துடன் பதிவு செய்தால் நாங்களும் சேர்ந்து எதிர்போம் இல்லையா?
எங்கெங்கோ இருந்துகொண்டு யார் யாரோ சொல்வதை கொண்டு மற்றவரின் மீது அவதூறு கூறுவது நல்ல முக்மீனுக்கு அழகா. எதெற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம் மார்க்கத்தில் ஆதாரம் காட்டும் நாம் ஒருவரின் மீது அவதூறு கூறும் போது மட்டும் நம் உள்ளதை மார்க்கத்திலிருந்து திருப்பிகொள்வது அனுமதிக்கப்பட்டதோ? அல்லது மது வழங்கப்பட்டது ஐக்கிய பேரவைதான் என்று தகுந்த ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள் நாங்களும் சேர்த்து எதிர்க்கிறோம்.
அல்லாது எதிரணியை தாக்க எப்படிவேண்டும் என்றாலும் சொல்லலாம் என்று நமது மதிக்கு திரையிட்டுக்கொண்டு எழுதினால் அதன் விளைவு நமக்கே வந்து சேரும், அல்லது நீங்கள் சொன்னது போல் மதுவை விநியோகித்தது எந்த முஸ்லிமாக இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் சாபம் உண்டாகட்டும், அதுபோலவே அதாரம் இல்லாமல் அவதூறு கூறும் நபர்கள் மீதும் அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும் அவர்களின் குற்றசாட்டுகள் பொய்யாக இருந்தால், ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross