சகோதரி ஜைனப் அவர்களுக்கு posted byMuthu Magdoom (Kayalpatnam)[19 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11344
சகோதரி ஜைனப் அவர்களுக்கு,
சகோதரி ஆபிதா அவர்களே நேரடியாக வரிசையில் நின்றிருந்த ஒரு குறிப்பிட்ட பெண் (தன்னுடைய வாக்கை பதிவு செய்ய நின்றிருந்தவர்) வாக்காளரிடம் சென்று முகத்திரையை அகற்ற சொன்னது நியாயமா??
வரிசையில் நிற்கும்போது பர்தா அணிவது அல்லது அணியாமல் இருப்பது அவரவர் விருப்பம்.
என்னுடைய சிறு அறிவுக்கு தெரிந்த வகையில் வாக்கு செலுத்தும்போது மட்டுமே சந்தேகம் இருப்பின் முகத்தை காட்ட சொல்லலாம்.
மேலும் வாக்காளர்களிடம் "டாக்டரிடம் போகும்போதெல்லாம் முகத்தை காட்டுவதில்லையா?" என சகோதரி ஆபிதா கேட்டது எந்த வகையில் நியாயம்?
கோஷா பெண்களுக்கு மட்டுமே தெரிந்த பர்தாவின் அருமை நம்மில் உள்ள சகோதரிக்கு தெரியாமல் போய் விட்டது வேதனை அளிக்கிறது.
இத்தகவலை சம்மந்தப்பட்டவர்களிடம் தீர விசாரித்த பிறகே இங்கே பதிவு செய்கிறேன்.
_______________________________________________________________
Moderator அவர்களே,
விசாரணை என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டாமா? comment ref no :11253
Moderator: இக்கருத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளரிடம் விசாரிக்கப்பட்டதில், “போட்ட ஓட்டுக்கான அடையாள மையை வெளிப்படையாகவே சயனைட் கொண்டு அழிக்கின்றனர்... இதற்காக, அனைத்து ஜமாஅத் ஒற்றுமை முழக்கமிட்ட ஒருவர் ஒளிவு மறைவின்றி சயனைட் வாங்கியும் வருகிறார்... சமயம் வரும்போது தவறு செய்வோரின் முகத்திரையைக் கிழிப்பேன்” என தான் கூறியதாகவும், அது அவ்விடத்திலேயே திரித்து அறியப்பட்டதைக் கேள்வியுற்று, அவ்வாறு தவறாகப் புரிந்துகொண்ட பெண்ணிடம் விளக்கிக் கூறி, “நான் அந்த பொருளில் சொல்லவில்லை... ஒருவேளை தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டால், அவ்வாறு தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் எனது சொல் அமைந்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்...” என்று தெரிவித்ததாகவும் கூறியதோடு, “இதற்கு மேலும் இதேபோன்று திரித்துக் கூறுவோருககு இதுவே எனது முதலும், இறுதியுமான விளக்கம்” என்றும் தெரிவித்துள்ளார்.
_________________________________________________ Moderator: பொதுவாக ஒரு நபரைக் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டால் அக்கருத்து “தனிநபர் தாக்குதல்” என்று கருதப்பட்டு, நிராகரிக்கப்படும். ஆனால் இங்கு ஒரு வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால்தான் விசாரணைக்குப் பின் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு தரப்பு வேட்பாளருக்கு மட்டுமல்ல! எந்த தரப்பு வேட்பாளரானாலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டால் இதே நிலை கையாளப்படும் என்பதை அறிக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross