அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். என்னப்பா......! சிங்கை காயல் நலமன்ற செய்தியை இன்னும் காணோமே! ஒரு வேலை காயல் கலரி சாப்பாட்டின் ருசியில் மயங்கி செய்தியை மறந்து விட்டார்களோ! என நினைத்தேன்.
ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். அணைத்து புகழும் அல்லாஹ்விற்கே!
அவன்தான் இயந்திரத்தனமாக இயங்கிகொண்டு இருக்கும் "சிங்கை" வாழ்க்கையில் ஒரு சிறிய இடை (வேலை)வெளியான இந்த இன்ப சுற்றுலாவை ஏற்பாடு செய்து தந்து,நமக்கு ஒரு சுயநலத்தையும், நம் மக்களுக்கு ஒரு பொது நலத்தையும் ஏற்படுத்தி நம்மை ஒன்றுகூட்டி இன்ப மகிழ்ச்சி பெற செய்தான் .
இம்மன்றத்தின் முன்னாள் தலைவரும், இந்நாள் ஆலோசகருமான அல்ஹாஜ் பாளையம் ஹசன் சார் அவர்களை பார்த்தேன். மன்றத்தின் கூட்டத்தில் இருப்பார்.திடீரென ஆளை காணாமல் போகும். பார்த்தால் சமையல் அறையில் (வேலையில்) இருப்பார்.மீண்டும் மன்ற கூட்டத்தில் இருப்பார். மீண்டும் காணாமல் போகவே பார்த்தால் அகப்பையை பிடித்துக்கொண்டு அனலாக பறக்கும் அடுப்பின் அருகே அன்ன தயாரிப்பில் இருப்பார்.
இதனை அவரை பெருமை படுத்த சொல்லவில்லை. பொதுசேவை என
வரும்போது "பேனா பிடிக்கும் கை "அகப்பையும்" பிடிக்கவேண்டும். "ஒரு கூட்டத்தின் தலைவர் அதன் ஊழியரே" என்ற நபிமொழியை அவரோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. எல்லோரும் அதனை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். இதனை அருகிலிருந்தே அவதானித்தேன்.
எனவே பேனாவை பிடிப்பதில் இருந்து அகப்பையை பிடிப்பது வரை அனைவரும் நான்,நீ என்று முந்திக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளும்,நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வத்தையும் வழங்கி, தானும் சிறப்பாக வாழ, நமதூர் மக்களையும் சிறப்பாக வாழவைக்க தொய்வின்றி, தொடராக நம் அனைவருக்கும் பேரருள் புரிவானாக ! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross