காலம் என்னும் ஞானி posted bymusthak ahamed (mumbai)[21 October 2011] IP: 14.*.*.* India | Comment Reference Number: 11718
மெல்லிய காற்று முகம் தடவி செல்கிறது...அதன் சுகத்தை அனுபவிக்க முடியாமல் .ஒரு விதமான வெற்று சூழலில் மனம் தவிக்கிறது. முன்னும் பின்னுமாய் அலையும் மனது...
தேர்தல் குறித்து நடந்த வாதங்கள், பிரதி வாதங்கள், மேடை பேச்சுக்கள், வார்த்தை வீச்சுக்கள் எத்தனை பேர் இதயத்தை ரணமாகி இருக்கும் என்று தெரியவில்லை. யாருக்கும் யாருக்குமான போட்டி இது. இதில் வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு,
வெற்றி பெற்றவர்களை என்ன சொல்லி வாழ்த்துவது, தோல்வி பெற்றவர்களை என்ன சொல்லி தேற்றுவது,..
இதுதான் நம்மை நாமே சுய பரிசோதனை செய்யும் சரியான தருணமிது. சில வார்டை நினைக்கும் போது 3 ம் வகுப்பில் கம்சா மைதீன் சார்படம் பார்த்து கதை சொல்லச் சொன்ன 4 மாடுகள் ஒரு புலி அல்லது சிங்கம் கதை கண் முன்னே வந்து வந்து போகிறது......
வாக்குகள் சேகரிப்பின் போது ஒரு மாஜி அரசியல் வாதி பயம் காட்டியது உண்மையிலேயே பயமாய் இருக்கிறது. ஒருவேளை இவர் வெற்றிபெற்றால் அம்மாவை எப்படி சந்திப்பார்....கழுதை பிடித்து வெளியே தள்ள மாட்டார்களா.................நமது நகரமன்ற தலைவி நல்ல பல திட்டங்களுடன் நம் முதல்வரை சந்திப்பது போலவும் அவரை இந்த மாஜி அரசியல் வாதியே அம்மாவிடம் "மக்கள் செல்வாக்கு பெற்ற வேட்பாளர் என்று அறிமுகப்படுத்துவது போலவும் .......திரை கதையோடு ஒரு காட்சி கண் முன்னே விரிகிறது. முகமெங்கும் புன்முறுவல் விரிந்து பரவுகிறது.
சில விஷயங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிலருக்கு புரிவதே இல்லை. அல்லது புரியாதது போல் இருகிறார்கள். போகிற போக்கில் காலம் பல விசயங்களை நமக்கு கற்று தந்துவிட்டுத்தான் செல்கிறது. கற்பது என்பதை ஏட்டோடு மட்டும் சம்பத்தப்படுத்தி பார்ப்பவர்களுக்கு அங்கேயே திரை விழுந்து விடுகிறது.இனி அவர்கள் கற்பதற்கு ஒன்றும் இல்லை என்று அவர்கள் மனது அவர்களிடம் தெரிவித்து விடுகிறது. இந்த மாயை தவிர்த்து கற்றுக்கொள்ள தயாராகும்போது, இன்று பிறந்த குழந்தை முதல் மரண வாயிலில் நிற்கும் மனிதன் வரை நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கிறது. இதில் யார் பெரியவர்கள்...யார் சிறியவர்கள்........எது மேதாவி தனம்....எது அறிவுடைமை.........யார் மூத்தோர், எது முது நெல்லிக்கனி......காலம் தான் முடிவு செய்யும். செய்திருக்கிறது
நம்மிடம் உள்ள பணம் பொருள் செல்வம் கல்வி அனைத்தும் இங்கே சோதனை யாகவே விதிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் நாம் பதில் சொல்லி ஆக வேண்டும். உண்மையிலேயே இதனை புரிந்தால் இத்தனை ஆட்டம் நடந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது .
உலக பொருளாதரத்தில் தாரள மயமாக்கல் கொள்கை வந்த பிறகு இங்கே பணம் என்பது பெரிய விசயமே இல்லை. முன்பு ஆட்சி அதிகாரங்களை நிர்ணயித்த பணம் இன்று மதிப்பற்ற வெறும் வெற்று பேப்பராய் இருக்கிறது. பல விசயங்களை இந்த தேர்தல் நமக்கு கற்றுத்தந்துள்ளது....
மக்களோடு இருப்பது என்பது வேறு........மக்களோடு இருக்கிறேன் என்று சொல்வது வேறு.....இரண்டிற்குமான வேறுபாட்டை தோற்ற அனைத்து சகோதர்களும் புரிந்திருக்க வேண்டுமே என்று கவலை மனம் முழுதும் நிறைந்திருக்கிறது...
இந்த சூழலில் சென்ற முறை போட்டியிட்டு தோற்ற 10 வார்டை சார்ந்த என் அருமை நண்பர் பதுருள் ஹக் இந்த முறை வெற்றி பெற்றதன் பின்னணியில் கடுமையான அதே நேரம் நேர்மையான உழைப்பு, மக்களிடயே நேரிடையான தொடர்பு, எந்த நேரத்திலும் அவரிடம் தனது குறைகளை சொல்லலாம் நிறைவேற்றி தருவார் என்ற மக்களின் நம்பிக்கை. சமுதாய பின்னடைவிர்க்கான அவரின் நியாயமான கோபம் அனைத்தும் இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பனே........நான் ஏற்கனவே உனது மனு அளித்தலின் போது பதிவு செய்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறன். உன்னை சுற்றி உள்ள கல்வியாளர்கள், அனுபவஸ்தர்கள், இளைஞர்கள் ஆகியவர்களை நல்ல முறையில் பயன் படுத்திகொள்.
நகர் மன்ற தலைவி ஆபிதா அவர்களே
முட்கள் நிறைந்த பாதை வழி தொடர்ந்த பயணத்தின் நடுவில் ஒரு மெல்லிய மலர் பாதை......இது வரை நீங்கள் பயணித்த பாதை முழுதும் கிடந்த முட்கள் நீங்கள் அறிந்ததே......இரத்தங்களுடன் கடந்து வந்து விட்டீர்கள்............ஆனால் இனி நீங்கள் பயணிக்கப்போகும் பாதையின் பயங்கரம் நீங்கள் அறியாதது.........அனைத்தையும் கடந்து மீண்டு வர.......அல்லாஹ் துணை இருப்பானாக.............ஆமீன்.
இந்த நேரத்தில் ஒரு விசயம் ஞாபகம் வருகிறது...........ஒரு முறை தூத்துக்குடியில் புதியதாக பொறுப்பேற்ற ஒரு மாவட்ட ஆட்சியாளரின் வரவேற்பின் போது அவர் ஆற்றிய உரை,
"எந்த ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பது பெரிய பெரிய விசயங்களில் நாம் மேற்கொள்ளும் சின்ன சின்ன மாற்றங்களே காரணமாய் அமைந்து விடுகிறது............."
இதில் பொதிந்திருக்கும் அர்த்தம் கல்வியிலும் அறிவிலும் சிறந்த உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross