செய்தி: புதிய நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டம்! தலைவர், 14 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Hats off to this new team!! posted bySalai Mohamed Mohideen (USA)[24 October 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 12042
இந்த செய்தியை படித்து முடித்த பொழுது மனதிற்குள் ஒரு சந்தோசம் எனக்குள் பரவியது. அது ஒரு தன்னம்பிக்கையும் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. முன்னால் நகர்மன்ற தலைவிகளின் ஆலோசனைகள், தற்போது வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களின் உரைகள்/செயலாக்க திட்டங்கள், ஊர் நலனில் அக்கறை கொண்ட அனைத்து (சுயநலமற்ற) இயக்கங்கள்/ பெரியவர்கள்.... அதிலும் குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பையும் பார்க்கும் போது... நமது நகர்மன்றதுக்கு ஒரு விடியல் உதித்து விட்டதாகவே நினைக்க தோனுகிறது.
நகர்மன்ற உறப்பினர்கள் தங்கள் செயல்திட்டங்களை வெறும் பேச்சோடு நிறுத்தி கொள்ளாமல் உங்கள் வார்டு மக்களுக்காக... நீங்கள் உண்மையாகவே உழைக்கும் போது உங்கள் வார்டோடு சேர்த்து ஊரும் வளர்ச்சி பெரும்.
வல்ல அல்லாஹ் உங்களை "கறைபடாத கரங்களுக்கு" சொந்தக்காரர்கள் என்று அடையாளம் காணப்படும் நல்லோர்கள் கூட்டத்தில் உங்களையும் சேர்த்து, உங்கள் சொந்த வாழ்க்கையும் மேன்மையாக்கி, எவருக்கும் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு அதிகார/ஆணவ வர்க்கத்துக்கும் விலை போய்/குனிந்து விடாமல், பணக்காரன்/ஏழை தெரிஞ்சவன்/தெரியாதவன், முஸ்லிம்/மாற்று மதத்தினர் என்ற பாரபட்சமின்றி எவருக்கும் பயப்படமால், நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கு மட்டும் பயந்து , எல்லா மக்களின் (எந்த ஒரு பாரபட்ச மின்றி) குறைகளை அறிந்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உங்கள் கடைமைகளை செவ்வென செய்ய துஆ செய்கிறேன்.
இது போன்ற கூட்டங்கள் quarterly /half yearly once இதே மாதிரி சான்றோர்கள் மற்றும் போது மக்கள் முன்னிலையில் நகராட்சியில் என்ன நடக்கின்றது, என்ன மாதிரியான சப்போர்ட் மக்களிடம் எதிர்பார்க்க படுகிறது. மக்களின் குறைகளை இந்த கூட்டத்தில் கேட்டு அதை களைந்திட என்ன முயற்சிகள் எடுக்க படும் என்பதனை உறுப்பினர்கள் மற்றும் தலைவர் விளக்கம் அளிக்கலாம். நமது நகர்மன்றம் தமிழகத்துக்கே ஒரு முன்மாதிரியான நகர்மன்றமாக விளங்க உளமார்ந்த வாழ்த்துக்கள்!!
பேரவையின் பெரியவர்கள் முகங்களை இங்கே காணவில்லை. ஒரு வேளை பேரவையின் பெரியவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்க்பட்டர்களா அல்லது அழைக்கப்பட்டு அவர்கள் வரவில்லையா என்று தெரியவில்லை. பேரவையின் தனிச்சையான செயல்பாட்டில்/முடிவில் வேண்டுமானால் நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் நிச்சயமா அவர்களும் நம்மில் ஒரு அங்கம். அவர்களின் பங்களிப்பும், "ஊருக்கு நன்மை பயக்கும்" விலை மதிப்பற்ற ஆலோசனைகள் நிச்சயம் நமக்கு தேவை. அவர்களும் நம்முடம் சேர்ந்து செயலாற்ற வேண்டும். நம்மில் உள்ள கருத்து வேறுபாடுகளை மனக்கசப்புகளை தூக்கி வெளியே போற்றுவிட்டு ஒரு கூட்டு பறவைகளாக செயல்படவேண்டும்.
தலைவியின் உரை படிக்க மிக ஆக உள்ளது. சீக்கிரம் செய்தியை வெளிடவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross