Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byMOHAMED ADAM SULTAN (Kayalpatnam)[25 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12139
Dr .Kizar அவர்களே நீங்கள் யாரை எந்த அமைப்பை சுட்டி காட்டுகிறீர்கள் எனபது விளங்குகிறது.
அந்த அமைப்பு இதுவரை ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்ற ஒரு ஊர் தலைவியை வாழ்த்த வயதிருந்தும், மனம் வரவில்லை என்றால், அவர்கள் திரும்ப, திரும்ப தங்களை அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
தேர்தல் வாக்கு சேகரிக்கும் சமயத்தில் தற்போதைய தலைவர் அவர்களை அவகள் வீட்டில் சந்தித்து வாக்கு கேட்கும் பொழுது, இங்கு ஏன் வந்தாய்? அந்த பேரவைக்கு அடங்காத உனக்கு ஓட்டு இல்லை என்று சொன்னாராம்.
அத்தனைக்கும் அமைதி காத்தபின் சரி மாமா, எனக்காக துவா செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
துவாவா? உன்னை பதுவாதான் செய்வேன் என்று விரட்டி விட்டாராம்.
கன நேரத்தில் இக்கண்ணியக்குறைவான நிகழ்வை நினைத்து, அவர்வீட்டு கதவை தாண்டும் பொழுது கனத்த இதயத்தையும், கரைபுரள துடிக்கும் கண்ணீரையும் கட்டுபடித்திகொண்டு, அடுத்தவர்களுக்கு காட்டிகொள்ளாமல் அடுத்த வீட்டிற்க்கு சென்று வாக்கு சேகரப்பில் ஈடுபட்டார் என்று அவரோடு சென்றவர்கள் கூறினார்கள்.
ஆக பெரும்பான்மையினரால் தெர்த்டுக்கபட்ட ஒரு ஊர் தலைவியை ஊரில் உள்ள அனைத்து ஜமாத்தும், அனைத்து அமைப்புகளும், அனைத்து அயல் நாடு அமைப்புகளும். ஊரிலுள்ள அனைத்து நடுநிலையானர்வர்களும், நல்லன்னம் கொண்டவர்களும்,
இன்னுன் ஏன் தோல்வியை தழுவிய சகோதரி மிஸ்ரியா அவர்களும் கூட வெற்றிபெற்ற சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்
ஊரில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் தான் இந்த அமைப்பு என்று பறை சற்றிகொள்ளும் பெரியவர்களே உங்களை இன்றுவரை பெருந்தன்மையானவர்களாகத்தான் நாம் நம்புகிறோம்
ஊரில் உள்ள பெரும்பன்ன்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவரை, நம்முடைய நிலைபாட்டிற்கு மாற்றமாக வாக்களித்து விட்டார்கள் என்ற வெருப்பை ஓரம் கட்டி விட்டு , உண்மையும் அல்லாஹ்வின் நாட்டமும் இது தான் என்று ஒப்பு கொண்டு நீங்கள் வாழ்த்து செய்தியை வெளியிட்டால் தான் இன்னும் எள்ளளவு உங்கள் மீது ஒட்டிகொண்டிருக்கும் பெருந்தன்மை வெளிப்படும் .i
எந்த "துவா" வானாலும், எந்த "பதுவா" வானாலும் படைத்தோன் பார்த்துகொண்டிருக்கிறான். அவனே தீர்ப்பின் அதிபதி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross