செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12183
1967 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தோல்வியை தழுவி இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்கிறார். அப்போது அவர் காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரை சந்தித்து நல்லாசி பெற்று செல்கிறார். அப்படியொரு ஜனநாயக பண்பை அதற்கு பின்னர் காண முடிந்ததில்லை.
ஆனால் தமிழகத்தின் ஒரு சாதாரண கிராமத்தில் இப்படியொரு நிகழ்வு சகோதரி ஆபிதா மூலம் நடைபெற்றிருப்பதை புகைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ள நண்பர் ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி. யாரும் எதிர்பாராத வெற்றி யாரும் எதிர்பாராத தோல்வி.
ஜனநாயகத்திலே ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள், அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அசைக்க முடியாத உறுதி கொண்டவர்கள், இந்த வெற்றி தோல்விகளை மிக ஆழமாக யோசித்து கவலைப்பட மாட்டார்கள்.
அல்லா யாருக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்க நினைக்கிறானோ அவன் சொல்வதெல்லாம் " ஆகி விடு" என்பதுதான். உடனே ஆகிவிடும்.
ஊர் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டு உழைத்த பெரியவர்கள் நல்லவர்கள் இந்த தோல்வியை பெரிதுபடுத்த தேவை இல்லை. நீங்களும் சேர்ந்துதான் நமதூர் முன்னேற்றத்துக்கு பாடு படவேண்டும்.
கண்மணி கலங்க உள்ளம் நடுங்க கை விரல் நம் கண்ணில் படுவதுண்டு. அப்போது நம் கையை வெட்டியா வீசி விடுவோம். அதே போல்தான் இந்த நிகழ்வையும் நீங்கள் எடுத்துக்கொண்டு, மீண்டும் தெளிவான நீரோட்டம்போல் உங்கள் சிந்தனைகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்க முன் வாருங்கள். சரித்திரம் பின்னோக்கி செல்வதில்லை, சரித்திரத்தை திருத்தி எழுதவும் முடியாது. HISTORY CANNOT BE RE-WRITTEN, BUT IT CAN BE MODIFIED IN A POSITIVE WAY.
வாருங்கள், நகரமன்ற தலைவரின் முயற்சிகளுக்கு தோள் கொடுங்கள். உங்கள் வீடு தேடி வந்த திருமகளுக்கு வாழ்த்து கூறுங்கள். இன்றே அந்த பதவியேற்பு விழா மேடையில் இது நடந்திருக்க வேண்டும், என்ன செய்வது இதயத்தை கல்லாக்கி கொள்ள முடியாதுதான். மனித உணர்வுகள் இப்படி சங்கடப்படுவது இயற்கைதான்.
இப்போதும் வெற்றி பெற்றிருப்பது வேறு யாருமில்லை, நமது இளைய சகோதரிதான். உங்கள் பேத்திதான். வாழ்த்துங்கள், அவள் வளரட்டும், இந்த ஊருக்கு எல்லா நலத்திட்டங்களையும் கொண்டு வந்து குவிக்கட்டும். அதில் உங்கள் பெயர்களும் நிச்சயமாக கல் வெட்டுக்களில் எழுதப்படும். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross