செய்தி: நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா! நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகர் மன்ற தலைவர் ,மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் எனது சலாமும், நல்வாழ்த்துக்கள்.அ ஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் பணிகள் அனைத்தும், நீதியாகவும், நியாயமாகவும் நடைபெறட்டும்.
நமதூரில் குடிநீர் பிரைச்சனை தீர முன்னுரிமை தாருங்கள். குறிப்பாக மின்சார மோட்டார் வைத்து,தனக்கு மாத்திரம் தண்ணீர் வேண்டும் என நினைக்கும் சுயநலவாதிகளின் சுயரூபத்தை தடுத்து நிறுத்துங்கள். இவர்கள் பிறரின் இரத்தத்தை தான் உறிஞ்சிகிரார்கள்.
இதில் பணக்காரன், ஏழை, தெரிந்தவன், தெரியாதவன், பெரியவர், சிறியவர், முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்,
ஆண்டி, அரசன் என்று எந்த பாகுபாடும் காட்டாதீர்கள்.
முன்பு மர்ஹூம் வீ,எம்.எஸ்.லெப்பை மாமா
அவர்களின் நிர்வாகத்தின்போது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடுத்து நமதூரின் அனைத்து குடிநீர் இணைப்புக்கும் தானாகவோ, அல்லது அடிப்பைப்பு மூலமாகவோ தண்ணீர் வரும் ஏற்பாடை செய்யுங்கள்.
லஞ்சம் அற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துங்கள். ஐக்கிய பேரவை இந்நகர்மன்ற குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுங்கள். நாம் அறிவித்த பொது வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டாரே என கௌரவம் பார்க்காமல், பெருன்பான்மையான மக்கள் தெரிவு செய்த நகர்மன்ற தலைவர்
குழுவினருக்கு எல்லா உதவிகளையும், ஆலோசனைகளையும் ஊர் நலன் கருதி செயல்படுங்கள்.
பேரவையால் தெரிவு செய்யப்பட்ட நகர்மன்ற தலைவரின் வெற்றி வாய்ப்பு ஏன் இழந்தது என மீள் பரிசீலனை செய்யுங்கள்.
இத்தேர்தலில் பொதுமக்களின் ஆதரவு ஐக்கிய பேரவையின் முடிவுக்கு எதிராக பிரதிபலித்துள்ளது ஏன் ? என மீள்பரிசீலனை செய்யுங்கள். தவறுகள் எங்கு, யாரால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதனை களைந்து, சீரமைக்கும் பணியை மேற்கொள்ளுங்கள். அப்போதுதான் பேரவையின் செயல்பாடுகளுக்கு வரும்காலங்களில் பொது மக்களின் ஆதரவும்,
ஒத்துழைப்புகளும் கிடைக்கும்.
அதற்க்கான சூழல் ஏற்பட வழிசெய்யுங்கள். இதில் சுயகௌரவம்
பார்த்தால் பேரவையின் மதிப்பு மக்களிடம் எடுபடாமல் போகும் சூழல் ஏற்படும்.
ஆகவே ! நமதூர் நகர்நல மன்றம் மூலம் நாம் எல்லா வளர்சிகளையும், நன்மைகளையும் பெற ஐக்கிய பேரவையும்,
மற்றும் நமது அனைத்து பொதுநல சேவை மன்றங்களும் இணைந்து செயல்படுவோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்க்கான சூழலை ஏற்படுத்துவானாக! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross