நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12304
நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை.
புத்தகங்கள் மகத்தான சக்தி படைத்தவை. புதிய சிந்தனைகள் உருவாகவும், நொடிக்கு நொடி புதிய கருத்துக்கள் தோன்றவும் புத்தகங்கள் தான் ஆதாரம்..
ஒரு மனிதருடைய அறிவு வளர்ச்சியில் நூலகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. நல்ல நூல்களை நாம் வாசிக்கும் போது நற்பண்புகளும், நற்குணங்களும் நம்மிடம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
‘நவில்தொரும் நுல்நயம் போலும்’ நல்ல நூலின் நற்பொருள் கற்க மேலும் இன்பம் தருவது என்கிறார், வள்ளுவர்.
எனவே நம் சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.
புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது உண்மை.
“அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு உள்ளழிக்க லாகா அரண்” என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.
கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.
நட்புடன்
தொல் திருமா வழி தமிழன்
முத்து இஸ்மாயில்.
(தொண்டன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross