செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[28 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12390
Pls Ref: comment # 22
மெகா கேஸ் ஒன்று போட்டுள்ளதே, அது எதுக்கு, நோக்கம் என்ன, பெண்கள் தலைமை பதவிக்கு வரக்கூடாது என்ற நல்ல நோக்கம் என்று எம்மை போன்றோர் நினைத்தோம். மெகா கேஸ் இன் முடிவை எப்படி எதிர்பார்கிறது? (Copy & Paste)
சகோதரரே! நீரும், உம்மை போன்றவர்களும் தவறாக விளங்கி இருக்கிறீர்கள். Please "reed between the lines".
MEGA போட்ட வழக்கு பெண்கள் தலைமை பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக அல்ல. மாறாக ஆண்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய ஒரு தொகுதியை பெண்களுக்கென்று அறிவித்த அரசாங்க ஆணைக்கு எதிராகத்தான்,
பொதுவாக கேஸ் போட்டவர்கள் கேஸின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்பார்களோ , அப்படி இருக்க வேண்டும் என்றுதான் மெகாவும் எதிர்பார்கிறது.
"பெண்ணை வைத்து தெரு தெருவா சுத்துவது நம் மார்கத்தில் உள்ளதா? உண்மை பேசினால் கோவம் பொத்து கொண்டு வரும். ஒரே போட்டோ இதுவெல்லாம் பப்ளிசிட்டி தான்". (Copy & Paste)
10, 15 வருடங்களுக்கு முன்னால் ஐக்கிய பேரவை வேட்பாளர்களாக நமது ஊர் தலைவி பதவிக்கு போட்டியிட்ட, மூத்த சகோதரிகளான நாச்சியார் மற்றும் வஹீதா ஆகியோர் தெரு தெருவாக (உமது பாஷையில்) சுத்தியபோது எங்கே சென்றது உமது மார்க்க பக்தி?
இஸ்லாம் வரையறுத்த ஆடைகளை அணிந்து பெண்கள் தமது உரிமைக்காக போராடுவதை, ஓட்டு கேட்பதை இஸ்லாம் தடை செய்துள்ளதா?
Tunisia வில் Ben Ali யை எதிர்த்தும், Libya வில் Gaddafi யை எதிர்த்தும், Egypt யில் Mubarak ஐ எதிர்த்தும் நாடு ரோட்டில் இரவு பகலாக போராடிய மக்களில் இஸ்லாமிய உடை அணிந்த சகோதரிகள் முஸ்லிம்கள் இல்லையா?.
Sirya வில் Assad ஐ எதிர்த்தும், Yemen னில் Saleh ஐ எதிர்த்தும் இன்னும் நாடு ரோட்டில் நின்று கொண்டு போராடிக்கொண்டிருக்கின்ற சகோதரர்களுடன் இணைந்து செயல்படுகின்ற சகோதரிகள் முஸ்லிம்கள் இல்லையா? அல்லது அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கம்தான் இஸ்லாம் இல்லையா ? இவர்கள் பின்பற்றுகிற மார்க்கத்தில் இவைகள் அனுமதிக்கப்பட்டிருகிறது, நமதூரில் நீங்கள் பின்பற்றுகிற மார்க்கத்தில் ஒட்டு கேட்பது அனுமதிக்கப்படவில்லை போலும்.
ஓ.... சவுதி தொலைகாட்சிகளில் மேல் சொல்லப்பட்ட நிகழ்வுகளை காட்ட மாட்டார்கள் போலும்.
இன்ஷா-அல்லாஹ், ஒருவேளை, எதிர்காலத்தில் நீர் வசிக்கும் KSA யில் உள்ள பெண்கள், மேலே கூறப்பட்ட நாடுகளில் உள்ள தமது அரபு சகோதரிகள் போல இவர்களும் நாடு ரோட்டிற்கு வந்து மன்னர் ஆட்சி ஒழிய போராடினால், இவர்களை முஸ்லிம்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டீர்போலும்.
Tunisia வில் கடந்த வாரம் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் பல முஸ்லிம் சகோதரிகள் போட்டியிட்டார்கள். இவர்களெல்லாம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஓட்டு கேடகவில்ல. வீடு வீடா, வீதி வீதியாகக் சென்று ஓட்டு கேட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களில்லையா? அல்லது இவர்கள் வேறு விதமான் மார்க்கத்தை பின்பற்றுகிறார்களா?
"ஐக்கிய பேரவை தான் சென்ற பல தேர்தலில் சாதித்தது. இந்த முறை கூட எல்லா அரசியல் கட்சிகளையும் போட்டி இடாமல் செய்தததுதான் இந்த நிலைமை. உங்க " மெகா"வால் செய்ய முடிய்மா ? ஆறு பேரு போட்டிபோட்டால் இரண்டு நபருக்கு ஒட்டு போடுங்கள் என்று ஒரு தலைபட்சம். அதிலும் ஒருவருக்கு மறைமுக ஆதரவு. இல்லை என்று சொல்ல முடியுமா? இதுவே ஆண் வெற்றி பெற்று இருந்தால், இப்படி ஆர்பாட்டம் இருக்காது" (Copy & Paste).
ஐக்கிய பேரவை கடந்த தேர்தலில் எதை சாதித்தார்கள் என்று சொல்லமுடியுமா? ஓ.... போட்டி இல்லாமல் தலைவரை தேர்ந்தெடுத்ததை சொல்ல வருகிறீரா?. அப்போது மக்களிடம் இப்போதுள்ளது போல விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா!
நண்பரே, இந்த முறை அரசியல் கட்சிகள் போட்டியிட்டிருந்தால் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடியிருப்பார்கள். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டார்கள். அது அரசியல் கட்ச்சிகளுக்கு நன்றாகத் தெரியும். மற்ற இயக்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு இதை சொல்வதற்கு முன்னால் " MEGA" துண்டு பிரசுரமூலம் மக்களுக்கு அறிவித்துவிட்டது.
கடந்த ஊராட்சி, நகராட்சி தேர்தல்களில் எந்த தேர்தலில் நமதூரில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு வெற்றிபெற்றது?. கூற முடியுமா? அன்பரே!
அரசியல் கட்சிகள் போட்டியிடக் கூடாது என்று சொல்லிவிட்டு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களை தேவையின்றி தனது மேடையில் ஏற்றி தனது தரத்தை MEGA என்றுமே தாழ்த்திக் கொள்ளாது.
பொது வேட்பாளரை ஆலோசனை செய்து தேர்ந்தெடுக்கப்படும் என்ற பெயரில் தனக்கு வேண்டப்பட்ட வேட்பாளருக்கு சார்பாக ஓட்டு வேட்டை ஆடிவிட்டு, உள்-தேர்தல் (அரசியல்வாதிகளை வைத்து) நடத்தி நாடகம் அரங்கேற்றிய வித்தை MEGA வுக்குத் தெரியாது.
ஆண்கள் போட்டியிட்டிருந்தால் MEGA மேலும் வீரியம் கொண்டு செயல்பட்டிருக்கும்.
சகோ.,Mahmood Syed (KSA) அவர்களே அடுத்தவருக்கு (Abdulkader- Abu Dhabi) வக்காலாத்து வாங்கும்பொழுது அவர் எழுதி உள்ளத்தில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து எழுதவும். சவுதியில் (வெளி நாடுகளில் இருந்து ) கொண்டு தங்களுக்கு கிடைக்கும் செய்திகள் யாவும் சரியானது என்று தப்பு கணக்கு போடாதீர்கள். ஊரிலுள்ளவர்களுக்கே பல நேரங்களில் வதந்திகள் எது உண்மை எது என்று தெரியாமல் கப்பல் கட்டுகிற கயிறுகளை முழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பலபேர்களிடம் கேட்டு உண்மையை அறியவேண்டியதுள்ளது.
(MEGA வின் உள்ளூர் உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் இவற்றை நான் எழுதவில்ல)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross