ஓய்வு பெற்றாலும், ஓய மாட்டார்கள்...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[29 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12473
யார்? எவ்வளவு பெரிய பட்டதாரியா இருந்தலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும், துள்ளிக் குதித்து ஓடி விளையாடிய பள்ளிப் பருவத்தை ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள்!
அதிலும் நமதூர் பள்ளிகள், வாப்பா, மகன், பேரன் எனப் பல தலைமுறைகளுக்குத் தாய் வீடாக திகழ்ந்துள்ளது என்பது பெருமைக்குரியதே!
அன்றைய காலகட்டத்தில் நம் மூதாதையர்களும், கல்வித் தந்தைகளும் கட்டியெழுப்பிய கோட்டைச் சுவர் தான் இன்று, காயலர்க்கும், அதைச் சார்ந்த ஊரார்க்கும் ஓர் அரணாக மாறி அறியாமையின் ஆணிவேர் சமூகத்தில் ஊடுருவாமல் தடுத்து நிற்கின்றது.
பள்ளிப் பருவத்தின் பசுமை மாறா நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், பக்கங்கள் போதாது! ஆசிரியர் பணி ஓர் புனிதமான பணி! நாளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை இன்றே உணர்ந்து ஆரோக்கியமான அறிவைப் புகட்டி வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் தியாகிகள்!!! ஓய்வு பெற்றாலும், ஒரு போதும் அவர்கள் ஓய மாட்டார்கள்...!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross