என் பழைய பொற்க்காலம்... posted byA.R.Refaye (Abudahbi)[30 October 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12538
என் வாரிசு நிகழ்காலம் இதோ!!!!!!!!!!!!!!!!
மக்களை ஸ்கூலில் சேர்ப்பதற்காக டிஸம்பரில் இருந்தே அலைச்சல் ஆரம்பமாகி விட்டது.அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க க்யூவில் காத்திருந்து எங்கள் முறை வந்த பொழுது டேபிளின் முன் அமர்ந்திருந்த பெண் “பைவ் ஹண்ட்ரட் ருபீஸ்” என்றார்.மெலிதான அதிர்ச்சியுடன் சட்டை பையில் இருந்து எடுத்துக்கொடுத்த பொழுது அடுத்த அதிர்ச்சி.”திங்கள் கிழமைக்குள் சப் மிட் பண்ணிட வேண்டும்.சப்மிஷன் பீஸ் 5500.நாட் ரீஃபண்டபிள்”
ext................''''''' எம் மக்களின் போர்க்களம்!!!!!!!!!!!
என் பழைய பொற்க்காலம்!!!!!!!!!!!!!!!!
கிளாஸ் ரூமுக்கு மெர்குரி லைட் போட்டாற்போன்ற ஒரு வெளிச்சம்...நெடிய ஒல்லியான உருவம்,ஆளை அசரடிக்கும் பளீர் என்ற அப்பொழுதுதான் சலவை செய்து வந்தாற்போன்று அசத்தலான நிறம்,பெரிய கருப்புநிற பிரேம் இடப்பட்ட அழுத்தமான மூக்கு கண்ணாடி,கைதேர்ந்த ஓவியன் போல் ஒருவர், உருவத்தைப்போன்றே அமைதியான குணம்,பரிவான வாஞ்சை,சட்டென்று புரியும் படி பாடம் நடத்தும் பாங்கு,அதே நேரம் அதீத கண்டிப்பு என்ற பல் கலவையுடன் பரிவாய் இருந்த ஆசான்கள்,வாழ்க்கை சக்கரம் உருண்டோடிய வேகத்தில் எங்களுக்கு கல்விக்கு துணையாய் வந்த ஆசிரியர் அனைவர்களையும் மனதில் மகிழ்வோடு நினைக்கும் தருணம் இது,
வாழ்வில் எத்தனை,எத்தனை மாற்றங்கள்,நிகழ்வுகள் ஆனாலும் இப்பொழுதும் ஆசிரியர்கள் அதே பாசத்துடன் என் பெயர் கூறி அழைத்து வாஞ்சையை பறிமாறும் பொழுது நான் மனம் நெகிழ்ந்து போவேன்.ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் நான் அவரை சென்றுபார்த்து வர மறந்தாலும் என்னை அவர்கள் குசலம் விசாரிக்கும் மறவாது பாசத்துக்கு விலை ஏது?
கடல் தாண்டி பொருள் ஈட்டுவது எங்கள் கீர்த்திதான்,என்றாலும் பொறியாளர்கள்,மருத்துவர்கள்,கல்வியாளர்கள்,தொழிலதிபர்கள் போன்றோர் உருவாக காரணியாக இருந்து,மாணவர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் ஆசிரியர்கள் தலை முறைகள் கடந்தாலும் வாழ்த்த பட வேண்டியவர்கள்.
நீங்கள் எமக்கு போதித்த உண்மை பேசு,நன்மை செய்,தீமை அகற்று,பொய்மை மற,தூய்மை பேணு,பொறுமை அவசியம்,கடமை தவிரேல்,முடியாமை என்றில்லை,திறமை வெளிக்கொணர்,திறமை வளர், மடமை அகற்று,கொடுமை செய்யாதே,ஆமை போல் இராதே,தெரியாமை என்பது மதியீனம்,அறியாமை என்பது பலகீனம், முடியாமை என்பது முயற்சி இன்மை, கல்லாமை நன்றன்று................
எமது புகழுக்கும்,பெருமைக்கும் நீங்கள்தான் காரணம் மறுப்பதற்கு இல்லை நீங்கள் ஓய்வு பெற்றாலும் இன்னும் பல்லாண்டு நோய் நொடியின்றி, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எல்லா ஆசிரியர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.
உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் என்றுமே நான் மாணவன்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross