Give up or face the consequences posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[31 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12616
இந்த செய்தி விமர்சனம் நிச்சயமாக மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை எற்படுத்தும். உண்மை வெளிவரக் கூடாது என்று பயப்படுகிறவர்கள்தான் இந்த மாதிரி செய்தியை எதிர்ப்பார்கள். இவர்கள் பொதுமக்களாக, நடுநிலையாளர்களாக இருக்க முடியாது.
இந்த செய்தியில் உள்ள உண்மையில் 50 % ஐ என்னால் உறுதியிட்டு கூற முடியும். அதாவது சம்சுதீன் அவர்களுக்கு ஆதரவாக நடைபெட்ட்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 10 நபர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். காரணம் அந்த கூட்டம் எனக்குத் தெரிந்த நபர் வீட்டில் நடைபெற்றது. முக்கியமான வேறு ஒரு விசயமாக அந்த நபர் வீட்டிற்கு சென்றபோது அவர்களை காண நேர்ந்தது.
இந்த செய்தி விமர்சனத்திலுள்ள மற்ற 50 % ஐ என்னால் உறுதி செய்ய இப்பொழுது முடியாது. முஹியத்தீன் அவர்களுக்கு ஆதரவாக கூட்டம் ஒரு தி.மு.க. நபரால் நடைபெற்றது எனபது உண்மை. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக சொல்லப்படும் அந்த 13 நபர்கள் யார் யாரென்று துல்லியமாக எனக்குத் தெரியாது.
சகோ. லுக்மான் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மை. நான் அவரிடமே நீங்கள் ஏன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இடவில்லை என்று இது பற்றி வினவியபோது
அவர் சொன்னது,
"எனக்கு பழக்கமான முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்னிடம் சொன்னார், நீங்கள் துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இட இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். உங்களுடைய எண்ணம் உழலை ஒழிக்கவேண்டும் என்பதானால் நீங்கள் உதவித் தலைவர் பதவிக்கு போட்டி இட வேண்டாம். அது ஒரு உப்பு சப்பு இல்லாத பதவி. Appointment Comittee பதவிக்கு போட்டி இடுங்கள், அங்குதான் அதிக பணப்புழக்கம் உள்ளது. அங்குதான் உழல் மலிந்து கிடக்கிறது. அதை control பண்ண வேண்டும். என்று அறிவுரை கூறினார். அதனால்தான் நான் அந்த துணைத்தலைவர் பதிவிக்கு போட்டி இடவில்லை என்று.
---------------------------------------
மேலும் தலைவர் தேர்தலில் சந்தித்த மிகப்பெரும் தோல்வியை ஊரில் உள்ள பல தலைகளால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்தவர்கள் இந்த துணை தலைவர் தேர்தலை (நாடகத்தை) நடத்தி வெற்றி கண்டுவிட்டார்கள். வெற்றி பெற்றவருக்கும், வெற்றிபெற வழிவகுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு அரசியல் கட்சியை சார்ந்த் சில சுயநலவாதிகள், தலைவர் தேர்தலில் பெற்ற தோல்வியை ஜீரணிக்க முடியாதவர்களுடன் ஓன்று சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். அதாவது சகோ. ஆபிதாவை செயல் படவிடாமல் pressure கொடுத்து அவரை Resignation பண்ண வைத்து Re-election ஐ கொணடு வரவேண்டும் என்பதாக நம்பத்தகுந்த நபர்கள் மூலமாக அறிய முடிகிறது.
இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். இவர்களிடத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால் அதனை அவர்கள் உடனடியாக கைவிடவேண்டும். இல்லையேல் இன்ஷா-அல்லாஹ், மக்கள் சக்தியை ஓன்று திரட்டி, சுயநலமில்லாத பொதுநல அமைப்புகளுடன் ஓன்று சேர்ந்து, நமதூர் இதுவரையில் கண்டிராத ஜனநாயக முறையில் மாபெரும் போராட்டம் நடத்தி இவர்களை வீதிக்கு கொண்டு வருவோம்.
தேர்தல்கள் முடிந்துவிட்டது, தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டர்கள். நகர் மன்றம் நன்றாக, உழலற்று இயங்க வேண்டும் என்பதே எல்லோர்களின் ஆவல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross