வெற்றி வாய்ப்பை இழந்தவர்களின் வழக்கமான கூப்பாடுதான் இது ... posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[31 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 12634
பொதுவாக வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள் வழக்கமாக கூறும் குற்றச்சாட்டுதான் இது. இவர்கள் வெற்றிபெற்றால் ஜனநாயகம் வென்றதாக பறைசாற்றுவார்கள். தோல்வியுற்றால் ஒரே கூப்பாடுதான்.
தலைவரின் வெற்றிக்கு பெரும் பணம் செலவு செய்தவர்கள் துணைத்தலைவர் தேர்தலிலும் பணம் செலவு செய்து வெற்றிபெற முடியாமல் போய் இருக்கலாம் என்பதே உண்மை.
சென்றமுறை உங்களுக்கு வெற்றி என்றால், இம்முறை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை கொடுத்திருக்கிறான்.
இதற்காக கூப்பாடு போட்டு பயனில்லை. கூப்பாடு போடுவதில் வலைதளங்களும் விதிவிலக்கா என்ன?
ஏன் இதற்கும் தலையங்கம் எழுதுவதுதானே? எதற்காக விமர்சனம் எழுத வேண்டும்?
வெற்றிபெற்ற துணை தலைவரை மனதார வாழ்த்துவதுதான் சரியானது.
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இதே நிலைதான்.
ஏன் துளிர் அரங்கில் கூட்டம் போட்டது போன்று ஒரு கூட்டம் போட்டு துணை தலைவரை ஒருமனதாக தேர்வு செய்யவேண்டியதுதானே?
ஒற்றுமையாக, ஒருமனதாக என்று சொன்னால்தான் உங்களுக்கு பிடிக்காதே!
ஒ , ஜனநாயக உரிமை என்று இதையும் விட்டுவிடீர்களா?
வினை விதித்தவன் வினை அறுப்பான். தினை விதித்தவன் தினையையே அறுப்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross