பொருள் : தீமையை பரவலாக்கும் அபாயம் !! posted byArabi Haja (Hong Kong)[31 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12639
தம்பி சாளை பஷீர் பதிவு செய்துள்ள கருத்தை நானும் ஆதரிக்கிறேன். நமதூரில் ஒரு ஊழல் கண்காணிப்பு குழு (Watch Dog அமைப்பு) உருவாக்கப்பட வேண்டும். அது நகராட்சி நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அரசின் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடையும் வழிமுறைகளை கண்காணிக்க வேண்டும்.
சென்ற முறை 'அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில்' ஒதுக்கப்பட்ட நிதி முறையாக மக்கள் (குறிப்பாக ஏழை எளிய மக்கள்) நல திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல், மன்ற உறுப்பினர்களும், ஆண்ட (தி. மு. க ) கட்சி நகர நிர்வாகிகளும் பிரித்து பங்கு போட்டதை, ஐயா. திருத்துவ ராஜ் அவர்கள் ஐ. ஐ. எம். நடாத்திய 'நகராட்சி நிர்வாகம்- ஒரு அலசல் இல் வேதனையுடன் வெளிப்படுத்தியதை நாம் அனைவரும் கேட்டோம்.
இங்கே சில விவரம் தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்யும் சில பரிதாபத்திற்குரிய சகோதரர்கள், அரைத்ததை அரைப்பதாக எழுதுவது, ஆலோசனை கூறுவதும் ஏற்புடையதல்ல.
இந்த தீமை உங்கள் வீடுகளை, மக்களை சூழும் வரை உங்களுக்கு கவலை இல்லை. ஆனால் சமூக பிரஞ்சை உள்ளோர் இதை நாளைய தலைமுறையை சீரழிக்கும் காரணியாக பார்ப்பர்.
டாக்டர் கே.வீ. எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள், தீமையை இனம் காணுவதும், அதை தீமைதான் என்று மக்களிடம் அடிக்கடி வலியுறுத்தி புரியவைப்பதும், தீமையை தடுப்பதற்கான முதல் காரணி என்பார். அதை செய்ய தவறுமேயானால் மக்கள் தீமைக்கு பழக்கப்பட்டு அதை ஏற்கும் மனோநிலைக்கு வந்து விடுவர் என்பார். இது 'நஹ்யு அணில் முன்கரி' (தீமையை தடுத்து நிறுத்துவதி) ன் முக்கிய படித்தரம் என்பார்.
இதுதான் இன்றும் இந்த ஊரில் நடக்கிறது. தம்பி குளம் ஷுஐபும் 'இதுதான் நேற்றும் (காதிரிக்கு)நடந்தது. இன்றும் நடந்துள்ளது. என்கிறார். இந்த தீமையை- நன்மை என- ஏற்போமா ? நடக்க அனுமதித்து விடுவோமா ?
இந்த வலைய தல நண்பர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். காரணம் அவர்கள் நகரில் அரங்கேறும் பல நிகழ்வுகளை மக்கள் பார்வைக்கும் அவர்களின் கருத்திற்கும் துணிந்து அனுமதிக்கின்றனர். இது தீமையை நாடுவோரை, அதை துணிந்து செய்வதை தடுக்கும் வழி முறை.
எங்களில் 'யாருக்கும் வெட்கமில்லை' என்றும் 'ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?' எனும் மனோ நிலையை உருவாக்க முற்படுவோமேயானால், நமது அடுத்த தலைமுறை நம்மை நிச்சயம் மன்னிக்காது.
எனவே தயவு செய்து இந்த வலைய தளத்தில் தீமையை அழிக்கும் ஆலோசனைகளை பதியும் சகோதர்களை உற்சாகப்படுத்தாவிட்டலும் பரவாயில்லை - உதாசீனப்படுத்தாதீர்.
இந்த ஊருக்கு அடிப்படை பள்ளி கல்வியை ஆண் பெண் பாலாறுக்கு அளிக்கவும், ஊருக்கு குடிநீர் திட்டத்தை கொண்டுவரவும், பள்ளிவாயில்கள் கட்டவும், இன்னும் ஊருக்கு நல்ல பல நன்மைகளை நிறைவேற்ற தங்கள் பொருளை அள்ளித்தந்த ஒரு கண்ணிய மிக்க வணிக குழுமம், இன்று அந்த குடும்பத்தில் தோன்றிய சில [edited] கண்ணியம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி தீமைக்கு பகிரங்கமாக வாரி இறைக்கப்படுகிறது. இது இதை நிறுவிய அந்த பெரியவர்களுக்கு செய்யும் மாபெரும் அநீதி. இனியும் இதை விட்டு வைக்காமல், தடுத்து நிறுத்த அந்த குடும்பத்தார் முன்வரவேண்டும் என்பதை என் வேண்டு கோளாக வைக்க விரும்புகிறேன்.
எது எப்படியாயினும், காயல்.காம் உண்மையை வெளிக்கொணர்வதில் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross