Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byCNash (Makkah )[31 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12649
இந்த செய்தியை போடுவதால் என்ன லாபம், வீண் சச்சரவுகள்தான் வரும் என்று ஒரு கூட்டம் எப்போதும் போல அவர்களுக்கு மட்டும்தான் ஒற்றுமை சொந்தம் என்பது போல கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்!! இந்த லாபம் நஷ்டம் சச்சரவு கணக்கு பார்ப்பது என்பது ஊர் பிரச்சனைகளில் மட்டுமே, ஆனால் தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிப்போ, தாங்கள் சார்திருக்கும் கொள்கைக்கும், கட்சிக்கும் எதிராக எது நடந்தாலும் முந்திக்கொண்டு மூக்கை நுழைப்பார்கள்... அதற்க்கு எந்த பாதிப்பும் வராத வரை அவர்களுக்கு மும்தாஜை காணோம், சூரியனை காணோம் என்ற செய்திகள் மட்டுமே அவர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும்!!
இன்னும் சிலருக்கு பெரியவர்கள் போஸ்ட் கம்பம் பக்கத்தில் இருந்து போஸ் கொடுக்கும் செய்தி தித்திக்கும்....
மழை நீர் தேங்கி நிற்பதை தலைவர் என்ற முறையில் பார்வை இட சென்றால் விளம்பரம்... மீடியாலே வருவதற்கு செல்கிறார் என்று கேலி நக்கீரன் தினதந்தி என்று கிண்டல்!!!
எவன் எக்கேடு கெட்டும் போகட்டும்.. ஊரை ஒரு விலை வைத்து வாங்கினாலும் ஒற்றுமை மட்டும் கெட கூடாது!! என்ன ஒரு அக்கறை!! பள்ளியில் செருப்பு காணோம் என்று செய்தி போட்டால் குதுகலிக்கும் அன்பர்கள் தன்மானம் சிலரால் கொள்ளை அடிக்கப்பட்டு காணமல் போய் கொண்டு இருக்கிறது என்று செய்தி வரும்போது எரிச்சல் வருகிறது.
இணையதளத்தையும் அதன் ஆசிரியரையும் சாடல், நடுநிலை தவறிய முத்திரை!!!! ...
முதலில் ஒன்றை நினைவில் பதித்து கொள்ளுங்கள்... இது பொருளாதார தேவையை நிறைவேற்ற, வியாபார நோக்கில் நடத்தப்படும் இணையதளம் இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு தெரியாவிட்டாலும்.. இதன் தொடர்பில் உள்ள உங்கள் தோழர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை கொட்டுங்கள்!!
உங்கள் விருப்ப செய்தி மட்டும்தான் போடணும் என்றால் தேவைபடுவோர் தாங்களுக்கு தாங்களே BLOG அமைத்து பார்த்துகொள்ளலாமே!!! எதற்கு சமூக அக்கறை உள்ள செய்திகள், அதனால் தொல்லைகள்!!! ஏன்? இது போன்ற காயல் இணையதளங்கள் பலரின் கண்களை திறந்ததுதான் இன்று சிலரின் கண்களை உறுத்துகிறதா?
நண்பர் ஹபீப் ரஹ்மான் நீங்கள் கூட பல சமயம் தேர்தல் செய்தியால் வெறுப்பு அடைகிறீர்கள்... ஆனால் உங்கள் கருத்துகள் எல்லாம் தேர்தல் செய்தி வந்த பிறகுதானே காண முடிகிறது.. மற்ற செய்திகளுக்கெல்லாம் கருத்து எழுதாதவர்... தேர்தலுக்கு மட்டும் விஷேசமாக கருத்து பதிவு செய்து தேர்தலில் போட்டி இட்ட தலைவியை ஒதுங்கி கொள்ளுகள் என்று அறிவுரை சொல்லும் வரை போன உங்கள் கருத்துக்கள் எல்லாம் மதிக்கப்பட்டு பிரசுரம் செய்யபடனும் ஆனால் அதற்கு எதிரானவர்கள் சொல்லும் நியாயமான கருத்துக்களால் உங்களுக்கு கருத்து பகுதியே கசக்கிறது இப்போது!!!
அப்படி என்றால் யார்தான் இது போன்ற அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும்? இதுபோன்ற பணம் படைத்தவர்கள் கையில் உண்மையை அடகு வைத்து தான் நம் ஒற்றுமையை வாங்கனுமா? 5வருடம் அரசியல் சாக்கடையில் மூழ்கி பதவிகளை பகடைகளாக மாற்றி கொண்டு நம்மை கொள்ளை அடிக்கும் அவர்களுக்கு நாம் கூட 5 வருடம் சம்பாதித்தது போதாதா அடுத்தவன் சம்பாதிக்கட்டும் என்று கேட்கும் அளவிற்குதான் கொள்ளையை கூட சம்பாத்தியம் என்ற பேரில் ஒரு கொள்கையாக மாற்றி நற்சான்றிதழ் கொடுக்க பழகி இருக்கிறோம்!!
இதற்கு என்னதான் முடிவு எல்லோரும் சிந்தித்து நல்ல உறுப்பினர்களை தேர்தெடுக்க முயற்சித்து முடிவாக நம் கையில் கரும்புள்ளி வைத்து ஒட்டு போட்டு விட்டு அந்த கருப்பு புள்ளி அழியும் முன்னே நமக்கே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அழிக்க துணிந்து விட்ட சில கருப்பாடுகளை களை எடுப்பது யார்?
...இவர்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி சத்தியம் செய்ததை அவர்கள் மறக்கலாம்... நாமும் சேர்ந்து மறக்கணுமா!! மக்கள் விழிப்பதற்கு இணையதளம் ஒரு தளமாக இருப்பது கூடவா சிலருக்கு கண்ணை உறுத்துகிறது!!!
நடக்கின்ற நிகழ்வுகளை கேட்கும்போது, சில மனிதர்கள் ஏன் இப்படி தரம் தாழ்கிறார்கள்!! அல்லாஹ் அவர்களை அந்தஸ்தில் உயர்த்தி வைத்தும் தாங்கள் கைகளாலே தீங்கை பணம் செலவழித்து வாங்கும் இவர்களை பற்றி என்னதான் சொல்லுவது!!
அரசியலில் மூழ்கி போனவர்களுக்கு தேர்தல் என்பது மூலதனம்.. மற்ற ஐந்து வருடங்கள் அறுவடை நாட்கள்!! ஆனால் இதுபோன்ற அறியாமையில் மூழ்கி போன பணக்காரருக்கு.... என்ன சொல்லுவது....? சந்தனம் மிஞ்சினா.................. ஆனால் இவரோ மிஞ்சிய சந்தனத்தை சாக்கடையில் தடவுகிறார்.... சாக்கடை மணக்குமா? ....இல்லை சந்தனம் நாறுமா? பொருத்து இருந்து பார்ப்போம்.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு செல்வத்தை கொடுக்கிறான்.. அதன் மூலம் பல செல்வந்தர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்து அவனுடைய பொருத்தத்தை பெற்றவர்களாக சுவர்கத்தில் நுழைவார்கள்... அதே செல்வத்தை சிலருக்கு சோதனையாக ஆக்கி இருக்கிறான்... அச்சோதனைகுள்ளானவர்களில் ஒருவராக நம் சகோதரரும் தம் செல்வத்தினால் மறுமையில் இழிவடைந்து நிற்க கூடாதே என்ற நல்லெண்ணத்தில் கூறுகிறோம்.
அத்தகையோருக்கு உடன் இருப்போர் உலக லாபத்திற்காக இவ்வுலக நன்மைகளை மட்டுமே எடுத்து சொல்லி மறுமையை மறக்கடிக்க செய்கின்றனர்... அவருடைய இரு உலக நன்மையை நாடும் ஒரு சிலர் இந்த தீமைகளை (உண்மையில் அவர் அவ்வாறு நடந்து இருந்தால் உங்களுக்கும் தெளிவாக தெரியும்பட்சத்தில்) எடுத்து சொல்லி மறுமை வெற்றியை நோக்கி அழைத்து செல்லுங்கள்!!!
அல்லாஹ் உடைய பாதையில் உங்கள் பொருட்களை செலவு செய்யுங்கள் படைத்தவனின் அருளும் பயன் அடைந்தவர்களில் துவாவும் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு துணை நிக்கும் .. இந்த பச்சோந்திகள் இன்று உங்களுடன் இருக்கும் நாளை வேறு மரம் காணும் போது நிறமும் கூடவே மாறும்..... உங்களை நீங்கள் புரிந்து கொள்ளுகள்.... பலத்தையும் பலவீனத்தையும் சேர்த்து!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross