இம்மை வாழ்விலே அல்லாஹ்! அவர்களுக்கு சோதனைகளை......... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[31 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12660
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த செய்திகளை வலைத்தளத்திலே படிக்கும்போதும் , பிறர் சொல்ல காதால் கேட்கும்போதும் மனம் வேதனை அடைகிறது.
இவை எல்லாம் நடப்பதற்கு காரணம் மக்களிடம் வெட்கம் (ஹயா) என்பது இல்லை - வெட்கம் ஈமானில் ஒரு பகுதி என்பதை மறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
மக்களில் பெரும்பாலோர் மார்க்கத்திற்கு கட்டுப்படுவதில்லை, மார்க்க அறிவை முறையாக கற்பது இல்லை ஆனால் மார்க்கம் பற்றி மிக அழகாக பேசுவார்கள்.
சம்பாத்தியம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை - வருவாய் வந்தால் சரிதான் என்றிருக்கிறார்கள் - இந்த நிலை நீடித்தால் அவர்களின் இம்மை - மறுமை வாழ்வு என்னவாகும் ? மக்களே! சிந்தியுங்கள்!!!.
-------------------------------------------------
காயல்பட்டணம்.காம் :
காயல்பட்டணம்.காம் என்ற இந்த வலைத்தளம் எல்லா தரப்பு செய்திகளையும் தருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை - ஆனால் சில செய்திகள் / கருத்துக்கள் - சட்ட சிக்கலை தரக்கூடியவைகளை கடந்த தேர்தல் காலத்தில் தவிர்த்திருக்கலாம் / தவிர்க்கப்பட வேண்டியவையே.
சில சகோதரர்கள் வலைத்தளங்களிலே எழுதுகிறார்கள் / வேண்டுகிறார்கள் தேர்தல்தான் முடிந்து விட்டதே! இனிமேல் எதற்காக இந்த செய்திகளைப் பற்றி எழுதி மக்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று?.
சகோதரர்களே! அப்படி நீங்கள் நினைப்பது தவறு - தேர்தலுக்கு முன்பு எழுதியது - ஒருவேளை! போட்டியிடுபவர்களுக்கு விளம்பரமாக கூட அமைந்துவிட வாய்ப்பு உண்டு - ஆனால் இன்று தேர்தல் முடிந்த பின் வரக்கூடிய செய்திகள்தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது / அமையவும் வேண்டும்.
அதனால் இப்பொழுது நகர்மன்றத்தை / அதன் அங்கத்தினர்களை பற்றிய செய்திகள் நிறைய வரவும் பயனுள்ளதாக அமையவும் நாம் எதிர்பார்க்க வேண்டும் - வலைத் தளங்களும் தவறாது, குறைவின்றி தந்து அவைகளில் உள்ள நல்லவை , கெட்டவைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
இருந்த போதிலும் அவசியமற்ற - அல்லது சட்ட சிக்கலை உண்டுபண்ணுகிற செய்திகளை கவனமாக பார்த்து அவைகளை வெளியிடாது தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
-----------------------------------------------
14 உறுப்பினர்களும் அல்ல :
14 உறுப்பினர்களும் விலை போய்விட்டதாக சொல்கிறார்கள் அந்த செய்தி தவறாகவே தெரிகிறது.
ஓரிரு உறுப்பினர் விலை போகவில்லை என்பதாகவும் ஓட்டுப்போட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது - ஓட்டுப்போட்டதில் தவறு இல்லை ஆனால் விலை போனால்தான் தப்பு.
அதனால் தயவு செய்து எல்லோரும் 14 உறுப்பினர்கள் என்று அனைவரையும் குற்றம் சொல்லி பாவத்தை சுமக்க வேண்டாம்.
--------------------------------------------------
அல்லாஹ்வின் தண்டனை :
இலஞ்சம் வாங்க மாட்டேன் / கொடுக்க விடமாட்டேன் என்று இறைவன் மேல் ஆணையிட்டு மக்களிடம் ஓட்டு பெற்று - வெற்றிபெற்ற பின்பும் அதே சத்தியத்தை மக்கள் முன்னிலையிலே உறுதிபடுத்திவிட்டு - சத்தியத்திற்கு மாறு செய்தால் அவர்களுக்கு இறைவனால் தண்டனை இந்த உலகிலேயே அதுவும் அவர்களுடைய இந்த ஐந்துவருட பதவி காலத்திலேயே கிடைக்கும் / கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
இந்த துணைத் தலைவர் தேர்தல் மட்டுமல்ல - நகராட்சித் தேர்தலிலும் யார், யார் எல்லாம் ஓட்டுக்காக பணம் கொடுத்தார்களோ அவர்களுக்கும் - தான் செய்த தவறு மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக / மறைப்பதற்காக அடுத்தவன்தான் இந்த தவறுகளை செய்தான் / செய்கிறான் என்று நாடகமாடி மக்களை திசை திருப்ப செய்தவர்களுக்கும் அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும் / கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
--------------------------------------------------
சாபமிடுவதேன் :
ஊரும் , ஊர் மக்களும் அனுபவித்து வருகின்ற துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் - வருங்காலத்தில் நமது சந்ததியினர் இந்த துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று எண்ணிய மக்களுக்கு - தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களின் உறுதிமொழி மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது.
ஆனால் இப்பொழுது நடந்ததோ? நேர்மாற்றமான செயல் மட்டுமில்லாமல் - வருங்காலமும் நம்பிக்கையின்மையை அளிக்கும்போது அப்படி துரோகம் செய்தவர்கள் மீது சாபமிடாமல் என்ன செய்ய முடியும்.
அவர்களுடைய மறுமை வாழ்வு சிறக்கட்டும் - ஆனால் அவர்களின் இம்மை வாழ்விலே அல்லாஹ்! அவர்களுக்கு கடுமையான சோதனைகளை கொடுத்து அதன்மூலம் மற்றவர்களும் படிப்பினை பெறுவார்களாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross