KOTW - சொல்ல வந்ததை தையிரியத்துடன் சொல்லுங்களேன்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[01 November 2011] IP: 98.*.*.* United States | Comment Reference Number: 12677
எனக்கு ஒரு ஆச்சர்யம்... துணை தலைவர் தேர்தலில் ஒரு பெரிய பாலிட்டிக்ஸ் நடந்து இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதை பற்றிய செய்தி/விமர்சனம் தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மீடியா பப்ளிஷ் பண்ணாமல் இருக்க முடியுமா. அதில் உண்மை இருக்கின்றது என்று நன்றாக அறிந்தும், வேண்டும் என்றே அதை எதிர்கிறார்கள் அல்லது உடனே KOTW க்கு அறிவுரை கூறுகிறார்கள். வாஹித் காக்கா சொன்னது போல்... உண்மை வெளிவரக் கூடாது என்று பயப்படுகிறவர்கள்தான் இந்த மாதிரி செய்தியை எப்பொழுதும் எதிர்ப்பார்கள்... எதிர்த்து கொண்டும் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. அல்லது அதற்க்கு எதாவது ஒரு சாயம் பூசி விடுகிறார்கள்.
குறைந்த பட்சம், KOTWவின் சமுதாய அக்கறையை பாராட்டாவிட்டாலும் கூட பரவாயில்லை இது போன்ற வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம் (நக்கீரனில் சேர்ந்து விடுங்கள் என்ற நய்யாண்டி வேறு) என்று கூறி அவர்களுடைய 'freedom of speech ' யில் தலையிடுவது முறையில்லை என்று நினைக்கிறேன்.
இதே செய்தியை (சல்லியை அள்ளி வீசிய சண்டியரை/சென்னை ஆண்டவர் பற்றியும், கழுதை பேரத்தில் சோரம் போன நகர்மன்ற உறுப்பினர்களை பற்றியும்) பட்டவர்த்தமாக ஏற்கனவே மன தைரியத்துடன் நமதூரின் மற்றொரு இணையத்தளமும் டீடைலாக அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
என்னுடைய ஒரே வருத்தம் பல வருடங்களாக இயங்கி வரும் நமது இந்த KOTW இணையதளம், தான் சொல்ல வந்த விசயத்தை (யாருக்கோ அல்லது எதுக்கோ பயந்து) உண்மையை உரைக்க சொல்லாமல் சூசகமாக சொல்லுவது ஏன் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நியூஸ் ரிபோர்ட்டர்க்கு நடந்த விசயங்களை ஊர்ஜிதபடுத்துவட்கு நேரம் இல்லாமல் கூட இருந்து இருக்கலாம். அல்லது சண்டியாரால்/ஊர் முழுங்கி போன்றவர்களால் மிரட்ட படலாம் என்ற அச்சம் கூட இருந்து இருக்கலாம்.
எது எப்படியோ, நீங்கள் அறிந்த உண்மையை தையிரியத்துடன் வெளியிடுங்கள். இறைவன் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கிறான். சத்தியத்தை மற்றும் உண்மையை வெளிக்கொணர்வது மீடியாவாகிய உங்களுடைய தலையாய கடமை என்பதனை என்றும் மறந்து விடாதீர்கள். "நியாயத்தை" விரும்பும் எல்லோரும் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருப்பார்கள்.
"இவைகள் ஒழிய ஐக்கிய பேரவையை மாற்றி - சுன்னத்துவல் ஜமாஅத் ஐக்கிய பேரவையாக மாற்ற வேண்டும், இதுதான் நல் வழி" என்று ஒரு அன்பர் சொல்லி இருக்கிறார். முதலில் அது ஒரு ஊர் நலம் நாடும், நியாயவான்கள் (அது சுன்னத்துவல் ஜமாஅத் ஆட்களாக இருந்தால் கூட பரவா இல்லை) நல்லவர்கள் நிறைந்த சத்தியத்துக்கு மட்டும் தலைசாய்க்கின்ற மாமன்றாமாக மாத்துங்களேன்.
After reading this news, its very obvious that there is a big man's or groups hand behind this vice president election who pumped hell lot of money in bribing the fellow cousellors. So they will be remote controlling this vice president (puppet of that rich man or political party???) of our municipality & guess they will be giving pressure to our municipality president.
I hope the general public, unbiased orgs/association & media will not be deaf & dumb on this bribing counsellors, sandiyars puppets...who gonna bottlneck on kayal's welfare measures from our municipality president. Let us wait & see!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross