Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[02 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12775
இவர்கள் ஏதோ உதய சூரியன் சின்னத்தில் நின்று, தி.மு.க விற்கு ஒட்டு போடச்சொல்லி, நகரமன்ற உறுப்பினர்கள் தி. மு. க. துணைத் தலைவரை தேர்ந்தெடுத்த மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்தும் முயற்சி.
Too Little Too late. துணைத் தலைவர் தேர்தலுக்கு முன் அல்லவா இவர்கள் தங்கள் வேட்பாளரை தி.மு.க. சார்பில் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.
யாரை ஏமாற்ற, யாரை திருப்பதி படுத்த,இந்த நாடகம்?.
ஊர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாடகத்தின் Producer யார்? Director யார்? Hero யார்? என்று. முன்கதவு வழியாக் வரமுடியாமல் போய்விட்டதனால், பின் கதவு வழியாக வருகிறார்கள் எனபது ஊர் அறிந்த இரகசியம்.
தி.மு.க. வின் தலைமையை திருப்பதி படுத்தும் செயல்களில் இறங்குவதை காட்டிலும், அல்லாஹ்வை திருப்பதி படுத்தும் செயலில் இறங்குங்கள், உங்கள் பொருளாதாரத்தை செலவிடுங்கள். மக்களுடைய "து-ஆ" வும், அல்லாஹிவின் திருப் பொருத்தமும் கிடைக்கும்.
சுயநல மில்லாத உண்மையான் தி.மு.க. தொண்டர்களுக்கு இது ஒரு தலை குனிவு. கடந்த இடைதேர்தலில் அ.தி.மு.க வுக்குக் கிடைத்த ஓட்டை விட கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதற்க்கு 3500 ஒட்டு கூடுதலாகவே கிடைத்திருக்கிறது. இதே பாதையில் நகர தி.மு.க வின் செயல்பாடுகள் இருக்குமேயானால், தி. மு.க. அதன் அபிமானிகளின் ஓட்டை கூடிய விரைவில் அது இழக்க நேரிடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross