Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byCNash (Makkah)[02 November 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12779
அப்படி ஊரு மேல என்ன தான் கோபம் !!! இப்படி போஸ்டர் அடிச்சி ஊருக்கு கிடைக்க வேண்டிய அரசு நல திட்டங்களை ஒன்னு வராமே பாழாக்கனுமாக்கும்!! உருப்படும்!!! இதுக்கு தான் மதுரைலே தோத்துட்டு மானாமதுரைலே மீசையே முறுக்குவாங்க என்று சொல்லுவங்களோ!!!
கலைஞரே பட்ட ரணம் இன்னும் ஆறாமல் இருக்கிறார் ..இங்கே கலைஞர் பட்டணமாம்!!! ..சட்டசபை தோல்வி, கோர்ட், கேஸ், ஜெயில் திகார் என்று தலைவர் அலைஞ்சி எப்போ தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா நேரத்துலே ....10 மாநகராட்சியும் சேர்த்து அடி கொடுத்து மக்கள் உட்கார வச்சி இருக்காங்க இங்கே போஸ்டர் வேண்டி கிடக்கக்கும்!!!
ஒற்றுமைகாக நிற்க வில்லை என்று சொல்றீங்களே... போன (2006 ) நகராட்சி தேர்தல் நின்ற இடத்தில பட்ட அடியை கொஞ்சம் பார்கிறீங்களா!!!
11 ம் வர்டுலே துணைதலைவர் இரண்டு முறையும் சுயேட்சையா நின்று அவருடைய சேவையின் மூலம், தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றார்.. 2006 ஆண்டு தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற உங்கள் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 3ம் இடத்திற்கு போயிட்டார்!!!
10 வார்டில் பதுருல் ஹக் (சுயேட்சை) 2 வது இடம் ....உங்க உதயசூரியனுக்கு 3 வது இடம் .....
6 ம் வார்டில் இங்கே போஸ்டர்லே இருக்கிற அன்பர்தான் உதயசூரியனில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் இடம் தோத்துபோனார் !!!!!
.
13 வார்டில்- இரட்டை இலை சின்னத்தில் நின்ற வேட்பாளர் - சொளுக்கு வெற்றிபெற்றார். உங்க திமுக விற்கு அங்கே 5 வது இடம் !!!
இது எல்லாம் ஊருக்குள்ளே பட்ட அடி ...புற நகர் இல்லை .
7 இடத்தில நின்று 4 இடத்தில மரண அடி பட்டது தான் உங்கள் சாதனை .. இதற்க்கு பயந்து தான் இப்போ ஒதுங்கி இருந்தீங்க என்று எல்லோருக்கும் தெரியும் ....போஸ்டர் ஓட்டுனாப்பலே பழைய காயம் மறஞ்சிடுமா!!!
கலைஞர் பட்டணமாம்!!! அதுலாம் ஜாஹிலியா காலத்தோட முடிஞ்சி போச்சி!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross