நிரந்தர பதவிக்கான பரீட்சை posted bymusthak ahamed (mumbai)[02 November 2011] IP: 49.*.*.* India | Comment Reference Number: 12782
எனது அருமை நண்பர் மொய்தீன்.................துணை தலைவர் ..........வாழ்த்துக்கள்.
உங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வியூகம் உங்களுக்கு புரிகின்றதா என்று தெரியவில்லை.
ஓன்று மட்டும் உங்கள் இதயத்தில் பதிவு செய்ய ஆசைபடுகிறேன்.
நீங்கள் இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கண்டிப்பாய் நீங்கள் ஒரு கட்சியை சேர்ந்தவர் என்பதால் இல்லை என்பதை உங்கள் மனம் அறியும் என்று நம்புகிறேன். சேவை செய்தவர் இனியும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஜமாத்தில் உள்ள பெரியவர்கள், பெண்கள் நண்பர்கள் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
மும்பை மொய்தீன் என்பது மிக பெரிய அடையாளமாக உங்களுக்கு இறைவன் வழங்கி உள்ளான். இனியும் மிகபெரிய கவுரவம், உண்மையான சிறப்புக்கள் வந்து சேர உங்கள் உண்மையான சேவை மட்டுமே காரணமாக இருக்கும். தயவு செய்து எந்த கட்சி சால்வையிலும் உங்கள் சொந்த முகத்தை தொலைத்து விடாதீர்கள்.
உண்மையை நேர்மையாய் சொல்லவேண்டும் என்றால் இந்த உங்களின் வெற்றிப்பின்னணியில் நடந்த அனைத்தையும் அல்லாஹ்வும், நீங்களும் மேலும் இதில் தொடர்பு கொண்டவர்களும் நன்கு அறீவீர்கள். இது தான் உங்களின் வெற்றி என்ற மாய வலை உங்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. ஆனால் கொண்டாட்டங்கள் மூலம் நீங்கள் உங்கள் சுய அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் உங்கள் எண்ணம் மக்கள் சேவை தான் என்றால். இந்த பயணம் உங்களை நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய விடாது.
எனது அருமை நண்பரே , நீங்கள் உங்களை உணருங்கள்.......
எதற்காக வேண்டி நீங்கள் நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்துடுக்கப்படீர்கள் என்பதை நீங்களும் மக்களும் அறீவீர்கள். ஆனால் நீங்கள் தற்போது எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் மனசாட்சி அறியும். இருப்பினும்,
நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து செயல் படுங்கள். நகர் மன்ற தலைவருடன் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள். நல்ல திட்டங்களை எப்போதும் ஆதரியுங்கள். யார் தடுத்தாலும் செவிசாய்க்காதீர்கள். உங்கள் முடிவுகளை நீங்களே தீர்மானியுங்கள்.
உங்களுக்கு இன்னும் வயதும் திறமையும் இருக்கிறது. உங்கள் செயல்களே உங்களுக்கு பெருமை சேர்க்கும்.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பதவி அமானிதம் என்பதை உணருங்கள்.
உங்களுக்கான கேள்விகள் நாளை மறுமையில் தயாராக இருக்கிறது. அதற்கான பதில்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
யாரும் தலையிடமுடியாத, நிரந்தர பதவி தயாராய் இருக்கிறது. ஆனால் இந்த ஊர் மக்கள் சாட்சிகள் மட்டுமே அன்று அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
எங்களை உங்களின் நிரந்தர பதவிக்கான சாட்சிகளாய் மாற்ற வேண்டியது உங்கள் கைகளிலே உள்ளது...................
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross