தொலை பேசி எண்களை பொது மக்களுக்கு அறியத் தந்தால் ........... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[02 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12810
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது நகர்மன்றத்திற்கு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க - அதற்கு - உரிமையுடைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் - பொது மக்களல்ல துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தது.
இந்த தேர்ந்தெடுப்புக்கு யாரும் உரிமைக் கொண்டாடவும் வேண்டாம் எதையும் திசைத் திருப்பவும் வேண்டாம்.
நம்ம ஊரைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் நிலவுகிற அத்தனை வீண் விளையாட்டுகளும் - பெருமைக்கும் , பந்தாவுக்குமேத் தவிர சில சகோதரர்கள் நினைப்பது போல் சம்பாதிப்பதற்கோ / பதவிக்கோ அல்ல.
அதே நேரத்தில் பெருமைக்காகவும், பந்தாவுக்காகவும் ஊரையும் , ஊர் மக்களையும் நாசப்படுத்துவது அழகல்ல.
நமது நகராட்சித் தேர்தலும் மற்றும் துணைத் தலைவர் தேர்தலும் அரசியல் கட்சிகள் சார்பில்லாத சுயேச்சையான தேர்வுகளாக நடைபெற்றதால் தயவு செய்து யாரும் இதில் விவாதங்கள் செய்ய வேண்டாம்.
இதில் யார் விவாதம் செய்தாலும் அவைகள் எல்லாம் நம்மிடையே மனக்கசப்பைத்தான் உண்டுபண்ணுமேத் தவிர - எந்த நண்மையையும் தரப்போவதில்லை.
மேலும் எந்த அரசியல் கட்சியானாலும் நமதூருக்கு எந்த ஒரு பிரத்தியேகமான திட்டங்களையும் கொண்டு வரப்போகிறதில்லை - கடந்த ஆட்சியிலும் சரி, அதற்கு முந்திய ஆட்சிகளிலும் சரி.
உண்மையிலேயே ஆளும் கட்சியில் இருந்தால் நமதூருக்கு நன்மை கிடைக்கும் என்பதெல்லாம் அரசியல் கட்சிக்காரர்களின் கண் கட்டு வித்தை - ஆனால் ஓன்று மட்டும் உண்மை - ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு வேண்டுமானால் வருவாயைப் பெருக்க இது பாலமாக அமையும் என்பது.
ஆகையால் அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் நேர்மையாக நகர்மன்றம் நடைபெற்றால் வெற்றிபெறலாம்.
100 % ஊழல் அற்றதாக ஆகிவிடும் :
தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒற்றுமையாக செயல்பட்டு - எல்லாவிதத்திலும் ஒருவருக்கொருவர் கலந்து கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்து செயல்பட்டால் - நகர்மன்ற பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும் - நல்ல முன்னேற்றம் காணலாம்.
நகர்மன்ற அங்கத்தினர்களே!
நமக்கு தற்போதைக்கு வேண்டியதெல்லாம் " ஊழல் இல்லாத நகராட்சி நிர்வாகம் மட்டுமே " இதை மட்டும் குறிக்கோளாக வைத்து நீங்கள் , நிர்வாகம் செய்தால் இன்ஷா அல்லாஹ்! இரண்டு வருடத்திற்குள்ளாக நகராட்சி நிர்வாகம் 100 % ஊழல் அற்றதாக ஆகிவிடும்.
அதன் பின் நீங்கள் நகருக்கு தேவையான திட்டங்களை படிப்படியாக கொண்டு வரலாம் - எப்போது , ஊழல் அற்ற நிர்வாகம் நடக்கிறதோ அப்போது நமக்கு தேவையான திட்டங்களும் இறைவனருளால் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
மக்கள் அனைவரும் தேர்தல் காலங்களில் ஏற்பட்ட விருப்பு , வெறுப்புக்களை மறந்து ஊரின் நலனை கருத்தில் கொண்டு - நகர்மன்ற அங்கத்தினர்கள் அனைவரும் மக்களின் பிரதிநிதியே என்பதை மனதில் நிறுத்தி - அவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதுடன் - அனுபவமுள்ள மக்கள் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டியது.
தலைவர் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் நகர்மன்றத்திற்கு புதியவர்களாக இருப்பதால் தங்களுக்கு தேவையான நல்ல ஆலோசனைகளை 10 - 15 வருடங்களுக்கு முன்னால் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்த " நேர்மையானவர்களிடம் " அவர்கள் வீடு தேடி சென்று கேட்டுப் பெறுங்கள் .
இப்படி செய்வதானது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் கொடுக்கும் - நல்ல பல திட்டங்களை தீட்டி ஒற்றுமையாக செயல்படுத்தவும் உதவும் - இதன் மூலம் ஊருக்கும் , உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross