Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byALS maama (Kayalpatnam)[02 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12816
சென்ற முறை நடந்த நகாரட்ச்சி தேர்தலில் தி.மு.க சார்பில் நிற்க கேட்ட மும்பை S.M முஹைதீன் க்கு இடம் தரவில்லை தி.மு.க.
சுயேட்ச்சையாக நின்றார் வெற்றிபெற்றார்.
இந்த முறையும் தி.மு.க கட்சி சார்பில் நிற்கவில்லை மும்பை முஹைதீன் அவரின் சேவையின் முத்திரையால் வெற்றிபெற்றதே உண்மை. காயல் நகரின் தி.மு.க வின் துணை தலைவர் என்ற முத்திரையை பதிக்கவில்லை அப்படி இருக்கும் போது மக்களை குழப்பும் புதிய முக மூடி ஏன் அணிவிக்கிறார்கள்?.
நான் தி.மு.க அனுதாபிதான் அதற்காக என் பேனா பொய் சொல்லி எழுதாது. நகராட்ச்சி துணை தலைவர் பதவி ஏற்கும் போது மும்பை முஹிதீன் தி.மு.க வின் வண்ணக்கலவையான கருப்பு,சிகப்பு பார்டர் போட்ட வேஷ்டி கட்டி இருந்தார் அவ்வளவுதான்.
காயல்பட்டணம் கலைஞர் பட்டணமா?, கல்வி பட்டணமா? என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் ஆயிரம் இருக்கும் போது இந்த வீண் விவாதங்களை வளரவிடாமல் இத்துடன் முடித்துகொள்ளலாம்.அதுதான் நமக்கு நல்லது.
A.L.S மாமா( எழுத்தாளர், பொது சேவை)
A.L.S SCHOOL OF ARTS,
K.T.M தெரு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross