Re:இதிலுமா அரசியல்? தொடரட்டும் மூன்றாம் சுற்று posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[03 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 12832
Comment Reference Number: 12831
பார்க்க :
"காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவது - வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் - நிலத்திற்கு கூடுதல் விலை கிடைக்க வழியுள்ளது என்ற பட்சத்தில் - நிலத்தினை மிகக் குறைந்த விலை பெற்றுக்கொண்டு மின்சார வாரியத்திற்கு - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை - விற்றுள்ளது தவறான ஆலோசனையின் பெயரில் தான் என்றே தெரிகிறது. "------------- - இது உங்கள் செய்தி.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் செய்திகள்தான் என்றாலும்
கடைசியாக உள்ள இந்த வரிகள் மட்டும் விமர்சனத்தையும் உங்கள் விஷமத்தனத்தையுமே காட்டுகிறது.
ஊருக்கு செய்யும் நல்ல செயலிலுமா உங்கள் அரசியல் ?
இதில் ஏதாவது ஊழலால் நடைபெற்றதா விமர்சனம் செய்வதற்கு?
உங்களின் செய்திகளின்படியே பல இடங்களில் இலவசமாக அரசுக்கு நிலத்தை வழங்கியதும் தெரியவருகிறது. எந்த அரசு குறைந்த செலவிதான் திட்டங்களை நிறைவேற்ற முன்வரும்.. உங்களின் வாதப்படி, நாம் அதிக விலை கேட்டால், அதன் விளைவாக திட்டம் ஆத்தூருக்கு சென்றால், பிறகு அதற்கும் ஐக்கிய பேரவைமீதுதான் சேற்றை வாரி வீசுவீர்கள். அதற்கும் தனி விமர்சனம் செய்வீர்கள்.
அப்படியானால் லாப நோக்கில் அரசுக்கு நிலத்தை விற்க சொல்கிறீர்களா? அதற்கும் ஒரு விமர்சனம் வரும்.
ஏன் இந்த விரோதம் ? ஏன் இந்த அரசியல் ? எத்துனை நாளைக்கு இது? நீங்களும் கைவிட மாட்டீர்கள்! அவர்களும் கைவிட மாட்டார்கள்!
உங்களின் விரோதம்தான் நகரமன்ற தேர்தலில் எதிரொலித்தது. முதல் சுற்றில் உங்களுக்கு வெற்றி. இரண்டாம் சுற்றில் அவர்களுக்கு வெற்றி. இன்னும் விடுவதாக இல்லை. இப்போது மூன்றாம் சுற்றுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள்.
மொத்தத்தில் நம் ஊர் அழிவுப்பதையில்தான் சென்றுகொண்டு இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross