உணரவே மாட்டார்களா? posted bySeyed Ibrahim (Kayalpatnam)[03 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12856
அன்பிற்குரிய சகோதரர்களே, இச்செய்தியில் அப்படி என்ன தவறு உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.
என்னைப் பொருத்த வரை, பலரைப் போல கண்ணை மூடிக்கொண்டு யாரையும் ஆதரிக்கவும் மாட்டேன். எதிர்க்கவும் மாட்டேன்.
ஐக்கியப் பேரவை சார்பில், துணை மின் நிலையத்திற்கு நிலம் வாங்குதவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டபோதே அதன் அறியாமையை ஒரு பொறுப்புள்ள மீடியாவாக காயல்பட்டணம்.காம் அவர்களிடமே உணர்த்தியிருக்கிறது.
ஒரு மாதத்திற்குள் நிலம் வாங்கிக் கொடுக்கப்படாவிட்டால், துணை மின் நிலையம் ஆத்தூருக்கு மாற்றப்படும் என மின் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டதாக ஐக்கியப் பேரவை தெரிவித்துள்ளதைக் கேள்வியுற்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காயல்பட்டணம்.காம் எழுதிக்கேட்டு அறிந்ததில் என்ன தப்பு? இலவசமாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் மின்வாரியம் பதில் தந்துள்ளது.
உண்மையிலேயே பெரியவர்களை அவமதிக்கும் எண்ணம் காயல்பட்டணம்.காமுககு இருந்து இருந்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலை ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் நேரில் சென்று, அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தேவையே இல்லையே? அப்போதே பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டிருக்கலாமே??
தெரிந்த விபரங்களை யாரும் எடுத்துச்சொல்லலாம். அதில் எந்தத் தப்பும் இல்லை. அது காயல்பட்டணம்.காம் ஆக இருக்கட்டும் அல்லது ஒரு அடிமட்ட காயலனாக இருக்கட்டும்! தனக்குத் தெரிந்த தகவலை, ஊர் நன்மை கருதி சரியான தருணத்தில் காயல்பட்டணம்.காம் பேரவையிடம் தெரிவிக்காமல், இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருந்தால், சில சகோதரர்கள் இன்னும் பக்கம் பக்கமாக கருத்து வெளியிட்டு கரித்து கொட்டியிருப்பார்கள்.
ஒரு செண்ட் நிலத்திற்கு நூறு ரூபாய்தான் தருவாங்களாம் என்று யாரோ சொன்னதை நம்பி, பேரவையின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகள் தமது பணத்தையும் போட்டு, இதர தனவந்தர்களிடமும் சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் திரட்டி இந்த வேலையைச் செய்யும்போது, அதற்கு அவசியமே இல்லை... இவ்வளவு சிரமப்பட்டு பணம் சேர்த்து செய்வதை விட, இலகுவாகவே நாம் செய்துகொள்ளலாம் என்று காயல்பட்டணம்.காம் சொன்னது தப்பு, பெரியவர்களுக்கு அவமரியாதை, பேரவைக்கு எதிர்ப்பு என்றால், பின்னே ஊர் நன்மைக்கு என்னதான் சொல்ல வேண்டுமாம்?
காயல்பட்டணம்.காம் நிர்வாகிகளுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்! நீங்கள் விருப்பு - வெறுப்பின்றி இப்படி செய்திகளை வெளியிடுவதானால் இதுபோன்ற விமர்சனங்களையும், வெறுப்புக்களையும் நீங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!!! ஆனால் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நிச்சயம் நற்கூலி உண்டு. எனவே பொறுமையுடன் களப்பணி செய்யுங்கள்!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross