செய்தி: ‘மெகா‘ நடத்திய “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்” விழிப்புணர்வு பொதுக்கூட்டம்! பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே! : posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM )[12 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13279
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, நடைபெற்ற கூட்டம் நன்றாகவே இருந்தது - அதை ஏற்பாடு செய்த மெகா சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
தேவையற்ற சில பேச்சுக்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் - இன்ஷா அல்லாஹ்! வருங்காலங்களில் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
கூட்ட செயல்பாடுகளில் இளைஞர்களுக்கும் - முதியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை காண முடிந்தது.
------------------------------------------
செயல்கள் யாவும் எண்ணம் படியே! :
விழிப்புணர்வு பெறவேண்டும் என்று விரும்பியவர்களுக்கு இந்த கூட்டத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள வழியும் - வாய்ப்பும் கிடைத்து பயனளித்திருக்கும்.
விமர்சனம் மட்டுமே செய்வோம் என்று விரும்புபவர்களுக்கு ஏதாவது விமர்சன வாசகங்கள் மட்டுமே எட்டியிருக்கும் அது அவர்களுடைய எண்ணத்தின் விளைவாகும்.
மொத்தத்தில் எந்த எண்ணத்தில் இந்த கூட்டத்திற்கு சென்றார்களோ / பார்த்தார்களோ அதை அவர்கள் நிச்சயமாக பெற்றுக் கொண்டார்கள் - செயல்கள் யாவும் அவர்கள் எண்ணம் படியே!.
------------------------------------------
தவறுகளை... இல்லை... இல்லை... தப்புகளை :
நமது நகராட்சியின் தற்போதைய நடவடிக்கையை படம் பிடித்துக்காட்டினார்கள் வார்த்தைகளால் - அவர்கள் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்க ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் நிறைய குறைகள் உண்டென்றாலும் புதியவர்கள் கலக்கமின்றி அவர்கள் பணியை தொடரட்டுமே என்ற எண்ணத்திலே இப்போதைக்கு விட்டு வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
நிர்வாகத்திலே உள்ளவர்கள் அவர்களாகவே திருந்தி பழைய தவறுகளை........... இல்லை......... இல்லை......... தப்புகளை செய்யாதிருந்தால் அது அவர்களுக்கும் நல்லது நமது நகர் மன்றத்திற்கும் நல்லது.
--------------------------------------------
நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே! :
குடிநீர் விநியோகப் பற்றாக்குறைக்கு காரணங்கள் கூறப்பட்டன ..................
தெரு விளக்குகள் எரியாததற்கு காரணங்கள் கூறப்பட்டன ...................
குப்பைகள் முழுமையும் அள்ள முடியாததற்கு காரணங்கள் கூறப்பட்டன ..............
இவைகளுக்கு கூறப்பட்ட காரணங்களில் ஏதாவது மத்திய அரசையோ, மாநில அரசையோ நாடி செய்யவேண்டியதாக உள்ளதா?
இல்லை ஏதாவது அரசு துறைகளிடம் போய் அவைகளுக்காக ஸ்பெஷல் அனுமதியை நாட வேண்டியது இருந்ததா ? அப்படி ஒன்றும் இல்லையே!
எல்லாத்திற்கும் முக்கிய காரணம் முந்திய நகர்மன்ற நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே!
இலஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருந்த அங்கத்தினர்களும், அலுவலர்களுமே முழுக்காரணம்!!
மற்றபடி நம்மிடம் பணம் இல்லாமல் இல்லை - பணம் வேண்டியமட்டும் இருக்கின்றது அதை முறையாக செலுத்தி குடிநீரை விநியோகிக்க - மின் விளக்குகளை எரியவிட - குப்பைகள் முழுவதையும் அள்ளி - நிர்வாகத்தை சீராக நடத்த நேரமில்லை.
உண்மையாக உழைப்பவர்களுக்குதான் நேரம் நிறைய இருக்கும் - இலஞ்சத்தையே தொழிலாக கொண்டவர்களுக்கு ஏது நேரம் ???
-------------------------------------------------
கவனக்குறைவான செயல்பாடுகளே! ஊழல்களே!! :
பணியாளர்களாக வேலைக்கு சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேலைக்கு வராமல் சம்பளம் மட்டும் வாங்குவதும் - சிலர் வெளியிலே வாகனம் ஓட்டுனர்களாக பணி செய்து கொண்டு நகர் மன்றத்திலே சம்பளம் வாங்குவதாகவும் புள்ளி விவரத்துடன் கூறப்பட்டது.
இந்த மாதிரி செய்வது யாருக்கும் தெரியாமல் நடக்குமா? அதுவும் அவர்களுக்கு மேற்பார்வையாளராக உள்ளவருக்கு நிச்சயமாக தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஏதோ ஓரிருநாள் என்றால் தெரியாமல் போக வாய்ப்புண்டு! ஆனால் இது நடப்பதோ மாத கணக்கில்! வருட கணக்கில் அல்லவா ? எங்கனம் தெரியாமல் போகும்.
மேலும் தினமும் வசூலாகும் பணத்தை வங்கியில் அன்றைய தினமே செலுத்தாமல் அந்த பணத்தை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் தொழில் செய்வதும் அம்பலமாகி இருக்கிறது - இதுவும் ஓரிரு நாள் நடந்த சம்பவமல்ல.
இவைகளுக்கெல்லாம் காரணம் நமது நகர்மன்ற அங்கத்தினர்களின் கவனக்குறைவான செயல்பாடுகளே! ஊழல்களே!!
----------------------------------------------
மக்களே!
" தகவல் அறியும் உரிமை சட்டம் " பற்றியும் மேலும் விழிப்புணர்வு ஏற்படக்கூடிய பல விசயங்களையும் கூட்டத்திலே பகிர்ந்துக்கொண்டார்கள் - உண்மையிலேயே அவைகள் எல்லாம் நம் மக்களுக்கு பயனளிக்க கூடியவைகளே.
நம் நகர் மன்றம் நீதியாக , நேர்மையாக நடைபெற வேண்டுமானால் நம் நகர் மன்ற அங்கத்தினர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டும் போதாது நாமும் நேர்மையானவர்களாக நடந்து காட்டுவதுடன் அவர்களுக்கு, எல்லா நல்ல விசயங்களிலும் ஒத்துழைக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் நகர் மன்றம் சிறப்புடன் இயங்க நம் மக்கள் அனைவரும் அவர்களுடன் நல்ல விசயங்களில் ஒத்துழைக்க கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross