Re:நகர்மன்றத் தலைவர் ஆபிதா ந... posted byVilack SMA (Siacun)[13 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 13327
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோதரி தலைவிக்கு ஒரு வேண்டுகோள் . comment ref : 13303 சொன்னதுபோல , ஊரில் இருக்கும் வேகத்தடைகள் .......... இவைகள் வேகத்தடை என்ற பெயரில் இருக்கும் தடுப்புச்சுவர்கள் . பெரும்பாலான இடங்களில் , ஒருசிலர் தன்னிச்சையாக , அவரவர் இஷ்டத்துக்கு இதை கட்டியுள்ளனர் . தயவு செய்து இதை கண்டறிந்து , அவசியம் இல்லாத இடங்களில் இதை அப்புறப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் .
தெருக்களில் , பொது மற்றும் தனியார் விழாக்களில் மேடை போடுவது , ஒலி பெருக்கி வைப்பதில் நகராட்சியின் " கால நிர்ணயத்திற்கு " உட்பட்டு இருக்க ஆணை இடுங்கள் . மீறுபவர்கள் மீது , எந்த கொள்கை உடையவராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுங்கள் .
தெருவில் கற்கள் , மணல் கொட்டி வைத்திருப்பவர்களுக்கு , விரைவில் அதை அப்புரப்படுத்தவில்லையானால் , நகராட்சி மூலம் முகதாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுங்கள் .
நகராட்சியின் லாரி வரும்போது , அதில் குப்பை கொட்டாமல் , மற்ற நேரங்களில் தெருவில் குப்பை கொட்டுபவர்களுக்கு , அவர்கள் வீட்டின் மின் , நீர் இணைப்பை துண்டியுங்கள் .
இவையெல்லாம் நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன " non pollute kayal " இன் ஒரு பகுதி . நகராட்சியின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது , சொந்தபந்தம் , நண்பர்கள் என்று முகதாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுங்கள் .
( இதை படிக்கும் வாசகர்கள் , தயவுசெய்து என் மீது அம்புகளை ஏவாமல் , பொதுவான கண்ணோட்டத்துடன் பாருங்கள் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross