நடைபெற்று முடிந்துள்ள நகர்மன்றத் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆபிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, நகரின் அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாகச் சென்றார்.
காலை 09.00 மணியிலிருந்து மதியம் 02.30 மணி வரை காயல்பட்டினம் அகநகர் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்தார்.
மாலை 04.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை புறநகர் பகுதிகளில் அவர் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவிக்கிறார்.
அகநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை அவர் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்த காட்சிகள் பின்வருமாறு:-
கொச்சியார் தெருவில்...
சொளுக்கார் தெருவில்...
முத்துவாப்பா தைக்கா தெருவில்...
மரைக்கார் பள்ளித் தெருவில்...
அப்பாபள்ளித் தெருவில்...
தீவுத்தெருவில்...
பரிமார் தெருவில்...
அலியார் தெருவில்...
கே.டி.எம். தெருவில்...
சித்தன் தெருவில்...
நெய்னார் தெருவில்...
ஆஸாத் தெருவில்...
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில்...
அம்பல மரைக்கார் தெருவில்...
காட்டு தைக்கா தெருவில்...
தைக்கா தெருவில்...
நகர்மன்றத் தலைவரும் பெண் என்பதால், சென்ற இடங்களிலெல்லாம், வீடுகளிலிருந்த பெண்கள் தம் இல்லங்களிலிருந்து வெளியே வந்து வரவேற்றனர். பல பெண்கள் சால்வை அணிவித்தனர். ஆண்கள் பலர் சால்வை அளித்தனர். ஆங்காங்கே பெண்கள் தம் குழந்தைகளை நகர்மன்றத் தலைவர் கையில் கொடுத்து, அவர் கொஞ்சி விளையாட பார்த்து ரசித்தனர்.
பல இடங்களில், தத்தம் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் குறித்து வாய்மொழியாக கோரிக்கை வைத்தனர். பெரும்பாலானோர், தம் பகுதிகளுக்கு புதிய சாலைகள் தேவையில்லை என்று தெரிவித்தனர். இன்னும் பலர் தம் தெருக்களில் போடப்பட்ட சிமெண்ட் சாலைகளால் அனுதினமும் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதாகவும், அவற்றை அப்புறப்படுத்தி மீண்டும் தார்சாலை தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவை குறித்து, உரிய நேரத்தில் பரிசீலித்து ஆவன செய்வதாக அப்போது நகர்மன்றத் தலைவர் ஆபிதா அவர்களிடம் தெரிவித்தார்.
காலை 09.00 மணிக்கு காயல்பட்டினம் புதுப்பள்ளி சந்தியிலிருந்து புறப்பட்டு, மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு, பிரதான வீதி சென்று, அங்கிருந்து முஹ்யித்தீன் தெரு, குத்துக்கல் தெரு, சதுக்கைத் தெருவில் கொடிமர சிறுநெய்னார் பள்ளி சந்து வழியாக கி.மு.கச்சேரி தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை வழியாக தீவுத்தெரு அரசு பள்ளி வழியே கீழ நெய்னார் தெரு, கே.எஸ்.ஸி. மைதானம் வரை சென்று, அங்கிருந்து பிலால் பள்ளி வரை சென்று திரும்பி, அங்கிருந்து ஆஸாத் தெரு, சித்தன் தெரு வழியே சிறிய குத்பா பள்ளி எதிர் சாலை வழியாக கீழ சித்தன் தெரு, தீவுத்தெரு வழியாக முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை கீழ்ப்பகுதி, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, அப்பா பள்ளித் தெரு, பரிமார் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, வாவு நகர், அலியார் தெரு தென்பகுதி, சின்ன நெசவுத் தெரு, பெரிய நெசவுத் தெரு வழியே பிரதான வீதிக்கு வந்து, அங்கிருந்து புறவழிச் சாலை வழியாக மருத்துவர் தெரு, அரூஸிய்யா பள்ளிவாசல் வழியாக காட்டு தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு, தைக்கா தெரு வரை சென்று, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனையில் மதியம் 02.30 மணியளவில் ஊர்வலம் நிறைவுற்றது.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்.
செய்தியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (13.11.2011 - 23:26hrs) |