காயல்பட்டிணம் ஏ.கே.எம் நகர் இரத்தினபுரியில் அமைந்துள்ள மனவளர்ச்சி குன்றிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கிவரும், துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் 11.11.2011 வெள்ளிக்கிழமையன்று 11 மணி 11 நிமிட நேரத்தில் உலகெங்கும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களும் நலம் பெறவேண்டி துளிர் குழந்தைகளும், பயிற்றுநர்களும் சிறப்புப் பிராத்தனை பாடலை சேர்ந்திசைத்தனர்.
பின்னர், தேசிய தலைவர் மௌலான அபுல்கலாம் ஆஸாத் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய கல்வி தினமான இன்று “கற்போம் கற்பிப்போம்” என்ற உறுதி மொழியினை துளிர் குழந்தைகளும் பயிற்றுநர்களும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு துளிர் பெற்றோர் மன்ற தலைவியும் துளிர் அறங்காவலருமான ஆயிஷா சாகிப்தம்பி அவர்கள் தலைமை ஏற்றார். துளிர் பள்ளி செயலாரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாவட்ட செயலருமான எம்.எல்.சேக்னா லெப்பை முன்னிலை வகித்தார். துளிர் தனவந்தர் குழுவின் பிரதிநிதி எஸ்.ஆஷிகா ஹுமாயுன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
துளிர் நிறுவனர் வழக்கறிஞர் எச்.எம்.அஹமது அப்துல் காதர் ஆலோசனையின் பேரில், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஓருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் செய்திருந்தார். |