காயல்பட்டினம் மகுதூம் பள்ளியில் 11.11.2011, முதல் ஜும்ஆ தொழுகை நடத்தப்படவுள்ளதாக அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை துவக்கமாக ஜும்ஆ தொழுகை நடத்தப்படவுள்ளதையொட்டி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்குத் துவங்கும் இந்நிகழ்ச்சிக்கு, நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் தலைமை தாங்குகிறார். ஹாஃபிழ் ஏ.ஷேக் முஹம்மத் (கிஸார்) கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார். லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ பாழில் பாக்கவீ, இலங்கை கொழும்பு தாருல் ஹதீஸ் இயக்குனர் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மக்கீ நூகுத்தம்பி நன்றி கூற அத்துடன் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைவுறுகிறது. பின்னர் அதே அமர்வில், ஜும்ஆ தொழுகைக்கான முதல் அதானை அன்வர் ஹாஜி ஒலிக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது அதான் மற்றும் மஅஷர் ஆகியவற்றை ஆறாம்பள்ளியின் இமாம் ஹாஜி செய்யித் இப்றாஹீம் வழங்குகிறார்.
நிறைவாக, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஜும்ஆ குத்பா பேருரை நிகழ்த்தி, தொழுகையை வழிநடத்தி, துஆவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் விமரிசையாக செய்து வருகின்றனர்.
தகவல்:
மக்கீ நூஹுத்தம்பி,
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம். |