கேரள மாநிலம் திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், சிற்சிறு மாற்றங்களுடன், அம்மன்றத்தின் பழைய நிர்வாகிகளே மீண்டும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் ஸ்கட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், காயல்பட்டினம் அல்அமீன் துவக்கப்பள்ளி வளாகத்தில், எஸ்.எச்.ஸாலிஹ் மரைக்கார் தலைமையில், 06.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்குத் துவங்கி 07.00 மணி வரை நடைபெற்றது. ஹாஃபிழ் ஜே.ஏ.ஸதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மவ்லவீ ஹாஃபிழ் ஜே.ஏ.தாவூத் மாஹின் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட,
அம்மன்றத்தின் மூத்த உறுப்பினரும், அண்மையில் நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான தைக்கா சாமு,
காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்,
அல்அமீன் துவக்கப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரான ஆசிரியர் எம்.ஏ.புகாரீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை, பொருளாளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றது.
அடுத்து, மன்றத்தின் சேவைகள், செயல்பாடுகள், செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து மன்றத் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஜே.ஏ.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
பின்னர், உறுப்பினர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தின் அடிப்படையில் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும், அதனையொட்டி நடப்பு நிர்வாகக் குழு கலைக்கப்படுவதாகவும், மன்றச் செயலாளர் ஸ்கட் அபூபக்கர் முன்மொழிந்து அறிவிக்க, துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஜே.ஏ.ஸதக்கத்துல்லாஹ் அதை வழிமொழிந்தார். அதனையடுத்து நடப்பு நிர்வாகக் குழு கலைக்கப்பட்டது.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்தலை தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் வழிநடத்தினார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில், மன்றத்தின்
பழைய தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர்,
செயலர் ஸ்கட் எஸ்.ஏ.கே.அபூபக்கர் சித்தீக்,
பொருளாளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி
ஆகியோர் மீண்டும் அதே பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத்தலைவர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர் ஆகியோரை இம்மூவர் கலந்தாலோசித்து அறிவிப்பர் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, அம்மூவரும் சில நிமிடங்கள் கலந்தாலோசித்தனர்.
இறுதியில்,
துணைத்தலைவராக எஸ்.ஐ.முஹம்மத் ஜக்கரிய்யா,
துணைச் செயலாளராக ஏற்கனவே அதே பொறுப்பை வகித்த ஹாஃபிழ் ஜே.ஏ.ஸதக்கத்துல்லாஹ்,
செய்தித் தொடர்பாளராக எஸ்.சபீர் அஹ்மத்
ஆகியோரையும், இவர்கள் தவிர்த்து 8 செயற்குழு உறுப்பினர்களையும் தாங்கள் முன்மொழிவதாக அம்மூவரும் அறிவிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. பின்னர், மன்ற துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஜே.ஏ.ஸதக்கத்துல்லாஹ், புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களை வாசித்தார்.
பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அனைத்துலக காயலர்களுக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - பழைய நிர்வாகக் குழு கலைப்பு:
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதைக் கருத்திற்கொண்டு, திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் நடப்பு நிர்வாகக் குழு இக்கூட்டத்துடன் கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் நேரம் வரை மன்றச் செயலாளர் ஸ்கட் அபூபக்கர் தற்காலிகமாக பொறுப்பில் நீடிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – புதிய நிர்வாகிகள் தேர்வு:
மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
ஜனாப் எம்.முஹம்மத் அப்துல் காதிர்
துணைத்தலைவர்:
ஜனாப் எஸ்.ஐ.முஹம்மத் ஜக்கரிய்யா
செயலாளர்:
ஜனாப் ஸ்கட் எஸ்.ஏ.கே.அபூபக்கர் ஸித்தீக்
துணைச் செயலாளர்:
ஹாஃபிழ் ஜே.ஏ.ஸகத்கத்துல்லாஹ்
பொருளாளர்:
ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி
செயற்குழு உறுப்பினர்கள்:
ஹாஜி எம்.ஐ.முஹம்மத் நூஹ் - திருவனந்தபுரம்
ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் - திருவனந்தபுரம்
ஜனாப் பி.எஸ்.டி.காதர் - திருவனந்தபுரம்
ஜனாப் ஏ.எஸ்.மொகுதூம் மீராஸாஹிப் - திருவனந்தபுரம்
ஜனாப் எஸ்.எச்.ஸாலிஹ் மரைக்கார் - கடைக்கல்
ஜனாப் எஸ்.அன்ஸாரீ - காயங்குளம்
ஜனாப் எஸ்.எஸ்.நெய்னா முஹம்மத் ஃபாஸீ - சங்கனாச்சேரி
ஜனாப் டபிள்யு.எஸ்.ஏ.பி.மீராஸாஹிப் - கரமன
செய்தித் தொடர்பாளர்:
ஜனாப் எஸ்.சபீர் அஹ்மத்
தீர்மானம் 3 – பெருநாள் வாழ்த்து:
திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அனைத்துலக காயலர்களுக்கும் இக்கூட்டம் தனது ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4 – காயல்பட்டினம் நகர்மன்ற புதிய அங்கத்தினருக்கு வாழ்த்து:
அண்மையில் நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில், நகர்மன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஆபிதா பி.எஸ்ஸி., பி.எட்.,
துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
நகரின் 18 வார்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத்தின் புதிய உறுப்பினர்கள்,
குறிப்பாக, திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் உறுப்பினரான 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாஜி தைக்கா சாமு ஆகிய - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் புதிய அங்கத்தினர் அனைவரையும் இக்கூட்டம் மனதார வாழ்த்துகிறது.
அவர்களின் ஐந்தாண்டு பொறுப்புக் காலத்தில், நேர்மையான - தீமைகள் அற்ற - வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துவதன் மூலம், காயல்பட்டினம் நகரை நல்ல பல முன்னேற்றங்களைக் கண்டதாகவும், நம் நாட்டின் முன்மாதிரி நகராட்சியாக மாற்றிடவும் இக்கூட்டம் அவர்களுக்கு அன்புக் கட்டளையிடுகிறது.
தீர்மானம் 5 – புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்ட மலபார் காயலர்களுக்கு வாழ்த்து:
கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றத்தால் அண்மையில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், தமது பல்லாண்டு கால புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்து, உடன் நடைமுறைப்படுத்திய ஹாஜி சாமு ஷிஹாபுத்தீன், ஜனாப் செய்யித் அஹ்மத் ஆகியோரை இக்கூட்டம் பாராட்டுவதோடு, அவர்களது நல்வாழ்விற்காக துஆ செய்கிறது.
அத்துடன், திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் அடுத்தடுத்த கூட்டங்களிலும் இதுபோன்ற நன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் ஆவல் தெரிவிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, மன்றச் செயலாளர் ஸ்கட் எஸ்.ஏ.கே.அபூபக்கர் நன்றி கூற, எம்.எம்.அஷ்ரஃப் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இடையில் மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. அரஃபா நோன்பு நோற்றவர்களுக்காக இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தண்ணீர் பாக்கெட், கறிகஞ்சி, கறி சம்ஸா, மஞ்சள் வாடா ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக மற்றும் செற்குழு உறுப்பினர்கள்...
இவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் புதிய செயலாளர் ஸ்கட் அபூபக்கர் ஸித்தீக் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் J.A.ஸதக்கத்துல்லாஹ்,
துணைச்செயலாளர்,
காயல் நல மன்றம்,
திருவனந்தபுரம், கேரள மாநிலம். |