இயலாநிலைக் குழந்தைகளுக்காக காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை சார்பில், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி, காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில் நடத்தப்பட்டு வருகிறது.
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நடத்தப்படும் இப்பள்ளியில் பயிற்சி பெறும் சிறப்புக் குழந்தைகளுக்கென அவ்வப்போது புதுப்புது பிரிவுகள் துவக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் நிர்வாகச் செலவினங்களுக்கான பொருளாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, பல்வேறு புதுப்புது திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், இனிப்புப் பலகார வகைகளை செய்வதற்கான அதற்கான அடுமனை அறை திறப்பு மற்றும் பலகாரம் செய்யும் கருவி (Oven) திறப்பு விழா 08.11.2011 அன்று மாலை 05.30 மணிக்கு துளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதற்காக நடத்தப்பட்ட துவக்க நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி முன்னிலை வகித்தார். அடுமனை சேவை குறித்து துளிர் பள்ளி நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துளிர் பள்ளியின் மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர் அடுமனை அறையை, பொறியாளர் ஏ.பி.ஷேக் அப்துல் காதிர் திறந்து வைத்தார்.
அடுமனை பலகாரம் தயாரிக்கும் கருவியை எஸ்.ஓ.பி.ஆயிஷா திறந்து வைத்தார்.
துளிர் அறக்கட்டளை செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, துளிர் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி, அலுவலகப் பொறுப்பாளர் சித்தி ரம்ஸான் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்:
ஹாஜி M.L.ஷேக்னா லெப்பை,
செயலாளர்,
துளிர் அறக்கட்டளை.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டது. (10.11.2011 - 08:58hrs) |