இலங்கையில் 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு அன்று காலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில், இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த செம்மாங்கோட் பள்ளியில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில், இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் உறுப்பினர்களான கொழும்புவாழ் காயலர்கள் கலந்துகொண்டனர். தொழுகையை, அப்பள்ளியின் இமாம் - காயல்பட்டினத்தைச் சார்ந்த மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வழிநடத்தினார்.
தொழுகை நிறைவுற்றதும் காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அன்று காலை உணவு பல்லாக் அன் கம்பெனி நிறுவனத்தாரால் வழங்கப்பட்டது. மதிய உணவு புகாரீ அன் கம்பெனி நிறுவனத்தாரால் வழங்கப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளிலும் காயலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். உணவு உபசரிப்பு நிறைவுற்றதும் அவர்கள் ஒருவருக்கொருவர் கைலாகு செய்து, கட்டித்தழுவி, கலந்துரையாடி தமக்கிடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மதிய உணவுக்குப் பின் அனைவரும் தத்தம் இல்லங்களுக்குக் கலைந்து சென்றனர்.
தகவல்:
புகாரீ அன் கோ ஹாஜி B.M.ரஃபீக் மூலமாக,
N. அப்துல் காதிர்,
செய்தித் தொடர்பாளர்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை. |