காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், “நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்” எனும் தலைப்பின் கீழ், நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் 10.11.2011 அன்று (நாளை) நடைபெறுகிறது.
இதுகுறித்து, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது காயல்பட்டினம் நகராட்சி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், நமது ‘மெகா‘ சார்பில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 10.11.2011 வியாழக்கிழமை (நாளை) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், “காயல்பட்டினம் நகர்மன்றம் - அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பின்கீழ் மாபெரும பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
பொதுமக்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டு, அரிய பல தகவல்களைப் பெற்றுச் செல்ல வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
2. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byMACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM)[09 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13151
"காயல்பட்டினம் மக்கள் விழிப்புணர்ச்சி கழகம்" என்று பெயர் மாற்றம் செய்யுங்கள். MEGA என்ற பெயர் தேர்தலுக்கு வைத்த பெயர் இப்போது பொருத்தமில்லை.
நீங்கள் தேர்தல் நேரத்தில் நடத்திய போட்டிகளின் முடிவு அறிவிக்கப்பட்டு பரிசு பெற்றவர்களின் பெயர்களும் இனைய தலத்தில் வந்தது. இன்னும் பரிசுகள் வந்து சேரவில்லை. அவற்றையும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கொடுத்தால் மதிப்பாக இருக்கும்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
பொது மக்களும் கேள்வி கேட்க, அவர்களின் அபிப்பிராயம் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் கொண்டுங்கள்.
3. Best Wishes to Stay Ahead as always !! posted byM Sajith (DUBAI)[09 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13153
மெகா குழுமத்தாருக்கு வாழ்த்துக்கள்..
அரசியலை சாக்கடை என பல நல்லவர்களும் ஒதுங்கி கொண்ட பின்னரும், அதிலும் நல்லதுக்கு வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கை வரச்செய்த உங்களின் முயற்சிகள், விஸ்ன்டன் சர்ச்சில் சொன்ன "நன்நம்பிக்கையாளன் ஒவ்வொரு கஷ்டத்திலும் வாய்ப்பை கான்கிறான்; அவநம்பிக்கையாளன் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிரமத்தை காண்கிறான்" என்ற வாசகங்களை நினைவூட்டுகிறது.
தங்களின் நல்லெண்ணப் பயணம் தொடர இறைவன் துணை செய்யட்டும்...
5. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byA.R.Refaye (Abudahbi)[09 November 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13160
ஓஹோ!!! மெகா வின் அடுத்த எபிசோட் ,
தொடரட்டும் மெகா சீரியல் ------------- விழிப்புணர்ச்சி மக்களுக்கு மட்டுமல்லாமல் தேர்வாகி உள்ள கவுன்சிலர்களுக்கும் ஏற்படுத்துங்கள்!!!!!!!
மக்களின் மனதை தவிப்பின்றி எளிதாக தம் அலுவல்கள் முறையாக செய்யப்படுவதை தற்போது தேர்வாகி உள்ள உறுப்பினர்கள் எல்லா வகைகளிலும் உதவி செய்வதோடு, உள்ளன்போடு ஒப்புக்கொண்ட ஊழல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி ஊரின் கண்ணியம் காக்க மீண்டும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயலுங்கள்!!!!!!!!!!
வீனாக அரசியல் சாயம் பூசும் அன்பர்களை இனியும் நம்மை காயபடுத்தாமல் இருக்க விழிப்புணர்ச்சி தாருங்கள்!!!!!!!!!!
6. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byMohamed CNash (Makkah )[09 November 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13161
மெகாவிற்கு வாழ்த்துக்கள்!!!
இது போன்ற மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் நடத்தப்படும் கூட்டம் இது. தேர்தலோடு எங்கள் வேலை முடிந்து விட போவதில்லை என்று நீங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த கூட்டத்தை நடத்துவது பாராட்டுக்குரியது.
இது போன்ற கூட்டங்கள் பொதுமக்கள் முன்னிலையில் வருடத்திற்கு ஒரு முறையாவது ....Annual Evaluation மாதிரி நடத்தபட்டால் உரியவர்களுக்கு பாராட்டாகவும் ...இன்னும் நல்ல பல செயல்கள் செய்வதற்கு தூடுதலாகவும் இருக்கும் அதே வேளையில், தவறுகளையும் தவறு செய்வோர்களையும் அடையாளம் காணும் நிகழ்ச்சியாகவும் அமையும்..
அரசியல் சாக்கடை என்று நல்லவர்கள் ஒதுங்கியதால் அதில் சில அருவருக்கதக்க இனங்களில் ஆதிக்கம் பெருகி விட்டது .. ஒரு ஆங்கில பொன்மொழி நினைவுக்கு வருகிறது
" POLITICIANS ARE LIKE DIAPERS; NEED TO BE CHANGED OFTEN FOR THE SAME REASON.”
" அரசியல்வாதிகள் என்பவர் நம் பிள்ளைகளுக்கு உபயோகிக்கும் PAMPERS மாதிரி, நாறி போகும் காரணத்தால் அவர்களை அடிக்கடி நாம்தான் மாற்ற வேண்டும்" .. எனவே நமக்கும் நாம் தேர்தெடுத்த நம் தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை கண்காணிக்கின்ற பொறுப்பு இருக்கிறது... நமக்கு விருப்பம் இல்லை என்றாலும் நாமாகவே ஏதோ ஒரு சூழ்நிலையில் விழுவது தான் அரசியல் அது தான் காலத்தின் கட்டாயம்!!
எனவே மெகா செய்யும் பணிக்கு நாமும் துணை நிற்போம் . தவறு நடந்தால் திருத்துவது நம் கடமை இது நம்ம நகர்மன்றம். நாம் பிறந்து வளரும் பட்டினம்.. வேறு எவருக்கும் பட்டா போடவோ பெயர்வைக்கவோ இது புறம்போக்கு பட்டினம் இல்லை...பாரம்பரியமிக்க பட்டினம்!!!.
7. நகர்மன்றத்தில் வரி செலுத்தும் பணம் வட்டிக்கு விட படுகிறதா ? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[09 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13162
பொது மக்கள் பயன் பெரும் வகையில் நகரமன்ற செயல்பாடு விழிப்புணர்ச்சி பொதுக்கூட்டம் நடத்தபடுவது மிகவும் பாராட்ட கூடிய விசியம் மெகாவின் அணைத்து சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
முக்கிய குறிப்பு: - எனது காதோரம் நான் கேள்வியுற்ற செய்திகளில் ஓன்று என்னவெனில் கடந்த நகர்மன்றத்தில் பொதுமக்கள் தினமும் வரி செலுத்தும் பணத்தை அன்றாட லெட்ஜரில் வரவு செய்யாமலும் அன்றாட வரி வசூல் பெரும் பணத்தை வரி வசூல் செய்யும் ஊழியர் வங்கியில் டெபொசிட் செய்யாமலும் அந்த வரி வசூல் பணத்தை வட்டிக்கு விட்டு வருமானம் பண்ணுவதாகவும் இந்த தவறான செயல்பாடுகள் கடந்த நகரமன்ற தலைவரின் பார்வைக்கு கவனத்திற்க்கு வரி வசூல் பணத்தை வட்டிக்கு விடும் செய்தியை ஊழியர்கள், உறுப்பினர்கள் யாரும் தலைவருக்கு செய்தியை கொண்டு போகவில்லை என்றும் செய்திகள் எனது காதோரம் கிடைக்க பெற்றன... இது உண்மையா ? பொய்யா ? ஆண்டவன் ஒருவன் அறிவான்..
ஆகையால் தற்போதுள்ள நகர்மன்ற தலைவர் இந்த வரி வசூல் பண விசியத்தில் அதிக கவனம் செலுத்தி அதிரடி சோதனை செய்து அன்றாட பொதுமக்கள் வரி பணம் வங்கியில் டெபொசிட் செய்ய படுகிறதா...!! என்று ஆராய பட வேண்டும்.. என்று தற்போதுள்ள தலைவியை கேட்டு கொள்கிறேன்..
10. சேவை தொடரட்டும்... posted byMohamed Buhary (Kayalpattinam)[09 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13169
மெகா குழுவினரின் சேவைகள் தொடர வாழ்த்துகள்...
மெகா குழு மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை அவ்வப்போது தொடர்ந்து நடத்த வேண்டும். சகோதரர் கே.எஸ். ஷுஐப் குறிப்பட்டது போல் மக்கள் கண்காணிப்பகம் போன்ற அமைப்பினரோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களுக்கு சட்டம் சார்ந்த விஷயங்களிலும் உரிமைகளைக் கோரிப் பெறும் விவகாரங்களிலும் விழிப்புணர்வு நிறையவே தேவைப்படுகின்றன.
குறிப்பாக, அரசு தொடர்பான விஷயங்களை அணுகுவது எவ்வாறு? போன்ற விவரங்களை அறியாதவர்களாக காலம் முழுவதும் இருந்துவிடுவது முறையாகாது. இதனால்தான் இலகுவாக முடிக்க வேண்டிய வேலைகளைக்கூட, கையூட்டு கொடுத்து முடிக்கிறோம். எந்தெந்த வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட நம்மில் பலருக்கு இருப்பதில்லை. அரசுத்துறை ஊழியர்கள் முதல் நகர்மன்ற ஊழியர்கள், உறுப்பினர்கள்வரை நமது இந்த அறியாமையைப் பயன்படுத்தி, நம் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். இத்தகைய அரசு கொள்ளையர்களிடமிருந்து நம் மக்களைக் காப்பாற்றும் மெகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நமதூரில் இயங்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்க செய்தி.
தொடருங்கள் உங்கள் மக்கள் சேவையை... தொடர்கிறோம் உங்களை நாங்கள்...
12. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byZubair Rahman (Doha-Qatar)[09 November 2011] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 13175
இன் முகத்துடன் வரவேற்கவேண்டிய நல்ல செயல்.
தங்களின் பணி தொய்வில்லாமல் தொடர வல்லோன் அருள் செய்வானாக.
நமதூரும் மக்களும் நலம் பெற இது போன்ற விழிப்புணர்வு எந்த சாரார் செய்தாலும் அது நம் மக்கள் நலம் பெற வழிவகை செய்யும்.
இஸ்மாயில் காக்கா சொன்னதுபோல் இன்னும் எவ்வளவோ இருக்கலாம் அல்லவா, இனி வரும் காலங்களில் தவறு செய்தவர்களும் திருந்த நல்ல வாய்ப்பாகக் கூட இந்த மக்கள் விழிப்புணர்வு இருக்கலாம் என்பது என் கருத்து.
13. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted bykudack buhari (doha-qatar)[09 November 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13177
யாருக்கு இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஊர் மக்களுக்கா ?
என்ன இந்த காமெடி இதை நடத்தும் 10 பேருக்கு விழிப்புணர்வு
இருக்கும் போது ஊரில் மற்றவர்களுக்கு இல்லையா விழிப்புணர்வு,
ஆமா இன்னுமா மெகா அமைப்பு இருக்கு (MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION) ELECTION முடிஞ்சுது ,பின்னே எதுக்காக வைட்டிங் நீங்கள் சொன்னது போல் கலைத்து விடுங்கள்,
அல்லது
CITY GUIDANCE ASSOCIATION என்ற பேரில் திரும்ப வாங்கோ ,இந்த பேரில் வந்தால் காலகாலத்திற்கும் நிலைத்திருக்கலாம் ,உங்களுக்கு புகழும் கிடைக்கும் ,
Vilack SMA சொன்னது போல்
ஊரில் பெரும்பாலானவர்கள் விழிப்புனர்வோடுதானே இருக்கிறார்கள்!
*****************************************
குசும்பு புதுசு (version 4)
---------------------------------
அம்மா உப்பே அய்யா உப்பே உப்பு வேணுமா உப்பு
வான்கிகன்கமா கல் உப்பு ,
**************************************
15. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byMACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM)[10 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13185
நகரமன்ற தலைவர் சகோதரி ஆபிதாவை மட்டும் அழைத்தால் போதாது. அவருடன இனைந்து செயலாற்றவிருக்கும் துணை தலைவர் பாம்பே மொஹிதீன் அவர்களையும் அழையுங்கள். ஆரம்பமே நன்றாக இருக்கும்.
இல்லாவிட்டால் ஒரு கரும்புள்ளி ஏற்பட்டு விடும். வெள்ளை உடையில் கருப்பு புள்ளி ஏற்பட இடம் கொடுத்து விடாதீர்கள். வாழ்த்துக்கள்
17. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byVilack SMA (Siacun)[10 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 13194
< என்னத்தை நல்லது செய்தாலும், வாயில் அவலைக்கூட போடாமல் அசை போடுபவர்கள் உண்டு. > ஜியாவுதீன் பாய் , இது நீங்க சொன்னது .
இந்தாங்க அவல் , வாயில போட்டுட்டே அசை போடுங்க .
" MEGA " வின் வழக்கு என்ன ஆச்சு ? தேர்தலுக்கு முன் , மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதே , என்ன ஆச்சு? இன்று வாய்தா , நாளை வழக்கு தொடரும் , இன்று வக்கீல் காரசாரமாக பேசினார் என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் இந்த இணையதளம் செய்தியாக வெளியிட்டதே, என்ன ஆச்சு? இந்த வழக்கில் வெற்றிபெற வாழ்த்துக்கள் , துஆ செய்கிறோம் என்றெல்லாம் கருத்துக்கள் பதிந்த கண்மணிகளே , இப்போ அமைதியாக இருக்கிறீர்களே , என்ன ஆச்சு உங்களுக்கு ? ஒஹ்ஹ்ஹ்ஹ அதுதான் நம்ம ஆளு ஜெயித்து வந்துட்டாங்களே , வழக்கெல்லாம் எதற்கு என்று எண்ணி விட்டீர்களா ?
kayalpatnam .com இணையதளமே ! நீங்களாவது கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன் ? வழக்கு நிலுவையில் உள்ளதா ? அல்லது வாபஸ் வாங்கி விட்டார்களா ? அல்லது வழக்கில் தோற்று விட்டார்களா ? கொஞ்சம் சொல்லுங்களேன் .
ஜியா பாய் , இந்தாங்க இன்னும் கொஞ்சம் அவல் , தேர்தலில் " விழிப்புணர்வு " மக்களிடம் எடுபடவில்லை என்பது உங்களுக்கு தெரியாதா ? அல்லது தெரிந்தும் , வேறு வழியில்லாமல் வாய் திறக்கவில்லையா ?
இந்தாங்க , அவலோடு கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிடுங்கோ , இன்னும் ருசியா இருக்கும் . புள்ளி விபரத்தை பாருங்கள் , படிக்காத பாமரனும் தெரிந்து கொள்வான் , " விழிப்புணர்வு " யாரிடம் உள்ளது என்று !
வெற்றி தலைவிக்கு எதிரான வாக்குகள் 8191 , வாக்களிக்காதோர் சுமார் 35 சதவீதம் . இவை இரண்டையும் சேர்த்தால் உங்களின் " விழிப்புணர்வு " very low . " விருப்பப்பட்டு " சிலரையும் , " திணிக்கப்பட்டு " பலரையும் வாக்களிக்க செய்ததுதான் இவர்களின் " விழிப்புணர்வு "
ஜியா பாய் , நம்ம ஊர் மக்கள் இப்போ ரொம்ப உஷார் . இந்த " விழிப்புணர்வு " " ஜனநாயகத்தை கொண்டு வாறேன் " என்று சொல்வதெல்லாம் அவர்களிடம் எடுபடாது . அவரவர் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மிகச்சரியாக செய்து கொண்டு வருகிறார்கள் .
( பாய் இது tail piece , சும்மா தமாசுக்கு , ஒரு சினிமாவில் கவுண்டமணி , தேங்காய் வியாபாரியிடம் விலை கேட்க , அவர் சொன்ன விலையை கேட்டு கவுண்டர் அதிர , அதற்கு கடை காரர் சொன்னது , " ஏன்பா , நீ இவ்வளவு நாளா உள்ள இருந்துட்டு வந்தியா ? தேங்காய் விலை ஏறினது உனக்கு தெரியாதா ? " என்று கேட்டார் . அதுபோல , பாய் நீங்க இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க ? ஊர்ல விலைவாசி பற்றி உங்களுக்கு தெரியாதா ? ) பாய் , சத்தியமா , இது தமாசுக்குதான் , பெருசா எடுத்துக்காதீங்க .
18. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted bySMS NOOHU (tanzania)[10 November 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13196
மெகா உள் நோக்கதிற்கு மிக்க பாராட்டு, இந்த விழிபுணர்வு பொதுக்கூட்டதில் கேல்வி பதில் வைத்தல் இன்னும் நன்றாக இருக்கும் இப்போது மக்களுக்கு கண்டிப்பாக விழிப்புணர்வு தேவைத்தான்,
ஆம். அதனால் தானே சரியான தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும் சரியாக பணியாற்றுகின்றார்களா என்பதை விழிப்புணர்வுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் நமது உரிமைகளை தெளிவாக உணர்ந்து கொள்ளவும் இது போன்ற கூட்டங்கள் அவசியம்.
சில பேர் TPMx2. அதை எல்லாம் பொருட் படுத்தாமல் தொடர்ந்து பணி செய்யுங்கள்.
20. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byP.S.ABDUL KADER (jeddah)[10 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13201
மெகா விழிப்புணர்வு பொதுக்கூட்டம் என்று நடத்த ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டி, வாழ்த்துக்கள் .
தங்களின் நல்லெண்ணப் பயணம் தொடர இறைவன் துணைசெய்வான்.
நமதூர் பஞ்சயத்க்கு வீனாக அரசியல் சாயம் பூசும் அன்பர்களை இனியும் நம்மை காயபடுத்தாமல் இருக்க விழிப்புணர்ச்சி தாருங்கள்.
என்னை போல் வெளிநாட்டில் இருப்பவர் மெகா விழாவை காண kayaltv இல் பதிவு செய்யும்.
21. நல்லவர்களுக்கு அழகாகும். posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[10 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13206
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்” என்ற தலைப்பின் கீழ், நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடை பெற இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதை நேர்மையாக நடக்க வேண்டும் என்று விரும்புகின்ற - நேர்மையாக நடக்கின்ற - ஊரின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதரும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்று பார்க்காமல் - அதன் மூலம் மக்கள் பயனடைகிறார்களா ? என்பதைப் பார்த்து - அதை வரவேற்று - நடைமுறைப்படுத்துவதுதான் நல்லவர்களுக்கு அழகாகும்.
------------------------------------------
உண்மையான உள்ளாட்சி மன்றம் :
நமது நகர் மன்றத்தின் செயல்பாடுகளை பற்றிய விளக்கமான கருத்துக்களை நமது மெகா சகோதரர்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் - இதில் நம் அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ்! நிச்சயமாக மிகவும் உபயோகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நாம் ஒவ்வொருவரும் இதை அறிந்து வைத்திருந்தால் எவருக்குமே நகர்மன்றம் சம்பந்தமான வேலைகளில் சிரமம் இருக்காது. இலஞ்சம், காலதாமதம் போன்றவைகளால் நமது வேலைகள் தடைபடாது நிறைவேறும்.
குற்றம் , குறைகள் நீக்கப்பட்டு - உண்மையான உள்ளாட்சி மன்றம் செயல்படும்.
--------------------------------------------
தகவல் அறியும் உரிமை சட்டம் :
தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன? அதனால் என்ன பயன் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியாது என்பது உண்மையே!.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை தெரிந்து வைத்துக்கொள்வதால் நமது நகர்மன்ற சம்பந்தமான விசயத்திற்கு மட்டுமல்ல நமக்கு தேவையான மிக, மிக அவசியமான , அத்தியாவசியமான விசயங்களுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
இன்று நமது மக்களில் மின்வாரியத்தினால் ஏற்படுகிற தொல்லைக்கு ஆளானோர் அநேகர் உள்ளனர்.
தொல்லை மட்டுமல்ல மின்சாரகட்டணம் என்று பல ஆயிரம் கட்டுகிறார்கள் எந்த ஒரு தகுந்த காரணமுமில்லாமல் - அவர்களுடைய கவனக்குறைவுக்கும் - காலதாமதத்துக்கும் நம் மக்கள் பலியாகிறார்கள் - வீணாக மக்களின் பணம் செலவாகிறது.
இப்படி பணம் வீணாவதையும் - சிரமங்களையும் - மன உளைச்சலையும் விட்டு நீங்க வேண்டும் என்றால் அவசியம் நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்து அதன் மூலம் நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.
----------------------------------------
மக்களே !
ஆகவே மக்களே! நாம் எல்லோரும் தவறாது மெகா நடத்தும் இந்த கூட்டத்திற்கு சென்று அங்கு கூறப்படும் ஆலோசனைகள் கேட்டறிந்து - நல்லபடி செயல்பட்டால்
23. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[10 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13212
தம்பி (குடாக் )புகாரிக்கு மெகா அமைப்பு மீது ஏன் இந்த கோபம்? தேர்தலுக்காக ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டால் தேர்தலோடு அதன் பணி முடியத்தான் வேண்டுமா? நல்ல விஷயங்களை எடுத்து நடத்தும் ஒரு அமைப்பு தொடர்ந்து நடந்துவிட்டுப் போகட்டுமே...
சுதந்திரம் கிடைத்த கையோடு காங்கிரசை காந்தி கலைக்கசொன்னது மாதிரி அல்லவா இருக்கிறது உங்கள் கூற்று..
சகோ. விளக்கு எஸ்.எம்.எ தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் சொல்லும் "புள்ளி"விவர கணக்கைத்தான் தானும் சொல்கிறார். இந்த கணக்குப்படியே பார்த்தாலும் ஆபிதாவை விடவும் மிக அதிகமான எதிர்ப்பு வாக்குகளை மிஸ்ரியா பெற்றிருக்கிறாரே... எனவே சகோதரரின் வாதம் செல்லுபடியாகாது.
(தோல்விக்கு தோல்வி நம்ம கலைன்சர்தான் இதுபோன்ற புள்ளி விவர கணக்குகளை சொல்லி மக்களையும் கட்சி தொண்டர்களையும் ஏமாற்றுவார். எஸ்.எம்.எ அவரிடம் இருந்து பாடம் ஏதும் படித்தாரோ.... என்னவோ....)
24. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted bymohmedyounus (Trivandram)[10 November 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 13213
இந்த கூட்டம் யாருக்கு வோட்டு அளிக்க வேண்டும் என்ற "விழிப்புணர்வுக்காக " அல்ல. தாங்கள் தேர்ந்து எடுத்த நபர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் என்பதற்கு நடத்த படுகின்ற கூட்டம்.
25. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted bykudack buhari (doha-qatar)[10 November 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13222
அஸ்ஸலாமு அழைக்கும்
K S MUHAMED SHUAIB காக்கா நீங்கள் என்னுடைய கருத்தை
சரிவர படிக்காமல் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறன் ,
நான் ஒன்றும் புதிதாக மெகா அமைப்பை கலைக்க சொல்லவில்லை ,மெகா அமைப்பினரே இந்த மெகா என்ற அமைப்பு election வரைதான் என்று முதலில் தெளிவாக சொல்லிருக்கிறார்கள் அதை தான் நினைவு படுத்தினேன்,
கூடவே தற்போதுள்ள மெகா அமைப்பு மேலும் சேவை செய்ய
விரும்பினால் CITY GUIDANCE ASSOCIATION என்ற புதிய பேரில்
வரும்படி சொல்லிருந்தேன், இன்னும் மெகா என்று இருந்தால்
அது அவர்கள் சொல்லிய சொல்லுக்கு முரண் தானே தெளிவு படுத்துங்கள்,
உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
நீங்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று என் கருத்தை சரிவர படிக்காமல் உங்கள் கருத்தை பதியாதிருங்கள் ,அப்புறம் உங்களுக்கு நான் பதில் கொடுத்து அதுவே உங்களுக்கு
shame shame puppy shame ஆகி விடுகிறது,
26. இதை நடத்தும் 10 பேருக்கு விழிப்புணர்வு இருக்கும் போது கண்டிப்பாக உங்கள் இருவரையும் சேர்த்து 12 பேருக்கு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்யும்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[11 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13224
அஸ்ஸலாமு அழைக்கும்..
நமது நகர்மன்றத்தில் என்ன... என்ன.. தவறுகள் நடந்து வந்து இருக்கிறது அதை பற்றி உங்களுக்கு விழிப்புணர்வு உண்டா ? உங்கள் வீடுகளில் குடிதண்ணீர் மற்றும் வீட்டு தீர்வை இவைகளுக்கு வரி பணம் செலுத்துகிறீர்களே.. நீங்கள் செலுத்திய அந்த ஹலாலான பணம் அது எந்த வகையில் உபயோக படுத்தபடுதுன்னு உங்களுக்கு விபரம் (விழிப்புணர்வு) தெரியுமா ?
மேலும் எம்ப்ளைமென்ட் அலுவலகத்தில் முன் பதிவு செய்யாமல் வெளியூர் நபர்கள் 14 பேர் வேளையில் அமர்த்தப்பட்டு அதில் 2 நபர்கள் மட்டுமே தினமும் வேலைக்கு வருவதும் சிறிது நேரத்தில் மாயமாகி விடுவதும் மீதி 12 நபர்கள் வேலைக்கே வராமல் மாதம் 1 ஆம் தேதி (நபர் ஒருவருக்கு) மாதம் 5000 ரூபாய் நகர்மன்றத்தில் தனது சம்பளத்தை பெற்று கொண்டு ஊரில் வேறு இடத்தில் தனியார் பள்ளிகளில் ஓட்டுனர் வேலை செய்வது. இது போன்ற தவறான செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு விழிப்புணர்வு உண்டா?
சகோதரர் Vilack S M A அவர்களே.. சகோதரர் kudack buhari அவர்களே.. உங்களுக்கு நமது நகரமன்றத்தின் இந்த தவறான செயல்பாடுகள் பற்றி அதிகமான விழிப்புணர்வும் விபரங்களும் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து இருக்கலாம்.. சகோதரர் Vilack S M A அவர்களே.. சகோதரர் kudack buhari அவர்களே.. என்னை போன்ற பாமரனுக்கு இறைவன் மீது சத்தியமாக இந்த விழிப்புணர்வு இல்லை..
மெகாவின் நகரமன்ற விழிப்புணர்வு பொது கூட்டத்தின் வாய்லாக பல உண்மைகளை கேட்டு அறிந்து விழிப்புணர்வு அடைந்தேன்..
இது சகோதரர் Vilack S M A அவர்களின் கருத்து:- ஊரில் பெரும்பாலானவர்கள் விழிப்புனர்வோடுதானே இருக்கிறார்கள்!
இது சகோதரர் kudack புஹாரி அவர்களின் கருத்து:- யாருக்கு இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஊர் மக்களுக்கா ? என்ன இந்த காமெடி இதை நடத்தும் 10 பேருக்கு விழிப்புணர்வு இருக்கும் போது ஊரில் மற்றவர்களுக்கு இல்லையா விழிப்புணர்வு..
நீங்கள் சொல்வது போல் இதை நடத்தும் 10 பேருக்கு விழிப்புணர்வு இருக்கும் போது கண்டிப்பாக உங்கள் இருவரையும் சேர்த்து 12 பேருக்கு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்யும்.. இந்த 10 பேரும் பொது கூட்டம் போட்டு இந்த பாமரனுக்கு எனக்கும் மற்றும் பல நூறு பேருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது ஹலாலான வரி பணம் எப்படியெல்லாம் சீரழிக்க படுகிறது என்ற விழிப்புணர்வுவை ஏற்படுத்தி கொடுத்தார்கள்..
இது போல் தாங்கள் இருவரும் இந்த வலை தளம் மூலம் தங்களின் விழிப்புணர்வுவை எங்களுக்கும் பகிர்ந்து இருக்கலாமே...
மெகா அமைப்பினர் இன்னும் பல தவறுகளை விழிப்புணர்வுகளை சுட்டி காட்டினார்கள்.. அது அனைத்தும் மிக மிக பயனுள்ளதே...
27. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byVilack SMA (Hetang)[11 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 13226
அஸ்ஸலாமு அழைக்கும் .
நம்ம " தமிழன் " காக்கா விழிப்புணர்வு பெற்றதில் ரொம்ப சந்தோசம் .
அப்புறம் , எங்க KS Shuhaib மச்சானுக்கு அவல் , சக்கரை கொடுத்தாதான் சரிப்படும் போல இருக்கு . மச்சான் , நான் சொன்ன விஷயம் தேர்தலில் வெற்றி தோல்வி பற்றி இல்லை . நான் சொன்னது " விழிப்புணர்வு " பாடம் . எங்களால்தான் விழிப்புணர்வு அடைந்தார்கள் , அதன் மூலம் வந்தவர்தான் இந்த தலைவி என்று சொல்பவர்களுக்குத்தான் அந்த புள்ளி விபரம் . தேர்தலில் அவர் வெற்றி அடைந்தது அடைந்ததுதான் . அதை யாராலும் மாற்ற முடியாது . ( எப்படி வந்தார் என்று யோசித்தால் அது சர்ச்சைக்குரிய விஷயம் . அதனால , வந்தவரை வாழ்த்தி , அவரது பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது விழிப்பு அடைந்தோர் , அடையாதோர் செய்ய வேண்டிய கடமை . அதுதான் நாகரீகம் )
அடுத்து , MEGA வின் வழக்கு என்னாச்சு ? ஒருவேளை வாய்தா , வாய்தான்னு ஐந்து வருடத்துக்கு இழுத்தடிச்சு , அப்புறம் வாபஸ் வாங்கிடுவாங்களா ?
Shuhaib மச்சான் , இதப்பத்தி கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்கோ . உங்களுக்கு அவல் ல தேங்காப்பூ , சீனி எல்லாம் போட்டு அனுப்பி வைக்கிறேன் .
29. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[11 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13241
தம்பி புகாரி உனது கருத்தை தெளிவாகவே படித்தேன். எந்த பெயரில் வந்தாலும் அமைப்பு ஒன்றுதானே ராசா...(ஆ.ராசா அல்ல)
பெயரை மாற்றுவதால் என்ன பெரிதாக நடந்து விடப்போகிறது..?ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா ரோஜாதான். இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு விவாதிக்கனுமா...தம்பி.. தேர்தல் வரைதான் இருக்கும் என தெரியாமல் சொல்லிவிட்டார்கள் ராசா.. கொஞ்சம் பொறுத்துக்கொள்ள கூடாதா.. நீ எனக்கு என்ன பதில் எழுதினாலும் பரவாயில்லை ராசா கோழி மிதித்தா குஞ்சு செத்துவிடப்போகிறது? keep it up.
சகோ. விளக்கு எஸ்.எம். எ அவர்களே நீங்கள் என்னை மச்சான் என்று அழைத்துவிட்டதால் நானும் உங்களை மச்சினன் என்று அழைப்பதுதான் இனி பொருத்தம். நீங்கள் அவல் தந்தாலும் சரி பொறி தந்தாலும் சரி "அல்வா "மட்டும் தந்துவிடாதீர்கள். ஏற்கனவே நீங்கள் நிறையபேருக்கு உங்கள் பதிவின் மூலம் காயல் ஸ்பெசல் அல்வா கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே சுகர் பேசண்ட் கொஞ்சம் ஏன் மீது கருணை வையுங்கள்.
"விழிப்புணர்வு "மெகா மூலம்தான் பொதுமக்களுக்கு கிடைத்தது எனபது ஓரளவு உண்மைதான். ஏனெனில் ஐக்கியபேரவை எந்த கேள்விக்கும் சரியான பதில் சொல்லாமல் இருந்தபோது மெகாதான் நகர மக்களை தேர்தலுக்காக வழி நடத்தியது. வழக்கு விவரம் என்ன ஆச்சு என தெரியவில்லை.
இனி என்ன ஆனால்தான் என்ன.. தேர்தல் முடிந்துவிட்டது. தலைவியும் பதவி எற்றுவிட்டார்.
தம்பி முத்து மொகுதூம் "மிசா" கேள்விபட்டிருக்கிறீர்களா? அது போல இது "மெகா". மிசாவில் உள்ளே போனவன் எல்லாம் மிசா குமார் மிசா கணேஷ் என்று பெயர் வைத்து கொண்டார்கள் அதுபோல மெகா உறுப்பினர் எல்லாம் மெகா காதர் மெகா நவாஸ் என்று இனி பெயர் வைத்து கொள்வார்கள்.
அட போங்க தம்பி நான் இதை தூத்துக்குடி பிரவசிங்சென்டரில் இருந்து டைப் செய்து கொண்டு இருக்கிறேன் ஊருக்கு போகணும் நேரமாச்சு... நாளை பார்க்கலாமா...ஹலோ புகாரி ஹலோ விளக் எஸ்.எம் எ good bye... (இப்போ மணி இரவு எட்டு)
30. Re:நவ.10இல் ‘மெகா‘ சார்பில் ... posted byVilack SMA (Siacun)[11 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 13255
< வழக்கு விவரம் என்ன ஆச்சு என தெரியவில்லை.
இனி என்ன ஆனால்தான் என்ன.. தேர்தல் முடிந்துவிட்டது. தலைவியும் பதவி எற்றுவிட்டார். > K .S . Shuhaib மச்சான் சொன்னது .
மச்சான் , உங்களுக்கு இனிமேல் " உப்பு கடலைதான் " சரிப்பட்டு வரும் . இந்தாங்க . வழக்கு நவம்பர் 1 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது என்று தேர்தலுக்கு முந்தய செய்தி . தேர்தலுக்கு பிறகு இந்த வழக்கு வருவதால் எந்த நன்மையையும் இல்லை என்று நினைத்தால் , அப்போதே வாபஸ் வாங்கி இருக்கலாமே ? ஏன் செய்யவில்லை .? ஒருவேளை அவர்களின் எண்ணப்படி " ஜனநாயக படுகொலை " செய்து வேறு ஒருவர் தலைவியாக வந்திருந்தால் இந்த வழக்கின் செய்திகளை நாம் இந்த இணைய தளத்தில் கண்டிருக்கலாமோ ?
அது என்ன ஆச்சுன்னு மட்டும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் மச்சான் .
Moderator: கருத்துக்கள் விவாதமாக செல்வதால் இக்கருத்து குறித்த விவாதம் இத்துடன் நிறுத்தப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross