காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பணம் தரும் தானியங்கி கருவி (ஏ.டி.எம்.) நிறுவப்பட்டு, கடந்த 14.09.2010 தேதி முதல் செயல்படத் துவங்கியது.
கடந்த ஒரு வார காலமாக இந்த ஏடிஎம் கருவி செயல்படவில்லை. இன்று காலையில், ஜெனரேட்டர் உதவியுடன் ஏடிஎம் சேவை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து விசாரிக்கையில், இந்த ஏ.டி.எம். கருவி அமைந்துள்ள இடத்திற்கு மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஜெனரேட்டர் கொண்டு இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
படம்:
‘மெகா‘ செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |