ஹஜ் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் நல்தோருக்கு உணவுப் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் என 75 பேருக்கும், நுஸ்கியார் அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர், கே.எம்.டி. மருத்துவமனையில் பொது வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், காட்டு மொகுதூம் பள்ளி சுற்றுப்புறத்திலுள்ள ஏழை - எளியோருக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினம் நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி சதக்கத்துல்லாஹ், செயலாளர் வி.டி.என்.அன்ஸாரீ, ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், ஹாஜி துளிர் ஷேக்னாலெப்பை, ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக் மற்றும் வாவு குடும்ப அரிமா உறுப்பினர்கள் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக். |