நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு, நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்... என்ற தலைப்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 10.11.2011 வியாழக்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
1. “மெகா” இனி ஜகா வாங்கிறக் கூடாது...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[15 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13411
அடேங்கப்பா! நகர் மன்றத் தலைவியின் பேச்சு நல்லாத்தான் இருந்திச்சி,படிச்ச புள்ளே! படிச்ச புள்ளெதான்! என்ன பக்குவம்?என்ன கம்பீரம்? நல்லாருக்கும்யா! நிச்சயமா நல்லாருக்கும்யா! நம்ம நகர் மன்றம் நல மன்றமா மாறிடும்ய்யா!
பதவி ஏத்த நாள்லெ இருந்து அந்தப் புள்ளெ பம்பரமாச் சுத்தி வந்து எவ்ளோ விஷயத்தெ தெரிஞ்சு வச்சிருக்கு? லஞ்சம் வாங்கிறவனெ தண்டிச்சிறலாம்,லஞ்சம் கொடுக்கிறவங்களெ என்ன பண்ணுறது?அழகான கேள்வி! நாக்கப் புடுங்கிற மாதிரி இருந்திச்சு! சிமெண்ட் ரோடுக்கு ஆப்பு வெச்சு தகர்த்துட்டாங்கல்லே?மக்கள் குறை கேட்க மாசந்தோறும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் முன் வந்தாலே பாதி வேலை முடிஞ்ச மாதிரிதான்.
“மெகா” இனி ஜகா வாங்கிறக் கூடாது! தொடர்ந்து செயல் படணும்.பேரு வேணா, “ காயல் நலப் பேரவை(KNP), நகர் நலப் பேரவை(NNP), மக்கள் ஐக்கியப் பேரவை(), அனைத்து காயல் ஜமாஅத் கூட்டமைப்பு(AKJK), இப்படி ஏதாவது ஒரு பேர்லெ தொடர்ந்து செயல் பட்டு நம்ம ஊருக்கு நல்லதெச் செய்யனும்ங்க அதான் எங்க(மக்களின்) ஆசை!!!
குசும்பு:
கவிமகனே உமக்குத் தெரியாத பேரா என்ன? உம்ம குரல் வளம் நல்லாயிருக்குய்யா! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன?பொளந்து கட்டுறீங்க போங்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross