Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:59:04 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7570
#KOTW7570
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 15, 2011
பெருகும் புற்றுநோய் நீங்க சொளுக்கார் தெருவில் பிரார்த்தனை நிகழ்ச்சி! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4743 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகரில் பெருகிவரும் புற்றுநோய் நீங்க, நஹ்வி அப்பா நற்பணி மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, நஹ்வி அப்பா திடலில், 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நகரில் பெருகிவரும் புற்றுநோய் நீங்க, காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, நஹ்வி அப்பா திடலில், 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி, நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது. காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சார்ந்த பெரியவர்கள் முன்னிலை வகித்தனர்.

துவக்கமாக மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதினார். பின்னர் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.

பின்னர், மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில் புகாரி ஷரீஃபும், மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் தலைமையில் பத்ரு ஸஹாபாக்கள் திருநாமமும், குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் மவ்லித் மஜ்லிஸும், குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமையில் ராத்திப் மஜ்லிஸும் நடைபெற்றது.



நிறைவாக, ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நன்றி கூற, துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் குருவித்துறைப்பள்ளி மஹல்லாவைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி இரண்டாமாண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by fathima ahmed (kayalpatnam) [15 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13405

இந்த மஜ்ளிசின் பொருட்டல் அல்லாஹ் நம் ஊரின் கஷ்டங்களை நீக்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by halima ahamed (kayalpatnam) [15 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13409

யா அல்லாஹ........இந்த கொடுரமான நோயிலிந்து எங்கள் காயல் மக்களையும் இன்னும் உலக மக்கள் அனைவரையும் காப்பாயாக .....ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by Javed Nazeem (Chennai) [16 November 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 13412

New KG5 Drug Brings Fresh Hope To Cancer Sufferers With Aggressive Tumours

Scientists have developed a new cancer drug that kills aggressive and deadly tumours by altering the structure of the cancer growth protein.

Read more here:
http://www.huffingtonpost.co.uk/ 2011/11/14/ new-cancer-drug-that-kills-off-aggressive-tumours-_n_1092100.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by ishakibnunahvi (abudhabi) [16 November 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13413

இந்த மஜ்லிஸின் பொருட்டால் நமது ஊரில் உள்ள கொடிய நோயை போக்கி எல்லா மக்களும் சுபிச்சமாக வால்வதருக்கு அல்லாஹு உதவி புரிவானாக ஆமீன்

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by M.S.ABDULAZEEZ (H K) [16 November 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 13414

அல்லாஹுவின் பொருட்டால் இந்த கோடிய நோய் உலகை விட்டு போகட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by Javed Nazeem (Chennai) [16 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 13415

A much clear அர்டிச்லே ஒன KG5 is here.

http://m.medicalxpress.com/news/2011-11-role-enzyme-tumor-cell-division.html

If Dr. Kizhar or Dr. Noordeen or any other Doc is following this, pls explain in a language which could be understood by laymen. When my father was doing medicine, he had collected lot of articles on cancer cure - that was some 40 - 45 years back. Now we are more advanced, but a complete cure at an advanced stage is still a challenge. Hope this new drug helps.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [16 November 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13416

அப்படியே கூடங்குளம் அணு மின் நிலையத்தையும் மூட சொல்லி கேட்டு இருக்கலாம்??......ஏதும் பாதிப்பு என்றால் (களியக்காவிலை முதல் மதுரை வரை 150 KM) பாதிப்பு வரும் என்று பத்திரிகையில் படித்தேன்....

1000 கிலோ ப்ளுடோனியத்தை (Plutonium) கூடங்குளத்தில் பயன்படுத்த போகிறார்கலாம். ஒரு ஸ்பூன் (கரண்டி) அளவு ப்ளுடோனியம் 300 கோடி (3 BILLION) மக்களுக்கு கான்சரை (Cancer) உருவாக்குமாம்...

என்னவென்று சொல்வது.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by SMS, NOOHU (tanzania) [16 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13418

யாஅல்லாஹ் இந்த மஜ்லிசின் பொருட்டால் இந்த கொடிய நோயில் இருந்து எங்கள் யாவரையும் காப்ற்றுவயாக, உன்னகே எல்லா புகழும்,

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [16 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13419

இந்த நோய் தாக்கியவர்களை வல்ல நாயன் இக்கொடிய நோயிலிருந்து பூரண சுகமளிப்பதுடன், மற்றவர்களை இக்கொடிய நோய் தாக்காமல் அருள் புரிந்தருள் புரிவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by Noohu Sahib (Dubai) [16 November 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13420

அல்லாஹ் நம் அனைவர்களின் துஆக்களை கபூல் செயவானாஹா ஆமீன் .இந்த அருமையான துஆவில் கலந்து கொள்ள இயலாமைக்கு மிஹவும் வருந்துஹிறேய்ன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by suaidiya buhari (chennai) [16 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13421

assalamualaikam

மக்கள் அனைவரும் (இந்த கொடிய நோயி இல் இருந்து மீள) துவா பண்ணவும் அல்லாஹு எல்ல மக்களையும் காப்பாத்துவானக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by mak.jainulabdeen (kayalpatnam) [16 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 13422

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த நிகழ்ச்சி அல்லாஹ்வின் நல் உதவியால் சிறப்பாக மூன்று ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.இந்த மஜ்லிஸ் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறையபேர் பயன் அடைந்துள்ளனர்.

இதன் ஒருங்கினைப்பாளர்களாக மௌலவி அல்ஹாபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மது முஹியதீன் ஆலிம்,அல்ஹாபிழ் காரி எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத்,மற்றும் நானும் அல்ஹாஜ் ஒய்.எஸ்.பாரூக் மாமா தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தோம்.வல்ல நாயன் அல்லாஹ் நமது ஊரை நோய்,பலாய்,முசீபத்தில் இருந்து நம் யாவரையும் காத்தருள்வானாக.ஆமீன்.அஸ்ஸலாமு அலைக்கும்.

இவண்,

எம்.ஏ.கே.ஜெயினுல்ஆப்தீன்,

நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர்,
மஹான் நஹ்வி ஆலிம் நற்பணி மன்றம்,
சொளுக்கார் தெரு,
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by M.N Seyed Ahmed Buhari (Chennai (mannady)) [16 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13424

அஸ்ஸலாமு அழைக்கும்...

கடந்த வருடம் இதே மஜ்லிஸில் நான் கலந்து கொண்டேன்...இந்த வருடம் கலந்து கொள்ள இயலாமைக்கு மிஹவும் வருந்துஹிறேய்ன் .. அல்லாஹ் நம் அனைவர்களின் துஆக்களை கபூல் செயவானாஹா ஆமீன் .

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. பக்தியால் மட்டுமே.... புற்றுக்கு முற்று வைக்க முடியும்.
posted by s.s.md meerasahib (riyadh) [16 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13425

அஸ்ஸலாமு அலைக்கும். புற்றுக்கு முற்று வைக்க பக்த்தியால் மட்டுமே...... முடியும் என்றடிப்படையில் பிரார்த்தனை நடத்தும் இந்த சபையை மனமார பாராட்டுவதுடன்...... கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் புற்றுநோயில் அவதிப்படும் மக்களுக்கு நல்ல சுகத்தை கொடுத்து, மேலும் நம் அனைவரையும் இந்த கொடிய நோயில் இருந்து பாது காப்பானாக அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by Seyed Mohamed (SaudiArabia) [16 November 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13427

மாஷா அல்லாஹ், நல்ல நிகழ்ச்சி. இதன் பாரகத்தால் நம் ஊரில் கொடிய நோயை நாம் ஒன்றிணைந்து விரட்ட அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by mohmedyounus` (Trivandram) [16 November 2011]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 13428

வல்ல அல்லாஹ் மட்டுமே இந்த நோயை தீர்க்க வல்லவன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by sholukku.aj (UAE-DUBAI) [16 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13429

அஸ்ஸலாமுஅலைக்கும்

புற்றுநோய்க்கும் பல மோசமான நோய்களுக்கும் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் உள்ள அதே வேலையில் இபாதத்து மூலம் இந்த முசீபத்துகளை நீக்க நடவடிக்கை எடுத்த நல்ல உள்ளங்களுக்கு அல்லாஹ்வின் கருணை பார்வை என்றும் நிலைத்திருக்கும்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னாள் ஒவ்வொரு வீட்டிலும் இறைவனின் கலாமாகிய திருமறையின் ஒளியை கேட்டுக்கொண்டு இருந்த காலங்கள் மறைந்ததாலோ என்னவோ இந்த நோய்களை நம் ஊரில் அதிகமாக காணும் துர்பாக்கிய நிலை.

ரப்புல் ஆலமீன் காலரா என்ற கொடிய நோயை விரட்டியது போல் இந்த சனியத்தையும் இவ்வுலகில் வாழும் அணைத்து மக்களையும் விட்டு நீக்கி நிம்மதியாக உன் நினையுடன் வாழ உதவி செய்வாயாக ஆமீன்.

மீண்டும் ,மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கும் இந்த மக்களின் துஆவை கபூல் செய்வாயாக ஆமீன். மாசலாமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஜாவித் நசீம் கேட்ட விளக்கம் ...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [16 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13440

நண்பர் ஜாவிட் நசீம் சொன்ன, கட்டுரையின் சாராம்சம்,

பொதுவாக கேன்சர் செல் என்பது abnormal செல் mass அதின் celldivision ஒரு கட்டுகோப்பாக இல்லாமல், கன்னாபின்னா என்று செல் பிரிந்து வளரும். அதன் வளர்ச்சி நார்மல் செல் லின் வளர்ச்சியுடன், ஒருங்கிணைந்து செல்லாமல் தன தனிபதையில் வளர்ச்சி ஒரு சீராக இருக்காது. இந்த கான்செர் செல் யை ம கான்செர் செல்லாக மாற்ற தூண்டிய அந்த ஊக்குவிப்பு பொருள் (உதாரணம் புகை பிடித்தாலும் lung cancer ), தனது அஆதிக்க்த்தை நிருதியுடனும் கூட , இந்த கன்னாபின்னா என்ற செல் DIVISION மற்றும் வளர்ச்சி தொடரும்..

சுருங்க சொன்னால் , சிகரெட் மூலம் நோர்மல் செல் கான்செர் செல்லாக மாறிய உடன், சிகரட் புகைப்பதை நிறுத்தினாலும் கூட, ஏற்கனவே ஏற்பட்ட கான்செர் மாற்றத்தை, கன்னாபின்னா வளர்ச்சியை கட்டுபடுத்ட முடியாது.. அதன் போக்கிலே இருக்கும்..

இந்த முன்னுரையுடன், உள்ளே செல்வோம்..

இந்த செல் DIVISION கட்டு படுத்தும் RAF என்பதை சில மட்ட்ரங்கள் செய்வது மூலம், கான்செல் செல் டிவிசியன் காடுபடும்.

முன்னர் உபயோக படுத்திய மருந்துகள், கான்செர் செல் வளர்ச்சியை மட்டும் , துல்லியமாக கண்டு பிடித்து தடுக்காமல், நார்மல் செல்லின் வளர்ச்சியையும் , division பாதிப்பதால், கான்செர் drug சைடு effect உண்டு பண்ணுகிறது. புதிய KG5 மருந்து , கான்செர் செல்லின் RAF இல் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி, கான்செர் செல்லின் வளர்ச்சி மற்றும் division மட்டும் பதித்து, கான்செர் ஐ வளராமல் தடுத்து, குனமளிக்கிறது.. நார்மல் செல்லில் இது வேலை செய்ததால், மட்டற்ற நார்மல் செல்கள் பாதிக்காமல் , சைடு effect இல்லாமல் வேலை செய்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by Javed Nazeem (Chennai) [17 November 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 13452

தெளிவான் விளக்கத்திற்கு மிக்க நன்றி கிசார். சில நேரங்களில் கான்சர் குணமான பின்னும் அதற்காக செய்த வைத்தியத்தின் பின் விளைவுகள் அபாயகரமான நிலைகளை ஏற்படுத்தி இருப்பதாக அறிகிறேன். அந்த வகையில் இது ஒரு அரிய கண்டு பிடிப்பு தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. யா அல்லாஹ்..ஏந்துகிறோம் எம் கரங்களை.
posted by Ansari YentY (K S A) [17 November 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13475

இந்த புனித மஜ்லிசின் மகிமையால் புற்று மற்றும் கொடிய நோய்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாது காப்பானாக..ஆமீன்...இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by Syed Muhammed Sahib Sys (Dubai, UAE) [17 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13510

வணக்கங்களில் எல்லாம் தலை என்று நபி மொழி மூலம் அறியப்பட்ட மேலான விஷேச பிரார்த்தனை மஜ்லிஸ் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியமைக்கு, ஏற்பாட்டாளர்களுக்கும், அதில் பங்கு வகித்தவர்கள் மற்றும் கலந்துக் கொண்டவர்களுக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பெருகி வரும் பெரும் நோய்களிலிருந்தும், பலாய் எனும் சோதனைகளிலிருந்தும் நமதூரையும் நம்மை சார்ந்தோரையும் வல்ல ரஹ்மான் காத்தருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. மலரும் நினைவுகள் :-
posted by zubair (riyadh) [17 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13521

யா அல்லாஹ் எங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. முன்பு எல்லாம் ஐந்து,ஆறு வீட்டு நபர்கள் சேர்ந்து முடுக்கு,முடுக்காக ஓதிட்டு இருந்தோம். இறைவன் எல்லாவற்றிலும் நிம்மதியை தந்தான்,ஊரும் கண்ணியமாக இருந்தது. கொடிய நோய்களும் நம்மை அண்ட பயந்தன. இன்றோ நமக்கிடையில் சைத்தான் நுழைந்து விட்டான். வீடுகளில் ஓதுவது, இபாதத்துகள் குறைந்ததால். இறைவன் நம்மை சோதிக்க ஆரம்பிக்கிறான். இறைவன் மிக கருணையாளன், தன் அடியானை சோதிப்பதில் மிக பொறுமையுள்ளவன். மேலும் நாம் மனம் உருகி கேக்கும் துவாவையும், பாவ மன்னிப்பையும் உடனே ஏற்றுக்கொள்பவன். ஆகையால் நாம் நம் பெரியவர்கள் காட்டித்தந்த வழியை பின்பற்றினால் எல்லா விசயதிலும் இறைவன் நம்மை கண்டிப்பாக பாதுகாப்பான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:பெருகும் புற்றுநோய் நீங்க...
posted by mohamed naleem (hong kong) [18 November 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 13542

யா அல்லாஹ் இந்த கூட்டு பிரார்த்தனையின் மூலமாக நம் ஊரில் உள்ள எல்லா நோய்களிலும் இருந்து நம்மை பாதுகப்பனாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved