காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், பள்ளி மாணவ-மாணவியருக்கான புத்தக கண்காட்சி 09.11.2011, 10.11.2011 ஆகிய தேதிகளில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி ஆசிரியையர் மாணவ-மாணவியருக்கு ஏற்கனவே தேவையான தகவல்களை வழங்கி ஊக்கப்படுத்தியதன் அடிப்படையில், கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பயனுள்ள தலைப்புகளிலான நூற்களில், 1,804 நூற்களை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தகவல்:
திருமதி மீனா சேகர்,
தலைமையாசிரியர்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம். |