ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த அமீரக காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால், நமது மன்றத்தின் 2011ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் 25.11.2011 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை, துபை அல்ஸஃபா பூங்காவில் நடைபெறுகிறது.
மேற்படி பூங்காவின் 2ஆம் எண் நுழைவாயில் வழியே வருகை தந்து, கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இத்தகவலை, நமதூரைச் சார்ந்த அனைவருக்கும் தெரிவித்து அவர்களையும் மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்தையொட்டி மதிய உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், சிறுவர்-சிறுமியருக்கான விளையாட்டுப்போட்டிகளும் வழமை போல நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தம் குடும்பத்துடன் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
அமீரக காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |