மாநில அளவிலான ஓவியப் பொட்டியில் கலந்துகொண்ட காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சிலர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
தர்மபுரியிலுள்ள மனிதவள மேம்பாடு மற்றும் ஆய்வு நிறுவனம் நடத்திய மாநில அளவிலான ஓவியப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவியும், எஸ்.அப்துன் நாஸர் என்பவரின் மகளுமான ஏ.என்.முஹம்மத் அஸ்ஹருன்னிஸா முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவர் பதக்கமும், ரூ.1,000 பணப்பரிசும் பெற்றுள்ளார்.
அதே பள்ளியின் எல்.கே.ஜி. வகுப்பு மாணவர் எம்.ஆர்.அஹ்மத் ஸலாஹுத்தீன், யு.கே.ஜி. மாணவி ஏ.ஃபாத்திமா ஃபாரிஸா, முதல் வகுப்பு மாணவி எம்.எம்.கதீஜா நாஸிரா ஆகியோரும் பரிசுகள் பெற்றுள்ளனர்.
அதுபோல, இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியும், ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகளுமான எஸ்.எச்.ஜென்னத் முஃமினா, அவரது மாவட்ட அளவிலான அறிவியல் திட்டப்பணிக்காக (Science Project) மாநில அளவிலான ஊக்க விருதும், இரண்டு புத்தகங்களும் பரிசாகப் பெற்றுள்ளார். இம்மாணவி, விரைவில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை செல்லவிருக்கிறார்.
சாதனை மாணவ-மாணவியரை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |