காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அது குறித்து - இந்நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தன்னார்வலர் ஜனாபா மும்தாஜ் தலைமை தாங்கினார். துளிர் பெற்றோர் மன்ற தலைவர் ஜனாபா ஆய்ஷா சாஹிப் தம்பி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துளிர் அறங்காவலர்கள் குழு உறுப்பினரும், துளிர் பள்ளி செயலருமான ஜனாப் M.L. செய்க்னா லெப்பை அவர்கள் கல்வி உரிமை பற்றி உரையாற்றினர்.
தொடர்ந்து துளிர் சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது . குழந்தைகள் தினத்திற்காக நடத்தப்பட்ட மாறுவேட போட்டியில் கலந்துக்கொண்டு சிறந்த மாறுவேடம் அணிந்த 20 குழந்தைகளுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது .
இதற்கான பரிசுகளை ஆறுமுகநேரி ரத்னா பஸ் உரிமையாளரின் துணைவியார் திருமதி . சுப சுரேஷ் அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கினார்கள்.. துளிருக்கு தனவந்தர்களிடம் நிதி வசூலித்து தரும் 3 தன்னார்வ பெண் தொண்டர்கள் - ஜைனம்பு நாச்சி , கதீஜா, மரியம் ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருசெந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி கல்வியின் முதல்வர் திருமதி மரியா செசிலி M.A., M.Phil., M.Ed., சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் . துளிர் குழந்தைகளின் பெற்றோரும் திரளாக கலந்துக்கொண்டனர்.
துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் Z. சித்தி ரம்ஜான் நன்றி உரையாற்றினர் . இவ்விழா ஏற்பாடுகளை துளிர் நிறுவனர் வழக்கறிஞர் அஹ்மத் அவர்களின் ஆலோசனையின் பெயரில் சிறப்பாசிரியர்கள் ஹலீமா, வசுமதி மற்றும் பாரதி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் . பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |