காயல்பட்டின நகரில் உள்ள 40,000 மக்களின் தினசரி குடிநீர் தேவை - ஆத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக குடிநீர் திட்டம் மூலம் - பல ஆண்டுகாலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆத்தூரில் இருந்து சுமார் 23 லட்ச லிட்டர் அளவு குடிநீர் தினமும் காயல்பட்டினதிற்கு குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. 4 - 5 தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் குடிநீர் விநியோகம் - நகரில் உள்ள சுமார் 16 நீர் தொட்டிகள் மூலம் - நடைபெறுகிறது.
இது போக - நகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது, இரண்டாம் குடிநீர் விநியோகத்திட்டம் ஆகும். காயல்பட்டினத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் (திருநெல்வேலி சாலையில்) அமைந்துள்ள பொன்னன்குறிச்சி ஊரை மையமாக கொண்டு - 30 கோடி ரூபாய் குடிநீர் விநியோகத்திட்டம் ஒன்று தற்போது நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளது.
இத்திட்டம் குறித்தும், தற்போது அமலில் உள்ள ஆத்தூர் குடிநீர் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யும் முகமாக - காயல்பட்டின நகரமன்ற தலைவர் ஐ. ஆபிதா - நவம்பர் 10 (வியாழன்) அன்று - பொன்னன்குறிச்சி, மங்கலக்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
காயல்பட்டின நகரமன்றத்தின் 12 வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் (என்ற சுகு) மற்றும் நகர்மன்ற பணியாளர் நிசார் ஆகியோர் உடன் சென்றனர்.
1. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byPS ABDUL KADER (jeddah)[14 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13353
நல்ல துனிசல், ஆர்வம் கண்டு நகர மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த காட்டுக்குள் வந்து ஆய்வு கண்டமைக்கு பாராட்டி வாழ்த்துக்கள். முந்தைய எந்த நகர தலைவரும் இங்கு வந்து பார்த்து ஆய்வு நடத்தி இறுக்கமாட்டார்.
ஆபிதா ஒரு முன்மாதரி நகர தலைவிதான்
2. வஹீதா அம்மாவும் செய்தார்கள்! posted byS.K.Salih (Kayalpatnam)[14 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13354
தற்போதைய நகர்மன்றத் தலைவர் ஆபிதா அவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு முயற்சி போன்று, ஏற்கனவே நமதூர் நகர்மன்றத் தலைவராக இருந்த அ.வஹீதா அம்மா அவர்களும் தனியார்வத்துடன் செய்துள்ளார்கள். இதர நகர்மன்றத் தலைவர்களும் கூட செய்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. எனவே, இதற்கு முன் யாரும் செய்யவில்லை என்ற கருத்தில் உண்மையில்லை.
தயவுசெய்து, அன்பர்கள் எந்த ஒரு செய்திக்கும் கருத்துப்பதிவு செய்யும்போது, அது குறித்த விபரங்களை ஓரளவுக்காவது பெற்ற பின்னர் கருத்துப்பதியலாம். அல்லது விளக்கம் கேட்கும் தோரணையில், “இதற்கு முன் எந்தத் தலைவராவது செய்துள்ளார்களா?” என்பது போன்று கருத்தெழுதலாம்.
4. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted bySalai.S.L.Khaja Muhyideen (Dubai)[14 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13360
Assalamu Alaikum.
Your action is highly appreciated.However we feel that posting of images are of no use and in my opinion, it seems like projecting yourself which none of the president has done.
We as a native member of Kayalpatnam expect the President to act on achieving the good results which in turn reach the people of our town, rather than posting only the images.
7. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byMOHD IKRAM (saudi arabia)[14 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13368
ஒருவர் நல்லதை செய்ய நினைக்கும் போது, நாம் அதற்க்கு உறுதுணையும், ஒத்துழைப்பும் கொடுப்போம். அது தான் நமக்கும் நல்லது, நமது ஊருக்கும் நல்லது. அது நமது கடமையும் ஆகிறது.
நல்லதை நினைப்போம். நல்லது செய்ய நினைபவர்களுடன் துணை நிற்போம் .
8. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byசாளை பஷீர் (சதுக்கைத்தெரு,காயல்பட்டினம்)[15 November 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 13371
அஸ்ஸலாமு அலைக்கும்! நகர்மன்றத்தலைவியின் ஊக்கமான செயல்பாடுகளுக்கு பாராட்டுக்கள். அல்லாஹ் அவரின் செயல்திறனை கூட்டி அனைவருக்கும் நன்மை செய்ய உதவுவானாக! ஆமீன்!!
தலைவியிடம் ஒரு வேண்டுகோள்! எனது வீடு உட்பட பல வீடுகளுக்கு குடிநீர் வருவதே இல்லை. பல முறை சாலையை தோண்டிப்பார்த்தும் எதுவும் புலப்படவில்லை. ஒரு நாள் காலை நேரத்தில் மின் வினியோகம் தடைப்படும்போதுதான் விஷயம் தெளிவாகியது. இதை பல முறை பார்த்தாகி விட்டது. நகராட்சியால் குடிநீர் திறந்து விடப்படும் நேரத்தில் மின்விநியோகம் தடைப்பட்டிருந்தால் மட்டுமே என் வீட்டிற்கு குடிநீரை அடிபம்பின் மூலம் அடித்து எடுக்க முடிகின்றது. காரணம் அக்கம்பக்க்திலுள்ள வீட்டுக்காரர்கள் மின்மோட்டாரை குடிநீர் இணைப்பில் பொருத்தி சட்ட விரோதமாக உறிஞ்சி எடுக்கின்றனர்.
முந்தைய நகர் மன்றத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. புதிய நகர்மன்றத்தலைவராவது இந்த அநீதத்தை களைந்து அனைவருக்கும் குடிநீர் கிடைக்கச்செய்வாரா?
9. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byfathima (kayalpatnam)[15 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13372
அஸ்ஸலாமு அழைக்கும் தலைவி அவர்களே உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.. ஊரில் அத்துணை பேர் வீட்டில் தண்ணீர் வருதான்னு பார்ப்பதை விட தண்ணீர் தொட்டியில் உள்ள கழிவை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்.
இந்தர்க்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம் இதை எல்லாம் கவனித்தார்களா என்று தெரிய வில்லை கவனித்திருந்தால் இத்துனை கழிவுகள் இருந்து இருக்காது...
கமெண்ட்ஸ் எழுதுபவர்களுக்கு காயலின் தண்ணீர் சரித்திரம் தெரியாத கற்றுக்குட்டி என்று காட்டவேண்டாம். இதில்கண்ட சேவைகள் யாவும் வரவேற்கக்கூடியது தான். இவையெல்லாம் ஒரு தலைவர் செய்யும் சாதாரண கடமைதான்..அல்லாஹ் இதற்கும் நற்கூலி கொடுப்பான்.ஆனால் அந்த கற்றுகுட்டிகள் காமன்ஸ் எழுதும்போது முந்திய தலைவர்களை மட்டம்தட்டி எழுதினால் அல்லாஹ்வின் கோபம் தானாகவே நம்மை வந்து சேரும்.
எனெனில்
14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
மனிதருக்கு நன்றி கூறாதவன் அல்லாஹ்விக்கு நன்றி கூறாதவனே!(ஒரு ஹதீதின் கருத்து.)
நமதூர் தண்ணீர் திட்டத்தின் 1945 ல் இருந்து இதுவரை ஏ ட்டூ இஸட் வரை பாடு பட்ட பல பஞ்சாயத்து தலைவர்கள் பெரியவர்கள் இன்றும் நமதூரில் இருக்கிறார்கள்.அவர்களிடம் மரியாதை கொடுத்து கேட்டுப்பாருங்கள்.அவர்கள் அந்த சேவையில் ஈடுபடாவிட்டால் .நமதூரில் இன்று என்ன நடக்கும் தெரியுமா? நாற்பதாயிரம் பேர் உள்ள நமதூருக்கு குடிதண்ணீர் ஒரு லிட்டர் பத்து ரூபாய் . அப்ப குளிக்க? ........? ?.ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய்.(அதும் காக்கை குளிப்புத்தான்.)
அந்த காலத்தில் 1945ல் மாடு இழுக்கும் தண்ணீர் வண்டியில் இப்ப உள்ள ஊருக்கு தண்ணீர் ஊருக்குள் வருகிறதானால் வண்டிகளை அடிக்கினால் ஆறுமுகநேரி வரை கியூவில் நிற்கும். தண்ணீர் விஷயத்தில் இப்ப உள்ள தலைவி ஜனாப். ஆபிதா அவர்கள் (ஜனாப் என்றால் சமூகம் என உருது வின் வார்த்தை)(பெண்களுக்கு ஜனாபா என்று போட்டால் அவள் துடக்குள்ளவள் என பொறுள் படும் என உலமாக்கள் கூறுகிறார்கள்.) அவர்கள் காட்டும் சேவையை ஒப்பிட்டால் லட்சத்தில் ஒன்னுதான். ஒப்பிடவே ஏலாது. இந்த கமன்ஸ்க்கும் கமன்ஸ் எழுதுவதை விட நேரில் கேளுங்கள். (ஃபோன் 280852.. ).
இம்மாபெரும் சேவை செய்தவர்கள்கூட பத்திரிக்கைகளிலெல்லாம் போடாதீர்கள் என்றுதான் சொல்லுவார்கள். அவ்வளவு தன்னலமற்ற சேவை. இவ்வெழுத் துக்களில் குறை ஏதும் இருந்தால் அல்லஹ்வுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்.
http://www.kayalpatnam.com/shownews.asp?id=7425 (News ID # 7425)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=7426 (News ID # 7426)
"முன்னர் இந்த மாதிரி புகை பட விளம்பரங்கள் ஏதும் இல்லை என்பதே நிதர்சனம்." என்று கூறும் சகோதர் அவர்களே (Comment Reference Number: 13357), மேலே குறிப்பிட்டுள்ள, இதே வலைதளத்தில் வெளியான செய்தியை பார்வை இடுங்கள்.
இதில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பார்வை இடுங்கள், இதை தாங்கள் விளம்பரம் என்று ஏன் கூறவில்லை? செல்வம் படைத்தவர்கள் செய்தால் சேவை, நகர மன்ற தலைவி அவர்கள் செய்தால் விளம்பரமோ?
செல்வம் படைத்தவர்கள் தங்களின் வசதிக்கேற்ப சேவை செய்கின்றனர், மற்றவர்கள் தங்கள் வகிக்கும் பதவியின் மூலம் சேவை செய்கின்றனர்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்....
நகர மன்ற தலைவி அவர்களே, தொடரட்டும் உங்கள் சேவை.
13. நீ பாதி....... நான் பாதி.........? posted byzubair (riayadh)[15 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13380
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் சகோதரர்களே..... இது வெல்லாம் நகர்மன்ற தலைவரின் கடமை. பார்வையிட்டதுக்கு வாழ்த்துக்கள்.
கமாண்ட்ஸ் எழுதும் சில பிஞ்சியில் பழுத்ததும், பழுத்தும் பயன்தர முடியாத சிலரும் பெரியவர்களை உண்மையான செயல் வடிவத்தை புரிந்து கொள்ளாமல்,மதிக்காமல் முன் தலைவர்களை குறை கூறி..... இப்பொழுது உள்ள தலைவரை உச்சாணியில் தூக்கி வைக்கின்றனர். இது தவறான, ஒற்றுமையை குலைக்கும் செயல்.
விமர்சனம் உண்டாக்கும் போட்டோக்கள் தவிர்ப்பது நல்லது.
14. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted bySeyed Mohamed (KSA)[15 November 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13381
ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் சொல்லுவது முற்றிலும் உண்மை. நம் முன்னோர்கள் செய்த தியாகம் எண்ணிலடங்கா. அப்போது இது போன்று வலை தல வசதி கிடையாது. பப்ளிசிட்டி இப்ப அதிகமாகிவிட்டது. இந்த குடிநீர் திட்டம் செயல் வடிவம் பெரும் நிலையில் இரும்ம்கும் போது யார் தலைவார இருந்தாலும் செய்து தான் ஆகணும்.
15. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byjamal (kayalpatnam)[15 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13384
எதார்த்தமாக தலைவி அவர்கள் நிற்கும்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை எடிட் செய்யாமல் போட்டது கேமராமேன் மற்றும் செய்தியாளரின் தவறு. பார்ப்பவர்கள் கண்ணுக்கு டூர் போவது மாதிரிதான் தெரியும். ஆய்வு செய்கிற மாதிரி உள்ள போட்டோக்கள் மற்றும் செய்திக்கு சம்பந்தப்பட்ட போட்டோக்களை போடுவது நல்லது. இனி செய்தியைப் போடும்போது நன்றாகப் பார்த்து, ஆராய்ந்து போடவும். போட்டோக்கள் அதிகம் வேண்டும் என்பதற்காக எல்லாப் போட்டோக்களையும் போடாமல் தனிப்பட்ட போட்டோக்களை தவிர்த்து போடவும். அதுதான் நல்லது. நியூஸும் தரமாக இருக்கும். சும்மா கேலி பண்ணுவது மாதிரி செய்தி, போட்டோ போடக்கூடாது.
16. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted bymackie noohuthambi (kayalpatnam)[15 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13385
குடிநீர்த்திட்டம் பற்றி பேசியே எல்லோரும் ஓட்டு வாங்கி உள்ளே சென்றார்கள். இப்போது நகரமன்ற தலைவி மட்டும் அதை பார்வையிட போகிறார்கள். இது முறைதானா, துணைத்தலைவர் எங்கே, ஆரம்பமே கசப்பாக இருக்கிறதே? சொன்ன வாக்குறுதிகள், , செய்த சத்தியங்கள் எல்லாம் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து செய்தவை என்பதை மறந்து விடாதீர்கள் உறுப்பினர்களே, அல்லாஹ்வின் பிடி மிக கடுமையாக இருக்கும். தவறு செய்பவர்களை மன்னிப்பவன்தான் தவ்பாகளை ஏற்றுக்கொள்பவன்தான் ஆனால் அதே நேரம் கேள்வி கணக்கு கேட்பதில் மிக கடினமானவன் என்று அவனே தன்னைப்பற்றி சொல்கிறான். ஜாக்கிரதை. மக்கி நூஹுதம்பி
17. அஸ்ஸலாமு அழைக்கும் posted byfathima (kayalpatnam)[15 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13388
சரி தான் டூர் ல போட்டோக்கு போஸ் கொடுத்த மாதுரி இருக்கா என் சொல்ல மாட்டிங்க..மக்களுக்காக மக்கள் நலனுக்காக உச்சி வெயிலா இருந்தாலும் பாடுபடுரவங்க்கள என்னமா பேசுது இந்த உலகம்....
18. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byFarook (KSA)[15 November 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13389
தைக்க சாஹிப், நீக்க கொடுத்த லிங்க் இல் எத்தனை பெரியவர்கள் இணைந்து செய்கிறார்கள். அங்கெ முன்னால் தலைவரின் முயர்ச்சியும் உண்டு. ஆனால் போட்டோ வில் இல்லை. இருந்தாலும் தவறில்லை.
முன்னால் தலைவர்கள் இது போல் செய்யவில்லை என்று சிலர் குற்ற சாடுவத்தால் தான், நண்பர் ஜைனுலாப்தீன் அவ்வாறு சொன்னார். நீங்க கொடுத்த லிங்கே ஓர் உதாரணம், எப்படி ஐக்கிய பேரவை இணைத்து சேவை செய்கிறது என்று எல்லோருக்கும் விளக்க.
அஸ்ஸலாமு அலைக்கும்.1.நமது நகர் மன்ற தலைவரின் இந்த முயற்ச்சி வெற்றிபெற காக்கும் கரங்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
மேலும் இந்த முயற்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வாவு ஷேக்அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களின் ஆலோசனையையும் கேட்டு செயல் படவும். குடிநீர் வசதி நமதூருக்கு கிடைப்பதற்கு அவர்களும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
2.ஒருவர் நன்மை செய்யும் போது அதைப் பாராட்டாமல் இருந்தாலும் பரவா இல்லை, ஆனால் அதை குறை கூறாமல் இருப்பது நல்லது. வல்ல நாயன் அல்லாஹ் நம்முடய ஹலாலான செயல்களை நிறைவேற்ற துணை புரிவானாக.ஆமீன்.
21. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[15 November 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13392
களப்பணியாற்றும் நம் நகர் மன்ற தலைவிக்கு நல் வாழ்த்துக்கள்.
இன்னும் உங்கள் சேவை சிறப்பாக தொடர வாழ்த்துகிறோம்.
இந்த நேரத்தில் எதிர்கால காயல் நகர மக்களுக்கு என சுயநலமில்லாமல் நமக்காக செயல் பட்ட பல தலைவர்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
மறைந்த நம் கல்வித்தந்தை களான L.K. அப்பா, M.K.T அப்பா இவர்கள் காலத்தில் தான் கவர்மென்ட் மூலம் நமக்கு குடிநீர் திட்டம் தற்போது கிடைக்காது என தெரிந்ததும் L.I.C யில் கடன் மற்றும் நதூர் தனவந்தர்களின் தன்னலம்பார உதவியுடன் நமக்கு இந்த திட்டம் நிறைவேற்ற பட்டது என்பதனை நம் முன்னோர்கள் மூலம் அறிந்தோம்.
அதன் பின் தலைவரான பாவலர் அப்பா அவர்கள் காலத்தில் இரண்டாவாது நீர்தேக்க தொட்டி பஞ்சயாத் போர்ட் வளாகத்தில் கட்டப்பட்டது. இன்று இறையருளால் 16 தொட்டிகள் உள்ளதாக அறிகிறோம்
இடையில் ஆத்தூரில் நமதூருக்கு பம்ப் செய்யும் பம்ப் ஹௌசிற்கு D.M.K. செய்யித் அஹ்மத் மாமா அவர்கள் காலத்தில் என நினைக்கிறன் நேரடியாடியாக சென்று மாசடைந்த FILTER ஐ உடனடியாக மாற்ற ஏற்பாடு செய்ததும் மறக்கமுடியாத சேவைகள்.
இது போக தலைமை பதவியில் இல்லாமலே கல்வி, சேவையை முதலில் துவங்கி வைத்த அப்துல் ஹய் ஆலிம், பஞ்சாயத் போர்டிற்கு நிலம் வழங்கிய கம்பெனியார் அப்பா, போக்கு வரத்திற்கு முக்கியம் கொடுத்து நமதூருக்கு பல போக்குவரத்து வழிதடங்களை கொண்டுவந்த S.E.M.நூஹு லெப்பை மாமா, இன்னும் பல திட்டங்களுக்கும் பொருளுதவியை தாரளமாக வழங்கிய அ.க .அப்துல் காதர் ஹாஜியார், சென்ற நகராட்சி தலைவர் வாவு செய்து அப்துர்ரஹ்மான் ஹாஜியார் இது போன்ற (இன்னும் குறிப்பிட்டால் நீண்டு கொண்டே போகும் ) பெரியவர்கள் நமக்காக செய்த நன்மைகளை நினைவு கூர்ந்து நாம் அவர்கள் மக்பிரர்த்திகாக துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
23. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byRECAZ SULAIMAN (saudi arabia)[15 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13396
தயவு செய்து, மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் தலைவர்களை, கமெண்ட்ஸ் என்ற பேரில் கேலி கிண்டல் செய்யாதீர்கள்.
நாமும் அந்த சேவைகளில் இறங்கும் பொது தான் அதன் உண்மையான கஷ்டங்கள், வலிகள் நமக்கு தெரியும். ஓன்று நாம் பிறருக்கு நல்லது செய்ய முயர்சி செய்வோம். அல்லது நல்லது செய்ய நினைபர்வர்களுடேன் துணை நிற்போம்.
24. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byCNash (Makkah )[15 November 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13399
உங்கள் கருத்துகள் நல்லது செய்வதற்கான ஒரு தூண்டுதலாகவும்.. ஆர்வமூட்டுவதகவும் இருக்கட்டுமே.. செய்கின்ற எல்லாவற்றையும் குறை சொல்வதை விட நல்ல ஆக்கபூர்வமான யோசனைகளையும் கருத்துகளையும் சொல்லுங்கள்!!
அதே போல் வாழ்த்துகிறோம் என்ற பேரில் தலைவி நின்றாலும் நடந்தாலும் பாருங்கள் எப்படி முன்னே இருந்தவர்கள் எல்லாம் செய்தார்களா என்று கேட்பதும்.... மற்றவர்களை குறைசொல்ல்வதும் அழகிய நடைமுறை இல்லை!!
செய்தியாளர்! தேவைக்கு மட்டும் போட்டோ போடுங்கள்.. செய்தியை அதிகரித்து போட்டோவை குறைத்து இருக்கலாம்... ஆய்வு செய்த நோக்கம் என்ன, என்ன நடவடிக்கை எடுத்தார்கள், என்ன திட்டங்கள், என்ன கலந்துரையாடல், இது போன்ற பயனுள்ள செய்திகள் போட்டிருந்தால் ...அதிகமான போட்டோவை விட சிறப்பாக இருந்து இருக்கும்..
25. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[15 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13400
நகராட்சி தலைவியின் முயற்சிக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.
படத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் முன்னாள் மந்திரி TSS ராஜன் பெயர் உள்ளது. இவர் நமது முன்னாள் சபாநாயகர் மறைந்த பழனிவேல்ராஜனின் தந்தையாவார். பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் அவர். அந்த காலத்திலேயே அவர் நமதூர் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
ரஹ்மத்துல்லா ஹாஜி அவர்கள் சொல்வது போல் நமதூரின் சரித்திரங்கள், நமதூருக்காக பாடுப்பட்ட தன்னலமற்ற, சுயவிளம்பரம் விரும்பாத பெரியவர்களை பற்றி இப்போது உள்ள இளைஜர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இங்கே கருத்து எழுதுபவர்கள் பலபேர் இன்னும் தேர்தல் நேரத்தில் உள்ள பகமையை கருத்தில் கொண்டு ஊர் பெரியவர்களை வசைப்பாடுவதிலேயே இந்த தளத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்வது என்பது எந்த ஒரு நகர்மன்ற தலைவரின் கடமைகளில் ஒன்று தான். இதை ஏதோ முன்பு யாரும் செய்யாத பெரிய சாதனையாக சித்தரிக்க வேண்டாம்.
தண்ணீர் பிரச்சனை மட்டுமல்ல எத்தனையோ முக்கிய பிரச்சனைகளை மறைந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தன்னலமற்ற, சுயவிளம்பரம் தேடிக்கொள்ளாத பெரியவர்கள் செய்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாவிட்டாலும், ரஹ்மத்துல்லா ஹாஜி போன்ற பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, இனி மேலும் ஊரின் நலனுக்காக பாடுப்பட்ட, பாடுபடுகிற பெரியவர்களின் சேவைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்
27. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byProf.Dr.Mohamed Yaseen (CALICUT)[15 November 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 13406
Dear Brothers and Sisters of Kayalpatnam
It is my Pleasure in wishing sister Mrs.Aabitha Sheik
I do not have much practice to write the comments
It is my first attempt
Commenting is to be a practice of expressing Opinions and thoughts but it is better not to be a platform brings the arguments of malicious conversation.
Hope ..,we practice and co-operate with newly elected our Chairman and turns a successful and tidy KAYALPATNAM.
" PLZ LETS REMEMBER THAT EVERYONE HAS GOT UPs and DOWNs"..,lets not criticize other.
Hope our chairman has got the Capability and Credibility to handle the work ethics and bears a lucrative result.
28. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byahamed.s.i. (colombo)[15 November 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13407
தண்ணீர் தண்ணீர் இது கயல்பட்னனத்தின் கதை ரஹாமதுள்ள ஹாஜி தண்ணீர் கதையெய் வெலாவாரிய கொஞ்சம் சொலீருக்கலாம்.தண்ணீர் இது ஜனநாயக சபை பெற்று எடுத்த குழந்தை இதை பெற்று எடுக்க அது பட்ட வேதனைகள் கொஞ்சமா நஞ்சமா ? உச்ச நீதிமன்றம் வரை செண்டது என்னொரு கிளை கதை ஈன்று நமஊடு வாழும் LS மாமா.B மகமூது ஹாஜி கேட்டல் புரியும் .அதை எததவரகள் இன்றும் தலைவராக இருப்பதும் காலத்திந கோலம்.ஆதிக்க சக்திகள் எதித்து போராடுவதே பெரிய ஜெகாத். இந்த போராட்டத்துக்கு தோள்கொடுத்த தோழர்களை கயல்பட்னம் என்டுமே மறக்காது கயல்பட்ந்தின் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் தொட்டிக்கு கீழ் கல்வெட்டை ப்பதால் பாதிகதை புரியும் .
பழய கால பஞ்சாயத்து தலைவர்களின் சேவை களில் ஒரு சில குறிப்பு.க்கள் (ஒரு யு.கே)
எல்லாம் வாய்மொழியாக கேட்டவைதான்.இளைஞர்களுக்கு ஒரு நோட்ஸ்
1. சுமார். 1940 ம் வருட்த்தில் ஜனநாயக சபை சார்பில் (இக்காலம் கா.ப.மு.ஐ.பேரவை மாதிரி) தைக்காத்தெரு, மரைக்கார் பள்ளி தெருக்களில் வாழ்ந்த ஆலி ஜனாப்.அல்ஹாஜ். மாத்தளை (இலன்கையில் ஒரு நகர்)அபிதீன் ஹாஜியார் அவர்கள் சேர்மனாக சேவை செய்தார்கள். அக்காலங்களில் எலக்ட்ரி கிடையாது. தெருக்களில் .தெருவுக்கு ஒன்றாக குத்துக்கல் நாட்டி அதன் மேல் சிறூ விளக்குகள் வைத்து கண்ணாடி கூடு அமைத்து மக்களுக்கு வெளிச்சம் தருவார்கள். தினசரி மாலை சன் செட்டுக்கு முன் ஒரு .பஞ்சாயத்போர்ட் வேலைக்காரன் தெரு வாரியாக போய் ஏணிவைத்து குத்துகல்லில் ஏறி டெய்லி சுமார் 50 மில்லி லாம்பென்னெய் ஊற்றிவிட்டு லைட் பற்றிவிட்டு போய்விடுவான். அது சில நாளையில் நிலா வெளிச்சம் கணக்கு பண்ணி 10-20-மில்லி (சுமார் 6-10 பைசா பொறுமதிதான்) கூடுதலாகவும் ஊற்றுவான்.அது தானாகவே அம்ர்ந்து விடும். இந்த எண்ணையையும் கள்வு எடுக்காமல் இருக்க நமது ஆபிதீன் ஹாஜி அவர்கள் பிண்ணாமல் ஒவ்வொரு தெருவாக சைக்கிளில் போய் செக் பண்ணுவார்கள் தப்பு நடந்தால் ஃபைன் போடுவார்கள் அல்லது பதவி நீக்கம் தான்.இதல்லோ சேவை. என்னா சேவை என்னா தியாகம்..
30. எதையும் உதாசீனப்படுத்தாமல் , சீர்தூக்கிப் பார்த்து ......... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[15 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13410
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகர் மன்ற தலைவர் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்யும் முகமாக பொன்னன்குறிச்சி, மங்கலக்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்று விவரங்களை சேகரித்து வந்திருக்கிறார் பாராட்டப்பட வேண்டிய விசயம்.
------------------------------------------------
நல்லவர்களின் பண்பாடு :
இன்றைய தலைவர் முன்பிருந்தவர்கள் அனைவரையும் விட வயதிலே குறைந்தவர் - நகர் மன்ற அனுபவமில்லாதவர் - அதுவும் ஒரு பெண் மணி - பதவியேற்றதுமே சுறுசுறுப்பாக செயல்பட்டு ஊருக்கு நல்லது செய்ய ஆயத்தமாகும்போது அவருக்கு நாம் உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர குறை காணக் கூடாது.
அவரின் செயல்களில் குறையைக் காண நேர்ந்தால் - அவர் புதியவர் , இப்போதுதானே பொறுப்புக்கு வந்து இருக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டு - அதை பொருட்படுத்தக்கூடாது - அல்லது அவருக்கு செய்தி எட்டுகின்ற மாதிரி நளினமாக எடுத்துரைக்க வேண்டும் - இதுதான் நல்லவர்களின் பண்பாடு.
இந்த செய்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் மொத்தம் 23 ஒவ்வொரு படமும் தனித் தனி செய்தியை தாங்கி நிற்கின்றது என்பது உண்மை என்றாலும் - இந்த செய்திக்கு வெறும் 8 அல்லது 9 படங்களை மட்டும் காட்டிவிட்டு மற்றதுகளை பாதுகாத்து வைத்திருந்திருக்கலாம்.
மக்கள் புரிந்துக்கொள்ள / அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வளவு படங்களை செய்தியுடன் காட்டிய போதிலும் மக்களின் மனமோ வேறுதிசையை நோக்கி செல்கிறது.
எனவே எந்த ஒரு செய்தியையும் வெளியிடும்போது செய்தியாளர்கள் மக்களின் மனோபாவத்திற்கு தகுந்தபடி செய்திகளை அமைக்க வேண்டும் - மக்களின் மனோபாவங்கள் நேரத்திற்கு நேரம் மாறுபடும் என்பதையும் உணர வேண்டும்.
தலைவர் அவருடைய சகாக்களுடன் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய சென்ற இந்த செய்தியை இந்த இணையத்தளம் வெளியிட்டிருப்பதின் நோக்கம் இரண்டு.
முதலாவது நமது புதிய தலைவர் அவருடைய தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி குடிநீர் திட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவது.
இரண்டாவது நாம் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்யும் செய்தி மக்களுக்கு எட்டிவிட்டது அதனால் இதை எப்படியும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று உணர்ந்து உற்சாகத்தோடு தலைவர் செய்வார் என்பதற்காக.
மேலும் இந்த செய்திகள் வெளியாவது - அதனுடைய படங்கள் வெளியாவது எல்லாம் செய்தியாளர்களுக்கு கிடைக்கும் செய்தியின் தன்மையை பொறுத்தே தவிர மக்கள் நினைப்பது போல் தலைவரை பொறுத்தல்ல - தலைவரும் அப்படிப்பட்டவரல்ல.
கருத்து தெரிவிப்பவர்கள் ஏதோ இந்த தலைவர் மட்டும்தான் குடிநீர் விசயமாக அக்கறை எடுத்திருப்பது போலவும் - முன்னாள் தலைவர்கள் எல்லாம் அக்கறை இல்லாதவர்கள் போலவும் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் - அதற்கு பதில் அளிப்பவர்களோ எதிர்மறையாக கருத்துக்களை பதிகிறார்கள் இது ஆரோக்கியமானது அல்ல.
இதற்கு முன்னாள் இருந்த அத்தனை தலைவரும் குடிநீர் விசயமாக அக்கறை எடுத்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
என்னுடைய அறிவுக்கு எட்டியவரை நமது பாவலர் அப்பா அவர்கள் , விளக்கு மாமா அவர்கள் , சகோதரி நாச்சி தம்பி அவர்கள் மற்றும் சகோதரி வஹிதா அவர்கள் - இவர்கள் எல்லாம் ஆத்தூர் சென்று குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய முயற்சி மேற்கொண்டவர்களே.
அது மட்டுமா 1977 லில் உள்ளாட்சி தேர்தல் நடை பெறாமல் அதிகாரிகளின் கையில் நமது ஊராட்சி மன்றம் இருந்தபோது திருச்செந்தூர் ஒன்றிய மக்கள் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்த ஹாஜி . N.M.E.M.மானாத்தம்பி காக்கா அவர்கள் அன்றைய மந்திரி G.R. எட்மன்ட் அவர்களுடன் ஒரு குழுவாக ஆத்தூர் சென்று நமக்கு கிடைக்க வேண்டிய குடிநீருக்கு நடவடிக்கை எடுக்கத்தான் செய்தார்கள்.
ஆக நமது மன்றத்திற்கு தலைவர் இருந்தாலும் சரி தலைவரல்லாத ஒன்றிய மக்கள் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தாலும் சரி நம் ஊருக்கு தேவையான குடிநீருக்கு முயற்சிகளை எடுத்துதானிருக்கிறார்கள் அதில் எவரும் குறை வைக்க வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
இன்று யார் எதை செய்தாலும் அது செய்தியாக ஊடகங்கள் மூலமாக அதுவும் வலைத் தளங்கள் மூலம் உடனே வெளியாகிவிடுகிறது - இதை யாரும் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் எப்படியோ வெளியாகிவிடும்.
அன்று இந்த அளவு ஊடகங்களின் பணி இல்லை - ஏதாவது திறப்பு விழா அல்லது மோசமான நிகழ்வுகளைத்தான்
பத்திரிக்கைகள் படம் பிடித்து போடும்.
அதனால் நமது பெரியோர்கள் செய்த தியாகங்கள் , தொண்டுகள் வெளிவருவதில்லை - அப்படி வருவதை அவர்களில் பெரும்பாலோர் விரும்புவதுமில்லை.
ஆகையால் அன்று நமது தலைவர்கள் - பெரியவர்கள் செய்த பொது தொண்டுகள், தியாகங்கள் மிக சிறப்பானவைகளே!. அதுபோல் இன்று செய்பவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.
-----------------------------------------------
மக்களே!
எதையும் உதாசீனப்படுத்தாமல் , சீர்தூக்கிப் பார்த்து நல்லக் கருத்துக்களை பகிர்ந்து - ஒற்றுமையாக வாழ வழி வகுப்போமாக ஆமீன்.
31. Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted bymackie noohuthambi (kayalpatnam)[17 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13470
ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்களின் மலரும் நினைவுகள் மெய்சிலிரிக்க வைக்கின்றன. இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தர பெரியவர்கள் செய்த தியாகத்தை நினைதுப்பார்கிறோம் நமதூருக்கு தண்ணீர் மின்சாரம் கொண்டுவர பாடுபட்ட தலைவர்களை நினைதுப்பார்கிறோம். ஆனால் இன்று நடக்கவேண்டியவைகளை நினைத்துப்பார்த்து அதற்கேற்ற வியூகம் அமைத்து தர உங்களைப்போன்றவர்கள் தவறிவிட்டீர்களே.
உண்மையும் நியாயமும் ஊமைகளாக போய்விட்டது ஏன். நகரமன்ற தலைவர் தேர்தலும் துணை தலைவர் தேர்தலும் நடைபெற்று நடந்து முடிந்ததே, இதில் பெரியார்களின் நிலைப்பாடு என்ன? அன்றும் சேவை செய்தவர்கள் இளைஞர்கள்தான். நீங்களும் அப்போது இளைஞர்தான். வித்தியாசம் ஒன்றுதான். சுயநலம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து விட்டதால் ஏற்பட்ட விபரீதங்கள்.
இப்போதும் கூட அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு நகர்மன்றம் உள்ளே வந்துள்ளவர்கள் இருதய சுத்தியுடன் செயலாற்ற தயாராகி விட்டதாக தெரியவில்லை. உங்கள் போன்ற நல்லவர்கள் அல்லாஹ்விடம் துஆ
செய்யுங்கள். வேறு வழி தெரியவில்லை.
பழைய பெருமைகளை பேசுவதால் புதிய பிரச்சினைகள் தீர்ந்து விடாது, புதிய சவால்களை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்லுங்கள். நல்லவர்கள் விஷயம் தெரிந்தவர்கள் ஒதுங்கியிருந்தால், புதியவர்கள் என்ன செய்வார்கள்.
விவேகம் வேகத்தடையாக இருந்து செயல்பட முடியும். ஆனால் அதுவே நிரந்தர தடையாக இருந்தால் ஆட்சி எப்படி நடக்கும வழி காட்டும் கலங்கரை விளக்கங்களே கலங்கி நின்றால் கடல் பயணம் என்னவாகும்?
தோல்வியை கண்டு துவண்டு விடாமல், EGO என்ற உணர்வு யாருக்கும வராமல் மக்களுக்கு சேவை SEYYA வேண்டும் என்ற உணர்வு இருந்தால் சாதனைகள் புரிய முடியும். "I MAY GO YOU MAY GO, BUT EGO MUST GO". நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross